சாம்சங் கேலக்ஸி M56 5G ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் தளத்தில் மிகப்பெரிய விலைக்குறைப்பைப் பெற்றுள்ளது
Photo Credit: Samsung
Samsung Galaxy M56 இப்போது ரூ.21,204க்கு கிடைக்கிறது.
2025-ஆம் ஆண்டின் இறுதியில் சாம்சங் நிறுவனம் தனது பட்ஜெட் மற்றும் நடுத்தர ரக போன்கள் மீது அதிரடி ஆஃபர்களை வாரி வழங்கி வருகிறது. அந்த வகையில், கடந்த ஏப்ரல் மாதம் அறிமுகமான Samsung Galaxy M56 5G மொபைலின் விலை தற்போது பிளிப்கார்ட் தளத்தில் கிடுகிடுவென குறைந்துள்ளது. இந்த போன் லான்ச் ஆன போது 8GB RAM மற்றும் 128GB ஸ்டோரேஜ் கொண்ட மாடலின் விலை ₹27,999 ஆக இருந்தது. ஆனால், தற்போது பிளிப்கார்ட்டில் இது ₹21,208-க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. அதாவது எந்தவித நிபந்தனையும் இன்றி நேரடியாக ₹6,791 தள்ளுபடி கிடைக்கிறது. இதுமட்டுமல்லாமல், உங்களிடம் SBI அல்லது Axis வங்கி கிரெடிட் கார்டு இருந்தால், கூடுதலாக ₹4,000 வரை தள்ளுபடி பெற்று, இந்த போனை நீங்கள் சுமார் ₹17,000 முதல் ₹18,000 விலையிலேயே வாங்கிட முடியும்.
இந்த போனில் அப்படி என்ன ஸ்பெஷல்? இது சாம்சங் M-சீரிஸிலேயே மிகவும் மெலிதான (7.2mm) மற்றும் உறுதியான போன் ஆகும். இதன் முன்னும் பின்னும் Corning Gorilla Glass Victus+ பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. 6.7-இன்ச் Full HD+ Super AMOLED+ டிஸ்ப்ளே மற்றும் 120Hz ரிப்ரெஷ் ரேட் இருப்பதால், வீடியோ பார்க்கும் அனுபவம் தியேட்டர் போல இருக்கும்.
இதில் சாம்சங்கின் சொந்த Exynos 1480 (4nm) சிப்செட் மற்றும் AMD Xclipse 530 GPU உள்ளது. கேமிங் மற்றும் அன்றாட வேலைகளுக்கு இது மிகச்சிறப்பாக ஈடுகொடுக்கும். கேமராவில் 50MP மெயின் கேமரா (OIS வசதியுடன்), 8MP அல்ட்ராவைடு மற்றும் 2MP மேக்ரோ லென்ஸ் என ட்ரிபிள் கேமரா செட்டப் உள்ளது. செல்ஃபிக்காக 12MP கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.
5,000mAh பேட்டரி மற்றும் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வரும் இந்த போனுக்கு 6 வருடங்களுக்கு ஓஎஸ் அப்டேட்கள் வழங்கப்படும் என சாம்சங் உறுதி அளித்துள்ளது. அதாவது 2031-ஆம் ஆண்டு வரை உங்கள் போன் லேட்டஸ்ட் சாப்ட்வேரில் இயங்கும். பழைய போனை எக்ஸ்சேஞ்ச் செய்ய நினைப்பவர்களுக்கு ரூ.17,250 வரை தள்ளுபடி கிடைக்க வாய்ப்புள்ளது.கேமராவில் 50MP மெயின் கேமரா (OIS வசதியுடன்), 8MP அல்ட்ராவைடு மற்றும் 2MP மேக்ரோ லென்ஸ் என ட்ரிபிள் கேமரா செட்டப் உள்ளது. செல்ஃபிக்காக 12MP கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Paramount's New Offer for Warner Bros. Is Not Sufficient, Major Investor Says
HMD Pulse 2 Specifications Leaked; Could Launch With 6.7-Inch Display, 5,000mAh Battery