Samsung Galaxy M55s செப்டம்பர் 23ல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது
Photo Credit: Samsung
Samsung Galaxy M55s 5G comes in Coral Green and Thunder Black shades
நீங்கள் பட்ஜெட் விலையில் புதிதாக ஸ்மார்ட்போன், வாட்ச், ஸ்பீக்கர் உட்பட எது வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றாலும் இந்த பதிவு உங்களுக்கானது மக்களே. நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குள் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? எந்த போன் சிறந்த பெர்பார்மென்ஸை கொண்டுள்ளது? எந்த போனில் கேமரா அம்சம் மிரட்டலாக இருக்கிறது? எந்த போனில் டிஸ்பிளே சூப்பராக அமைந்துள்ளது? எது பட்ஜெட்டில் சூப்பர் போன்? என்பது போன்ற விபரங்களை நாங்கள் உங்களுக்கு விளாவாரியாக சொல்லப்போகிறோம். இப்போ நாம் பார்க்க இருப்பது Samsung Galaxy M55s 5G செல்போன் பற்றி தான்.
Samsung Galaxy M55s செப்டம்பர் 23ல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் 6.7 இன்ச் டிஸ்ப்ளே, 50 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் அதே தெளிவுத்திறனுடன் செல்ஃபி கேமரா உள்ளது. 256GB வரையிலான மெமரி, Snapdragon 7 Gen 1 சிப்செட் இருக்கும். இந்தியாவில் Samsung Galaxy M55s 5G ஆரம்ப விலை 8GB ரேம் 128GB மெமரி மாடல் ரூ.19,999 என்கிற விலையில் ஆரம்பம் ஆகிறது. 8GBரேம் 256GB மெமரி மாடல் ரூ. 22,999 விலைக்கு கிடைக்கிறது. அமேசான், சாம்சங் இந்தியா இணையதளம் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆஃப்லைன் சில்லறை விற்பனைக் கடைகளில் செப்டம்பர் 26 முதல் விற்பனைக்கு வருகிறது. 2,000 ரூபாய் வரையில் வங்கி தள்ளுபடி கிடைக்கிறது. கோரல் கிரீன் மற்றும் தண்டர் பிளாக் வண்ணங்களில் விற்பனைக்கு வந்துள்ளது.
Samsung Galaxy M55s செல்போனில் 6.7 இன்ச் டிஸ்ப்ளேஉள்ளது. 50 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் அதே தெளிவுத்திறனுடன் செல்ஃபி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. 256GB வரையிலான மெமரி, Snapdragon 7 Gen 1 சிப்செட் இருக்கும். சாம்சங் நிறுவனத்தின் அடுத்த மிட்ரேஞ்ச் ஸ்மார்ட்போன் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த போனின் தடிமன் 7.8 மிமீ என்று சாம்சங் கூறுகிறது. இது ஏப்ரல் மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட கேலக்ஸி எம்55 மாடலைப் போன்று இருக்கும். Adreno 644 GPU இருக்கிறது. சோதனையின் போது சிங்கிள்-கோரில் 1003 புள்ளிகளையும், மல்டி-கோர் சோதனைகளில் 2309 புள்ளிகளையும் பெற்றுள்ளதாக முடிவுகள் காட்டுகிறது. ஆண்ட்ராய்டு 14 OS அடிப்படையாக கொண்டு இயங்கும்.
8 மெகாபிக்சல் அல்ட்ராவைட் கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமராவுடன் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) உடன் 50 மெகாபிக்சல் பின்புற கேமரா இடம்பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது சாம்சங்கின் 'நைட்டோகிராஃபி' குறைந்த ஒளி கேமரா அம்சங்கள் மற்றும் நோ ஷேக் கேம் பயன்முறை ஆகிய இரண்டையும் சப்போர்ட் செய்கிறது.
Samsung Galaxy M55s ஆனது 50 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவையும் கொண்டுள்ளது. பயனர்கள் முன் மற்றும் பின்பக்க கேமராக்களைப் பயன்படுத்தி ஒரே நேரத்தில் படங்களையும் வீடியோவையும் எடுக்க முடியும், 5000mAh பெரிய பேட்டரி வழங்கப்படலாம். விரைவாக சார்ஜ் செய்ய, 45W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்கலாம் என கூறப்படுகிறது. 5,000 எம்ஏஎச் பேட்டரியை கொண்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Physicists Reveal a New Type of Twisting Solid That Behaves Almost Like a Living Material
James Webb Telescope Finds Early Universe Galaxies Were More Chaotic Than We Thought
Next-Gen Xbox Will Be 'Very Premium, Very High-End Curated Experience', Says Xbox President Sarah Bond