இந்தியாவில் Samsung Galaxy S20 Series, Galaxy Z Flip முன்பதிவுகள் தொடங்கின...!

இந்தியாவில் Samsung Galaxy S20 Series, Galaxy Z Flip முன்பதிவுகள் தொடங்கின...!

Samsung Galaxy S20 சீரிஸின் விலை $999 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.71,300)-யில் இருந்து தொடங்குகிறது

ஹைலைட்ஸ்
  • சாம்சங் எந்த விவரங்களையும் வெளிப்படுத்தாமல் முன்பதிவு செய்து வருகிறது
  • Samsung Galaxy S20 போன்கள் மார்ச்6 முதல் உலக சந்தைகளில் விற்பனைக்கு வரு
  • Samsung Galaxy Z Flip அமெரிக்காவில் $1,380 விலைக் குறியுடன் வருகிறது
விளம்பரம்

இந்த வார தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட Galaxy S20, Galaxy S20+ மற்றும் Galaxy S20 Ultra ஆகியவற்றைக் கொண்ட Samsung Galaxy S20 சீரிஸ் இந்தியாவில் முன் பதிவுகளுக்கு சென்றுள்ளது. அதனுடன், Galaxy Z Flip நாட்டில் முன் பதிவுசெய்தலுக்கும் தயாராக உள்ளது. சமீபத்திய Galaxy-சீரிஸ் ஃபிளாக்ஷிப்களின் அதிகாரப்பூர்வ அறிமுகத்தைத் தொடர்ந்து புதிய வளர்ச்சி வருகிறது. Galaxy S20 சீரிஸ் மற்றும் Galaxy Z Flip ஆகியவை அமெரிக்காவில் முன்கூட்டிய ஆர்டர்களில் உள்ளன. தற்போதுள்ள ஸ்மார்ட்போன் பயனர்கள் புதிய சாம்சங் போன்களில் தங்கள் பழைய போன்களுக்குப் பதிலாக வர்த்தகத்தில் கடன் பெறலாம். Samsung Galaxy S20 மாடல்கள் 4G LTE மற்றும் 5G இணைப்பு விருப்பங்களில் வந்துள்ளன, Galaxy Z Flip ஒற்றை4G LTE விருப்பத்தை கொண்டுள்ளது. Galaxy S20 சீரிஸின் 4G LTE மாடல்கள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கலாம்.

Samsung Galaxy S20, Galaxy S20+ மற்றும் Galaxy S20 Ultra ஆகியவற்றுக்கான ஆர்வமுள்ள வாங்குபவர்களுக்கு அவர்களின் பெயர், மின்னஞ்சல் முகவரி, மொபைல் எண் மற்றும் பின் கோடு விவரங்களை வழங்குமாறு கேட்டு, அதிகாரப்பூர்வ Samsung India வலைத்தளம் முன் பதிவுகளை எடுத்து வருகிறது. Galaxy S20 சீரிஸுக்கு கூடுதலாக, நிறுவனம் Samsung Galaxy Z Flip-ற்கான முன் பதிவுகளை எடுத்து வருகிறது.

இருப்பினும், Galaxy S20 மற்றும் Galaxy Z Flip மாடல்களின் விலை மற்றும் கிடைக்கும் அட்டவணையைப் பற்றி சாம்சங் இதுவரை எந்த விவரங்களையும் வழங்கவில்லை. ஆயினும்கூட, Samsung Galaxy S20 மாடல்களின் அமெரிக்க விலைகள் 5G மாடல்களுக்கு $999 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.71,300), Galaxy Z Flip விலை $1,380 (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 98,400) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் விலை நிர்ணயம் செய்வது அமெரிக்காவில் அறிமுகமாகப்படுவதற்கு ஏற்ப இருக்கும்.

கிடைக்கும் முன்னணியில், Samsung Galaxy S20 மாடல்கள் மார்ச் 6 முதல் உலக சந்தைகளில் விற்பனைக்கு வர உள்ளன, அதே நேரத்தில் Galaxy Z Flip பிப்ரவரி 14 முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தைகளில் குறைந்த அளவுகளில் கிடைக்கும்.

Samsung Galaxy S20, Galaxy S20+ and Galaxy S20 Ultra First Impressions

நாட்டில் Galaxy S20 மற்றும் Galaxy Z Flip மாடல்களின் வருகையைப் பற்றிய தெளிவுக்காக, கேஜெட்ஸ் 360  சாம்சங் இந்தியாவை அணுகியுள்ளது, மேலும் நிறுவனம் பதிலளிக்கும் போது இந்த இடத்தை புதுப்பிக்கும். 


Samsung Galaxy S20 விவரக்குறிப்புகள்:

Samsung Galaxy S20 மிகச் சிறியது. இது 151.7x69.1x7.9mm அளவீட்டையும் 163 கிராம் எடையையும் கொண்டுள்ளது. இது, QHD (1,440x3,200 pixels) தெளிவுதிறன் மற்றும் pixel count of 563ppi உடன் 6.2-inch Infinity-O Dynamic AMOLED 2X டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இது HDR10 சான்றிதழ் மற்றும் 120Hz-ன் உயர் புதுப்பிப்பு வீதத்தை ஆதரிக்கிறது. இந்த போன், உங்கள் பகுதி மற்றும் நீங்கள் எடுக்கும் மாதிரியைப் பொறுத்து, 7nm octa-core பிராசசர் அல்லது Qualcomm Snapdragon 865 SoC மூலம் இயக்கப்படுகிறது

Galaxy S20 LTE பதிப்பிற்காக 8GB அல்லது 12GB (5G வேஎரியண்ட் மட்டும்) LPDDR5 RAM மற்றும் 128GB ஸ்டோரேஜுடன் வருகிறது. இதனை microSD card வழியாக (1TB வரை) விரிவாக்கம் செய்யலாம். Ultrasonic in-display fingerprint சென்சார் மற்றும்  பயோமெட்ரிக் அங்கீகாரத்திற்கான முக அங்கீகாரத்தையும் பெறுவீர்கள். Galaxy S20-க்கு தூசி மற்றும் நீர் எதிர்ப்புக்கு IP68 சான்றளிக்கப்பட்டுள்ளது. இது 25W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது (பெட்டியில் சார்ஜர் சேர்க்கப்பட்டுள்ளது), ஃபாஸ்ட் வயர்லெஸ் சார்ஜிங் 2.0 மற்றும் 4,000mAh பேட்டரிக்கு ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் ஆகியவற்றை ஆதரிக்கிறது.

கேமராக்கள் பெரிய மேம்படுத்தலைப் பெறுகின்றன. Galaxy S20 டிரிபிள் ரியர் கேமராக்களைக் கொண்டுள்ளது, இதில் f/1.8 aperture, Super Speed Dual Pixel AF மற்றும் OIS உடன் 12-மெகாபிக்சல் wide-angle சென்சார், f/2.2 aperture உடன் 12 மெகாபிக்சல் ultra-wide angle லென்ஸ் மற்றும் f/2.0 aperture, PDAF மற்றும் OIS உடன் 64 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா ஆகியவை அடங்கும். சில புதிய கேமரா அம்சங்களில் 3x hybrid optical zoom, 30x வரை Super Resolution Zoom மற்றும் 'Single Take' என்ற புதிய ஷூட்டிங் பயன்முறை ஆகியவை அடங்கும். பல்வேறு கண்ணோட்டங்களுக்காக, அனைத்து சென்சார்களிடமிருந்தும் ஒரு புகைப்படத்துடன், ஒரு குறுகிய வீடியோவைப் பிடிக்கிறது. செல்ஃபி கேமரா f/2.2 aperture உடன் 10 மெகாபிக்சல் சென்சாரைக் கொண்டுள்ளது.

பிற விவரக்குறிப்புகளில், Android 10-ஐ அடிப்படையாக கொண்ட One UI 2.1, dual-band Wi-Fi 6, Bluetooth 5, NFC, Dolby Atmos sound உடன் stereo speakers ஆகியவை அடங்கும். இது பிராந்தியத்தைப் பொறுத்து ஒற்றை அல்லது இரட்டை சிம் (hybrid) மாடல்களிலும் கிடைக்கும்.


Samsung Galaxy S20+ விவரக்குறிப்புகள்:

இந்த Galaxy S20+, Galaxy S20 உடன் மிகவும் இணைந்திருக்கிறது. ஆனால், இது அளவு, பேட்டரி திறன் ஆகியவற்றில் வேறுபடுகிறது. மேலும், கூடுதல் பின்புற கேமராவையும் பெறுவீர்கள். Galaxy S20+, 161.9x73.7x7.8mm அளவீட்டையும் 186 கிராம் எடையையும் கொண்டுள்ளது (5G வேரியண்ட் 188 கிராம் ஆகும்). இது சற்று பெரிய, 4,500mAh பேட்டரியையும் கொண்டுள்ளது. LTE பதிப்பில் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கிடைக்கிறது, 5G வேரியண்ட்டில் 12 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி, 256 ஜிபி மற்றும் 512 ஜிபி ஸ்டோரேஜைப் பெறலாம். பின்புற depth கேமராவைச் சேர்ப்பதைத் தவிர, முன் மற்றும் பின்புற கேமரா உள்ளமைவுகளும் அப்படியே இருக்கின்றன.

pixel count of 525ppi மற்றும் Infinity-O hole-punch உடன் 6.7-inch QHD (1,440x3,200 pixels) Dynamic AMOLED 2X டிஸ்பிளேவை நீங்கள் பெறலாம். 


Samsung Galaxy S20 Ultra விவரக்குறிப்புகள்:

இறுதியாக, இந்த சீரிஸின் மிகப்பெரிய போனான Galaxy S20 Ultra-வுக்கு வருகிறோம். இது pixel count of 511ppi உடன் 6.9 அங்குல QHD டைனமிக் AMOLED 2X டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. Galaxy S20 Ultra, 12GB அல்லது 16GB LPDDR5 RAM உடன் வருகிறது, அதே நேரத்தில் LTE மற்றும் 5G வேரியண்டுகளுக்கு 128 ஜிபி, 256 ஜிபி மற்றும் 512 ஜிபி வரை ஸ்டோரேஜ் உள்ளது. பேட்டரி திறன் 5,000mAh வரை பம்ப் செய்யப்பட்டுள்ளது. Galaxy S20 Ultra ஆப்ஷ்னல் அடாப்டர் மூலம் 45W ஃபாஸ்ட் சார்ஜிங்கையும் ஆதரிக்கிறது.

Galaxy S20 Ultra, 166.9x76x8.8mm அளவீட்டையும் 220 கிராம் எடையையும் கொண்டுள்ளது (5G வேரியண்ட் 222 கிராம் ஆகும்). சில கேமரா சென்சார்களும் மற்ற இரண்டு மாடல்களை விட மேம்படுத்தப்பட்டுள்ளன. wide-angle மற்றும் depth கேமராக்களைத் தவிர, f/1.8 aperture, OIS, PDAF உடன் 108-மெகாபிக்சல் முதன்மை கேமரா சென்சார் மற்றும் f/3.5 aperture, PDAF, OIS உடன் 48-மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமராவை நீங்கள் பெறலாம். Galaxy S20 Ultra புதிய periscope-style telephoto லென்சையும் கொண்டுள்ளது. இது 10x hybrid optical zoom மற்றும் 100x வரை அதிகபட்ச ‘Super Resolution Zoom' ஆகியவற்றை அடைய அனுமதிக்கிறது. முன் கேமரா f/2.2 aperture உடன் 40-மெகாபிக்சல் சென்சாரைக் கொண்டுள்ளது.


Samsung Galaxy Z Flip விவரக்குறிப்புகள்:

Samsung Galaxy Z Flip, ஒரு eSIM மற்றும் ஒரு Nano-SIM கார்டு ஸ்லாட் கொண்ட டூயல்-சிம் ஸ்மார்ட்போன் ஆகும். இது Android 10-ல் இயங்குகிறது. மடிக்கக்கூடிய டிஸ்பிளே 6.7-inch full-HD (1080x2636 pixels, 21.9:9, 425ppi) Dynamic AMOLED பேனல் – நாம் குறிப்பிட்டபடி Infinity Flex டிஸ்பிளே என்று அழைக்கப்படுகிறது. வெளிப்புறத்தில், 112x300 pixels தெளிவுதிறன் மற்றும் pixel density of 303ppi உடன் 1.1-inch Super AMOLED டிஸ்பிளே உள்ளது. இது 8GB RAM உடன் இணைக்கப்பட்டு, பெயரிடப்படாத 7nm octa-core SoC-யால் இயக்கப்படுகிறது.

Galaxy Z Flip-ன் டூயல் ரியர் கேமரா அமைப்பில், (f/1.8, 1.4-micron pixels, 78-degree FoV) உடன் 12-மெகாபிக்சல் wide-angle கேமரா மற்றும் (f/2.2, 1.12-micron pixels, 123-degree FoV, OIS) உடன் 12-மெகாபிக்சல் ultra-wide angle கேமரா ஆகியவை அடங்கும். Samsung Galaxy Z Flip-இன் முன்புறத்தில் (f/2.4, 1.22-micron pixels, 80-degree FoV) உடன் 10-மெகாபிக்சல் கேமரா உள்ளது.

Samsung Galaxy Flip-ல் 256GB இன்பில்ட் ஸ்டோரேஜ் உள்ளது. இதனை microSD card வழியாக விரிவாக்கம் செய்ய முடியாது. இணைப்பு விருப்பங்களில் 4G LTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, USB Type-C, NFC, MST மற்றும் GPS (A-GPS) ஆகியவை அடங்கும். ஆன்போர்டு சென்சார்களில் accelerometer, ambient light sensor, barometer, fingerprint sensor (on the side), gyroscope, magnetometer மற்றும் proximity சென்சார் ஆகியவை அடங்கும்.

Samsung Galaxy Z Flip மடிக்கும் போது 87.4x73.6x17.33mm மற்றும் திறக்கும் போது 167.3x73.6x7.2mm அளவீட்டைக் கொண்டுள்ளது. இதன் எடை 183 கிராம் ஆகும். ஸ்மார்ட்போனில் ஒற்றை, மோனோ ஸ்பீக்கர் உள்ளது. இது ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் 3,300mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. 

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Premium construction quality
  • Excellent display
  • Lean, feature-rich UI
  • Very good rear cameras
  • Great app and gaming performance
  • Day-long battery life
  • Bad
  • Heats up under load
  • Bland design
Display 6.70-inch
Processor Samsung Exynos 990
Front Camera 10-megapixel
Rear Camera 12-megapixel + 64-megapixel + 12-megapixel
RAM 8GB
Storage 128GB
Battery Capacity 4500mAh
OS Android 10
Resolution 1440x3200 pixels
  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Top-notch build quality
  • Gorgeous display
  • Excellent cameras, zoom capability
  • Good battery life
  • Clean UI
  • Bad
  • Big and unwieldy
  • Extremely expensive
Display 6.90-inch
Processor Samsung Exynos 990
Front Camera 40-megapixel
Rear Camera 108-megapixel + 48-megapixel + 12-megapixel + Depth
RAM 12GB
Storage 128GB
Battery Capacity 5000mAh
OS Android 10
Resolution 1440x3200 pixels
Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »