Samsung Galaxy S10 Lite-ன் விவரங்கள் லீக்கானது!

Samsung Galaxy S10 Lite அடுத்த சில நாட்களில் ஐரோப்பாவில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

Samsung Galaxy S10 Lite-ன் விவரங்கள் லீக்கானது!

Photo Credit: OnLeaks / 91Mobiles

Samsung Galaxy S10 Lite, hole-punch வடிவமைப்புடன் வருவதாக கூறப்படுகிறது

ஹைலைட்ஸ்
  • Samsung Galaxy S10 Lite, 32-megapixel செல்பி கேமராவை பேக் செய்யும்
  • இது 45W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4,500mAh பேட்டரியைக் கொண்டிருக்கும்
  • Samsung Galaxy S10 Lite, 6.7-inch full-HD+ டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும்
விளம்பரம்

Samsung Galaxy S11 கசிவுகள் எல்லா திசைகளிலிருந்தும் வருகின்றன. ஆனால், அனைத்து வதந்திகளுக்கும் யூகங்களுக்கும் இடையில், ஒரு புதிய Galaxy S10 வேரியண்ட் கசிவு அரங்கின் சுற்றுகளை உருவாக்குகிறது. பல ரெண்டர்களில் காணப்பட்ட பின்னர், Galaxy S10 Lite-ன் விவரக்குறிப்புகள் இப்போது ஆன்லைனில் வெளிவந்துள்ளன. போனின் அனைத்து முக்கிய விவரக்குறிப்புகளையும் பற்றி இங்கே பேசுகிறோம். Galaxy S10 Lite, Snapdragon 855 SoC-யில் இருந்து சக்தியை ஈர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது, மேலும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் எடுக்கும்போது, கை அசைவுகளுக்கு ஈடுசெய்ய புதிய 'TOIS' தொழில்நுட்பத்தால் ஆதரிக்கப்படும் 48-மெகாபிக்சல் ரியர் கேமரா இடம்பெறும்.

WinFuture-ன் புதிய அறிக்கையின்படி, Galaxy S10 Lite ஒரு மையமாக நிலைநிறுத்தப்பட்ட hole-punch-ஐக் கொண்டிருக்கும். இது கசிந்த ரெண்டர்களில் மற்றும் Galaxy Note 10 duo-வில் நாம் கண்டதைப் போன்றது. இண்டர்னல் விவரக்குறிப்புகளைப் பொறுத்தவரை, Galaxy S10 Lite, 8 ஜிபி ரேம் உடன் Qualcomm Snapdragon 855 SoC-யில் இயங்கும். குறிப்பிடத்தக்க வகையில், Galaxy S10 Lite-ன் Snapdragon 855 வேரியண்ட்டை ஐரோப்பா உள்ளிட்ட அனைத்து பிராந்தியங்களிலும் சாம்சங் வழங்குவதாகக் கூறப்படுகிறது. ஆனால், பாரம்பரியமாக ஐரோப்பிய நாடுகளில் விற்கப்படும் Exynos-powered வேரியண்டுகள் அல்ல.

Galaxy S10 Lite, 128 ஜிபி ஆன்போர்டு ஸ்டோரேஜுடன் பேக் செய்யும் என்று கூறப்படுகிறது. இது மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக (1 டிபி வரை) மேலும் விரிவாக்கப்படலாம். இந்த போன் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4,500mAh பேட்டரியை பேக் செய்யும் என்று கூறப்படுகிறது. இது வெறும் 8.1mm மெல்லியதாக இருக்கும் என்றும், கசிவுகள் உண்மையாக இருந்தால், இந்த போன் ஒரு பெரிய செவ்வக கேமரா தொகுதியை பின்புறத்தில் வட்டமான மூலைகளுடன் காண்பிக்கும். வரவிருக்கும் Galaxy S10 வேரியண்ட், 19.5:9 aspect ratio உடன் 6.7-inch full-HD+ (1080 x 2400 pixels) Super AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.

கேமராக்களைப் பற்றி பேசுகையில், Galaxy S10 Lite, f/2.0 aperture மற்றும் OIS உடன் 48 மெகாபிக்சல் பிரதான கேமராவை பேக் செய்யும் என்று கூறப்படுகிறது. பிந்தையது "tOIS" (tilt-OIS) என சந்தைப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது. மேலும், லென்ஸ் அதன் நிலையை, கூடுதல் சில டிகிரிகளால் மாற்ற அனுமதிப்பதன் மூலம் இது அடையப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த ஏற்பாடு மென்மையான வீடியோக்களையும் மங்கலான புகைப்படங்களையும் வழங்குவதற்காக கை அசைவுகளுக்கு மிகவும் திறம்பட ஈடுசெய்யும் என்று கூறப்படுகிறது. சென்சார் பெரும்பாலும் சாம்சங்கின் இரண்டாம் தலைமுறை 48 மெகாபிக்சல் கேமரா சென்சார், in-house ISOCELL Bright GM2 ஆகும்.

இதனுடன், f/2.2 aperture உடன் 12-megapixel ultra-wide angle lens மற்றும் f/2.4 aperture உடன் 5-megapixel macro கேமரா ஆகியவை இனையும். முன்புறத்தில், f/2.2 aperture உடன் 32-megapixel செல்ஃபி கேமராவைக் கொண்டது. Galaxy S10 Lite, One UI 2.0 உடன் Android 10 இயக்க உதவுகிறது. இந்த போன் அடுத்த சில நாட்களில் அறிமுகமாகும் என்றும், இதன் விலை EUR 679.99 (சுமார் ரூ. 53,700) என்றும் கூறப்படுகிறது. இது கருப்பு, வெள்ளை மற்றும் நீல வண்ண விருப்பங்களில் வழங்கப்படும். ஆனால், ஒரு குறிப்பிட்ட வெளியீட்டு தேதி அல்லது பிராந்திய வாரியாக கிடைப்பதில் எந்த வார்த்தையும் இல்லை.

Samsung Galaxy S10 Lite Briefly Sighted on Company Website, Launch Expected Soon: Report

Samsung Galaxy S10 Lite, Galaxy Note 10 Lite Renders Leak Yet Again, Showing Their Central Hole-Punch Design

Samsung Galaxy S10 Lite Spotted on US FCC With 45W Charging, Tipped to Launch in India Next Month

Samsung Galaxy S10 Lite With Snapdragon 855 SoC Said to Be in the Works

Samsung Galaxy S10 Lite Spotted on US FCC With 45W Charging, Tipped to Launch in India Next Month

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ces_story_below_text

தொடர்புடைய செய்திகள்

#சமீபத்திய செய்திகள்
  1. ஃபோல்டபிள் போன் சந்தையில் போர் ஆரம்பம்! ஆப்பிள் ஐபோன் போல்டுக்கு போட்டியாக ஒப்போவின் 'வைடு' டிஸ்ப்ளே போன்
  2. ஒன்பிளஸ் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்! 40 ஆயிரத்துக்கும் குறைவான விலையில் OnePlus 13R - பிளிப்கார்ட்டின் மெகா டீல்
  3. சாம்சங்கின் புது பிளான்! மிரட்டலான சிறப்பம்சங்களுடன் வரும் Galaxy M17e - எதோட ரீபிராண்ட் தெரியுமா?
  4. ஒரு தடவை சார்ஜ் போட்டா 3 நாளைக்கு கவலை இல்ல! ஒன்பிளஸின் மெகா லான்ச் - Turbo 6 & 6V அதிரடி விலை மற்றும் விவரம்
  5. விவோவின் மெகா பிளான்! Vivo X200T-ல் நான்கு 50MP கேமராக்கள்? ஆப்பிள், சாம்சங்கிற்கு டஃப் கொடுக்க வரும் புதிய மான்ஸ்டர்
  6. கேமிங் கிங் ரெடி! ஜனவரி 15-ல் லான்ச் ஆகும் iQOO Z11 Turbo - மிரட்டலான சிறப்பம்சங்கள் கசிந்தது
  7. கேமராவுக்கே சவால் விடும் 200MP லென்ஸ்! புது வரவு Oppo Reno 15 சீரிஸ் - விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ
  8. இன்பினிக்ஸின் பலமான ஆட்டம் ஆரம்பம்! 6500mAh பேட்டரி மற்றும் புது XOS 16 உடன் வரும் Infinix Note Edge
  9. வெறும் ரூ. 15,999-க்கு ஒரு கார்வ்டு டிஸ்ப்ளே போனா? Poco M8 5G அதிரடி லான்ச்! சலுகை விவரங்கள் உள்ளே
  10. ஸ்லிம் போன்-ல இவ்வளவு பவரா? ஜனவரி 20-ல் வரும் Moto X70 Air Pro! Snapdragon 8 Gen 5 மற்றும் 50MP பெரிஸ்கோப் கேமரா
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »