சாம்சங்கின் புதிய கேலக்ஸி எம் 11 அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இது நிறுவனத்தின் கேலக்ஸி எம்-சீரிஸ் வரிசையில் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போனாகும். புதிய சாம்சங் போன் டிரிபிள் ரியர் கேமராக்கள் அமைப்பைக் கொண்டுள்ளது.இந்த போன், 15W வேகமான சார்ஜிங் ஆதரவுடன் பெரிய 5,000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது.
Galaxy M11, சாம்சங் UAE இணையதளத்தில் மட்டுமே பட்டியலிடப்பட்டுள்ளது. ஆனால், அதன் விலை பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. Samsung Galaxy M10s-ன் விலைக்கு நிகராக இருக்கும் என்று யூகிக்கப்படுகிறது. வலைத்தள பட்டியலின் படி, கேலக்ஸி எம் 11 மாதிரி எண் SM-M115F மற்றும் பிளாக், மெட்டாலிக் ப்ளூ மற்றும் வயலட் கலர் ஆப்ஷன்களில் வருகிறது.
டூயல்-சிம் (நானோ) Samsung கேலக்ஸி எம் 11, Android 10 அல்லது Android Pie-யில் இயங்குகிறதா என்று குறிப்பிடப்படவில்லை. இந்த போன் 3 ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்ட ஆக்டா கோர் SoC-யில் இயங்குகிறது. ஆனால், சிப்செட் குவால்காம் ஸ்னாப்டிராகன் 450 என்று தெரியவில்லை. சாம்சங் கேலக்ஸி எம் 11, 6.4 இன்ச் எச்டி + (720 x 1560 பிக்சல்கள்) டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி எம் 11 இன் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பில், எஃப் / 1.8 aperture உடன் 13 மெகாபிக்சல் பிரதான ஸ்னாப்பர் உள்ளது. இது எஃப் / 2.4 aperture உடன் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் மற்றும் எஃப் / 2.2 aperture மற்றும் 115 டிகிரி பார்வையுடன் 5 மெகாபிக்சல் வைட்-அங்கிள் கேமரா உள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோக்களுக்கு, எஃப் / 2.0 aperture உடன் 8 மெகாபிக்சல் கேமரா உள்ளது.
கேலக்ஸி எம் 11 32 ஜிபி ஆன்போர்டு ஸ்டோரேஜை வழங்குகிறது. இதனை, மைக்ரோ எஸ்.டி கார்டு வழியாக (512 ஜிபி வரை) மேலும் விரிவாக்கக்கலாம். போனின் இணைப்பு விருப்பங்களில் 4G, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth 4.2, GPS, க்ளோனாஸ், பீடோ மற்றும் கலிலியோ ஆகியவை உள்ளது. கேலக்ஸி எம் 11, 15W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரவுடன் 5,000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது. அங்கீகாரத்திற்காக பின்புறமாக பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் உள்ளது. இந்த போன் 161.4x76.3x9.0 மிமீ அளவு மற்றும் 197 கிராம் எடைக் கொண்டதாகும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்