மிகவும் எதிர்பார்க்கப்படும் சாம்சங் கேலக்ஸி M31 விற்பனை எப்போது..?- முழு விவரங்கள்!!

விளம்பரம்
Written by Tasneem Akolawala மேம்படுத்தப்பட்டது: 18 ஜூலை 2020 16:00 IST
ஹைலைட்ஸ்
  • அமேசானில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
  • விலை ரூ.30,000 அல்லது அதற்குள்ளாக இருக்கலாம்.
  • எக்ஸினோஸ் 9611 SoC பிராசசரில் இந்த ஸ்மார்ட்போன் உருவாக்கப்பட்டுள்ளது

இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டப்பிறகு ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் தயாரிக்கும் புதிய ஸ்மார்ட்போன்களின் அறிமுக தேதி தாமதமாகி வருகிறது.

Photo Credit: 91 Mobiles

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி M31 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் தேதி, அதிலுள்ள சிறப்பம்சங்கள் குறித்த விவரங்கள் கசிந்துள்ளன. இதுபற்றிய விவரங்களை இங்குக் காணலாம்.

ரியல்மி, ரெட்மிக்குப் போட்டியாக சாம்சங் நிறுவனமும் குறைந்த விலையில் அதிக சிறப்பம்சங்கள் நிறைந்த பட்ஜெட் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், சாம்சங் கேலக்ஸி M31 ஸ்மார்ட்போன் இம்மாத இறுதியில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இந்த நிலையில், ஆகஸ்ட் 6 ஆம் தேதி சாம்சங் கேலக்ஸி M31 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரலாம் என்ற புதிய தகவல்கள் வந்துள்ளன. மேலும்,  இந்த ஸ்மார்ட்போன் எப்படி இருக்கும், அதிலுள்ள சிறப்பம்சங்கள் குறித்தும் ஆன்லைனில் விபரங்கள் லீக் ஆகியுள்ளது. 

அதன்படி, சாம்சங்  கேலக்ஸி M31 ஸ்மார்ட்போனில் ஆங்கில எழுத்து L வடிவத்தில் பின்புற கேமரா உள்ளது. அதாவது நேர்கோடாக மூன்று கேமராக்களும், கடைசி கேமராவின் வலது புறத்தில் மற்றொரு கேமராவும் உள்ளது. ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் பஞ்ச் ஹோல் டிஸ்பிளே உள்ளது. இதில் 128ஜிபி ஸ்டோரேஜ், அமோலெட் திரை இருக்கலாம்.

இம்மாத இறுதியில் அறிமுகமாகும் கேலக்ஸி M31, அடுத்த மாதம் 6 ஆம் தேதி விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சாம்சங்கின் அதிகாரப்பூர்வ ஆன்லைன் ஷாப்பிங் இணையதளத்திலும், அமேசான் தளத்திலும் விற்பனைக்கு வருகிறது. இதன் விலை ரூ.20,000 அல்லது அதற்குள்ளாக இருக்கும் என்று கூறப்படுகிறது.  இந்த ஸ்மார்ட்போன் போகோ M2 ப்ரா, ரெட்மி நோட் 9 ப்ரோ, ரியல்மி 6 ப்ரோ ஆகியவற்றுக்குப் போட்டியாக இருக்கும்.

இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டப்பிறகு ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் தயாரிக்கும் புதிய ஸ்மார்ட்போன்களின் அறிமுக தேதி தாமதமாகி வருகிறது. மேலும், ஜிஎஸ்டி வரி உயர்வால் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட ஸ்மார்ட்போன்களின் விலையும் கணிசமாக உயர்ந்து விட்டது. இதனால் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் மீதான எதிர்பார்ப்பு வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.


Is Mi 10 an expensive OnePlus 8 or a budget budget S20 Ultra? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. டென்சர் ஜி6 சிப் வதந்திபோல் 2nm அல்ல, TSMC-ன் 3nm முறையில் உருவானது என கூகுள் உறுதிப்படுத்தியதாக தகவல்
  2. iQOO Neo 11 Ultra புதிய'Monster'சூப்பர் கோர் இன்ஜின், கஸ்டம் MediaTek சிப்செட்டுடன் வெளியாகும் என உறுதியானது
  3. மோட்டோ ஜி மேக்ஸ் இந்தியாவில் ஸ்னாப்டிராகன் 6s Gen 4 சிப்,7,000mAh பேட்டரியுடன் அறிமுகம்:விலை, சிறப்பம்சங்கள்
  4. ஸ்மார்ட் கண்ணாடி பதிவு தனியுரிமை சிக்கல்களை ஆப்பிள் எவ்வாறு கையாளும் என அதன் காப்புரிமை காட்டுகிறது
  5. பின்புறத்தில் இரண்டாம் நிலைத் திரையுடன் போவா 8 புரோ 5ஜி இந்தியாவில் அறிமுகமாகும் தேதி வெளியானது!
  6. 144Hz டிஸ்ப்ளே, 7,000mAh பேட்டரியுடன் ரியல்மி 16x 5G இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: விலை, சலுகைகள்
  7. இரட்டை-சிப் & ஹெல்த் கார்டியன் அம்சங்களுடன் கூகிள் பிக்சல் வாட்ச் 5 இந்தியாவில் அறிமுகம்: விலை, விவரங்கள்
  8. இந்தியாவில் ஆப்பிள் ஏர்டேக்கிற்கு போட்டியாக கூகுள் பிக்சல் டேக் அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்
  9. இந்தியாவில் கூகுள் பிக்சல் 11 விலை: புதிய பிக்சல் 11 தொடருக்கான உங்கள் முழுமையான வழிகாட்டி
  10. கூகுள் பிக்சல் 11 மற்றும் ஐபோன் 17 ஒப்பீடு: இந்தியாவில் விலை மற்றும் முழுமையான விவரக்குறிப்புகள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.