Samsung Galaxy M30s புதிய ஸ்டோரேஜ் வேரியண்டில் அறிமுகம்! 

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 12 மார்ச் 2020 10:02 IST
ஹைலைட்ஸ்
  • சாம்சங், Galaxy M30s-ன் புதிய வேரியண்ட்டை அறிமுகப்படுத்தியுள்ளது
  • இது மார்ச் 14, 2020 அன்று விற்பனைக்கு வரும்
  • Galaxy M30s, எக்ஸினோஸ் 9611-யால் இயக்கப்படுகிறது

Samsung Galaxy M30s கொரிய எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் மிகவும் வெற்றிகரமான பட்ஜெட் ஸ்மார்ட்போன்களில் ஒன்றாகும். நிறுவனம் இப்போது Samsung Galaxy M30s-ன் புதிய வேரியண்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சாதனம் இப்போது 4 ஜிபி ரேம், 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டில் கிடைக்கும்.


Samsung Galaxy M30s விலை:

Galaxy M30s-ன் சமீபத்திய 4 ஜிபி ரேம், 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை ரூ.14,999-யாக உள்ளது. இது Opal Black, Sapphire Blue மற்றும் Quartz Green ஆகிய மூன்று வண்ணங்களில் கிடைக்கும். இந்நிறுவனம் முன்பு Galaxy M30s-ன் அடிப்படை 4 ஜிபி ரேம், 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலையை ரூ.12,999-யாகவும் அதன் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட டாப்-எண்ட் வேரியண்டின் விலையை ரூ.14,999-யாக குறைத்தது. சாம்சங் டாப்-எண்ட் வேரியண்ட்டின் விலையை தற்போது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ரூ.15,999-யாக பட்டியலிட்டுள்ளது.

Samsung, 4 ஜிபி ரேம் / 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டை மார்ச் 14 முதல் அமேசான் மற்றும் அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விற்பனைக்கு வைக்கும். ஒரு அறிமுக சலுகையாக, HDB நிதி சேவைகளுடன் 5 சதவீத கேஷ்பேக்கைப் பெறலாம்.


Samsung Galaxy M30s விவரக்குறிப்புகள்:

Samsung Galaxy M30s எக்ஸினோஸ் 9611 SoC-யால் இயக்கப்படுகிறது மற்றும் 6,000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது. சார்ஜிங் நேரத்தை குறைக்க15W சார்ஜரையும் தொகுக்கிறது.

Samsung Galaxy M30s, 6.4 இன்ச் அமோலேட் டிஸ்பிளே முழு எச்.டி + ரெசல்யூஷனுடன் மற்றும் முன்பக்கத்தில் வாட்டர் டிராப் நாட்சைக் கொண்டுள்ளது. இது 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமரா மற்றும் 5 மெகாபிக்சல் டெப்த் சென்சார் ஆகியவற்றுடன் டிரிபிள் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Crisp AMOLED display
  • Great battery life
  • Decent performance
  • Good camera performance in daylight
  • Bad
  • Camera is slow to focus
  • Spammy notifications
 
KEY SPECS
Display 6.40-inch
Processor Samsung Exynos 9611
Front Camera 16-megapixel
Rear Camera 48-megapixel + 5-megapixel + 8-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 6000mAh
OS Android 9 Pie
Resolution 1080x2340 pixels
NEWS
VARIANTS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Samsung, Samsung Galaxy M30s, Samsung M30s
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. ஃபிளிப்கார்ட் ஃப்ரீடம் சேல்: நத்திங் ஃபோன் 4a சீரிஸ், ரெனோ 15 சீரிஸ், மேலும் பல தள்ளுபடியில் வழங்கப்படும்
  2. அமேசான் கிரேட் ஃப்ரீடம் சேல்: சியோமி பேட் 7, ஒன்பிளஸ் பேட் 2, ரெட்மி பேட் 2 மற்றும் பலவற்றில் சிறந்த சலுகைகள்
  3. அமேசான் கிரேட் ஃப்ரீடம் சேல் 2026: ரூ. 40,000-க்கு கீழ் சிறந்த ஸ்மார்ட்போன் சலுகைகள் அறிவிப்பு
  4. சோனி WH-1000XM6 இப்போது இந்தியாவில் ஆலிவ் கிரே வண்ணத்தில் கிடைக்கிறது: விலை, கிடைக்கும் இடம், அம்சங்கள்
  5. அமேசான் கிரேட் ஃப்ரீடம் சேல்: நீங்கள் தவறவிடக்கூடாத ஒன்பிளஸ் 15 சலுகை இது
  6. அமேசான் கிரேட் ஃபிரீடம் சேல் 2026: ரூ. 20,000-க்குள் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன் சலுகைகள்!
  7. ரியல்மி 16x 5G பற்றிய தொகுப்பு: வெளியீட்டுத் தேதி, இந்தியாவில் எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் விவரக்குறிப்புகள்
  8. Poco M8 Power vs OnePlus Nord CE 6 Lite vs Moto G77 Power: இந்தியாவில் விலை, சிறப்பம்சங்கள் ஒப்பீடு!
  9. ஓட்டுநர் வேலைகள் ஆபத்தில் இருக்குமா? 120,000 ஓட்டுநர் இல்லாத ரோபோடாக்சிகளை இயக்க ஊபர் திட்டம்
  10. itel Ace 3 Heera இந்தியாவில் ₹1,000-க்குள் அறிமுகம்: புளூடூத், கால் ரெகார்டிங், வயர்லெஸ் FM ரேடியோ வசதி!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.