Samsung Galaxy S20 சீரிஸ், பிப்ரவரி 11-ஆம் தேதி கேலக்ஸி நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது விரைவில் முன்கூட்டிய ஆர்டர்களுக்கு செல்ல உள்ளது.
Samsung Galaxy S20 சீரிஸின் முன்பதிவு பக்கம், விருப்பமான கேரியரைக் கேட்கிறது
சாம்சங் கேலக்ஸி நிகழ்வு பிப்ரவரி 11-ஆம் தேதிக்கு நடைபெற உள்ளது. மேலும், நிறுவனம் Galaxy S20 சீரிஸையும், Galaxy Z Flip எனப்படும் இரண்டாவது மடிக்கக்கூடிய போனையும் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த கேலக்ஸி சாதனத்திற்கான முன்பதிவுகள் இப்போது நடைபெற்று வருகின்றன. மேலும், நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ தளத்தில் ஆர்முள்ள பதிவுகளை எடுத்து வருகிறது. இவை முன்கூட்டிய ஆர்டர்கள் அல்ல. ஆனால், கேலக்ஸி போன் எப்போது கிடைக்கும் என்பதற்கான அறிவிப்புகளுக்கான பதிவுகள் ஆகும். இந்த முன்பதிவு பக்கம் வதந்தியான Galaxy S20 சீரிஸின் அனுப்பப்படும் தேதியை வெளிப்படுத்துகிறது.
சாம்சங் அமெரிக்க தளத்தில் (Samsung US site), அடுத்த கேலக்ஸி சாதனம் மார்ச் 6-ஆம் தேதி வழங்கப்படும் என்பதை முன்பதிவு பக்கம் வெளிப்படுத்துகிறது. இதன் பொருள் Galaxy S20 சீரிஸின் வெளியீட்டு தேதி மார்ச் 6 ஆகும். மேலும், அறிமுகப்படுத்தப்பட்ட உடனேயே, பிப்ரவரி 11-ஆம் தேதி (on February 11) முன்கூட்டிய ஆர்டர்கள் தொடங்கப்பட வேண்டும். முன்பதிவு பக்கம் தனிப்பட்ட விவரங்கள், விருப்பமான கேரியர் ஆகியவற்றைக் கேட்கிறது. பின்னர் மார்ச் 6-ஆம் தேதியைக் காண்பிக்கும் உறுதிப்படுத்தல் பக்கத்தைக் காட்டுகிறது. அதில், “மார்ச் 6-ஆம் தேதி உங்கள் கேலக்ஸி முன்கூட்டிய ஆர்டரை முடிக்க மின்னஞ்சலைத் தேடுங்கள்.” இந்த செய்தி அமெரிக்க இணையதளத்தில் மட்டுமே காண்பிக்கப்படுகிறது. மேலும், இந்திய தளம் டெலிவரி தேதியைக் குறிப்பிடவில்லை. டெலிவரி தேதி வெவ்வேறு பிராந்தியங்களில் வேறுபட்டிருக்கலாம். இந்த விற்பனை தேதியை XDA's Max Weinbach-ல் முன்னதாகவே தோன்றியுள்ளது.
Samsung Galaxy S சீரிஸ் ஃபிளாக்ஷிப்பின் மூன்று வெரியண்டுகள் இந்த நேரத்தில் நிறுவனம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது - Samsung Galaxy S20, Samsung Galaxy S20+ மற்றும் Samsung Galaxy S20 Ultra. இந்த ப்ரீமியம் வேரியண்வ், குவாட் ரியர் கேமராக்கள், 100x டிஜிட்டல் ஜூம் மற்றும் 5,000mAh பேட்டரி ஆகியவற்றைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Galaxy S20 சீரிஸின் விலை EUR 899 (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 70,900)-ல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் மிகவும் விலையுயர்ந்த Galaxy S20 Ultra-வின் விலை EUR 1,549 (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 1,22,000)-யாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Vivo S50 and Vivo S50 Pro Mini Spotted on China Telecom Website Ahead of December 15 Launch
Tomb Raider Catalyst, Divinity, Star Wars Fate of the Old Republic: Everything Announced at The Game Awards