சாம்சங் கேலக்ஸி M51 ஸ்மார்ட்போனில் 6.67 இன்ச் அளவிலான பெரிய அமோலேட் டிஸ்பிளே, ஆக்டா கோர் குவால்காம் ஸ்நாப்டிராகன் 730 SoC பிராசசர் இருக்கலாம்.
Photo Credit: OnLeaks/ Pigtou
சாம்சங் கேலக்ஸி M51 குறித்த விவரங்கள் இணையத்தில் கசிந்துள்ளன
இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி M51 ஸ்மார்ட்போன் எப்போது அறிமுகம் செய்யப்படும், அதிலுள்ள சிறப்பம்சங்கள் குறித்த விவரங்கள் கசிந்துள்ளன.
சாம்சங் தரப்பில் புதிதாக கேலக்ஸி M51 என்ற ஸ்மார்ட்போன் உருவாகி வருகிறது. இந்த ஸ்மார்ட்போனைக் குறித்து சில விவரங்கள் இணையத்தில் கசிந்துள்ளன. அதன்படி, செம்படம்பர் மாதத்தில் கேலக்ஸி M51 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்றும், இதில் 7,000mAh சக்தி கொண்ட மிகப்பெரிய பேட்டரி இருக்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும், பின்பக்கத்தில் நான்கு கேமராக்கள் (குவாட் கேமரா) இருக்கலாம் என்றும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வந்துள்ளன.
இதுதொடர்பாக இந்தோ ஏசியன் நியூஸ் சர்வீஸ் (IANS) தரப்பில் செய்திகள் வந்துள்ளன. அதன்படி, சாம்சங் கேலக்ஸி M51 உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஸ்மார்ட்போன் ஆகும். செப்டம்பர் இரண்டாவது வாரத்தில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்றும், இதன் விலை 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரையில் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
முன்னதாக கேலக்ஸி M51 ஸ்மார்ட்போன் கடந்த ஜூலை மாதம் அறிமுகம் செய்யப்படுவதாக கூறப்பட்டது. ஆனால், உற்பத்தியில் ஏற்பட்ட சில சிக்கல்கள் காரணமாக, செப்டம்பருக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதன் மாடல் நம்பர் SM-M515F என்றும், M சீரிஸ் வரிசையில் இதுவே புத்தம் புதிய ஸ்மார்ட்போன் என்றும் கூறப்படுகிறது.
சாம்சங் கேலக்ஸி M51 ஸ்மார்ட்போனில் 6.67 இன்ச் அளவிலான பெரிய அமோலேட் டிஸ்பிளே, ஆக்டா கோர் குவால்காம் ஸ்நாப்டிராகன் 730 SoC பிராசசர், 8ஜிபி ரேம், குவாட் கேமரா அமைப்பு இருக்கலாம். கேமராவைப் பொறுத்தவரையில் 64 மெகா பிக்சலுடன் கூடிய பிரைமரி கேமரா, 12 மெகா பிக்சலுடன் கூடிய அலட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ் கேமரா இருக்கலாம்.
மேலும்,7000mAh சக்தி கொண்ட பேட்டரி, அதற்கு ஆதரவு அளிக்கும் வகையில் 25W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, வைஃபை, ப்ளூடூத், ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் உள்ளிட்ட அம்சங்கள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Why are smartphone prices rising in India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts, Google Podcasts, or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
The Offering Is Streaming Now: Know Where to Watch the Supernatural Horror Online
Lazarus Is Now Streaming on Prime Video: Know All About Harlan Coben's Horror Thriller Series