மொபைல் தயாரிப்பில் முன்னணியில் உள்ள சாம்சங், தனது கேலக்ஸி M வரிசை போன்களை, வரும் திங்கள் கிழமை வெளியிட உள்ளது
Photo Credit: Amazon India
M10 போனின் 2ஜிபி ரேம், 16 ஜிபி சேமிப்பு வசதி வகை, 7,990 ரூபாய்க்கு சந்தைக்கு வர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
மொபைல் தயாரிப்பில் முன்னணியில் உள்ள சாம்சங், தனது கேலக்ஸி M வரிசை போன்களை, வரும் திங்கட்கிழமை வெளியிட உள்ளது. இந்த போன்கள் குறித்து மிகையான எதிர்பார்ப்புகள் நிலவி வரும் நிலையில், M10 மற்றும் M20 போன்களின் விலை என்னவென்பது குறித்து நம்ப தகுந்த வட்டாரத்திலிருந்து தகவல் வந்துள்ளது.
M வரிசை போன்கள் இந்த மாதம் தொடக்கத்திலேயே வெளியாகும் என்று சொல்லப்பட்ட நிலையில், வரும் திங்கட்கிழமை அதிகாரப்பூர்வ வெளியீடு குறித்து அறிவிப்பு வெளியிட்டது சாம்சங் நிறுவனம்.
இந்நிலையில் M10 போனின் 2ஜிபி ரேம், 16 ஜிபி சேமிப்பு வசதி வகை, 7,990 ரூபாய்க்கு சந்தைக்கு வர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதே நேரத்தில் அந்த போனின் 3 ஜிபி ரேம், 32 ஜிபி சேமிப்பு வசதி வகை, 8,990 ரூபாய்க்கு விற்கப்படும் எனப்படுகிறது.
அதேபோல M20 போனின் 3ஜிபி ரேம், 32 ஜிபி சேமிப்பு வசதி வகை, 10,990 ரூபாய்க்கு சந்தைக்கு வர வாய்ப்புள்ளதாகவும், அந்த போனின் 4 ஜிபி ரேம், 64 ஜிபி சேமிப்பு வசதி வகை, 12,990 ரூபாய்க்கு விற்கப்படும் எனப்படுகிறது.
மேலும் கேலக்ஸி M20 போனில், 5000 எம்.ஏ.எச் திறன் கொண்ட பேட்டரி இருக்கும் என்றும், கேலக்ஸி M10 போனில், 4300 எம்.ஏ.எச் திறனுடைய பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த இரண்டு போன்களின் விற்பனையும் பிப்ரவரி 5 ஆம் தேதி முதல் அமேசான் மற்றும் சாம்சங் தளங்களில் ஆரம்பிக்கும் என்று சாம்சங் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
M வகை போன்கள் வெளியீடு குறித்து சாம்சங் நிறுவனத்தின் துணைத் தலைவர் அசீம் வர்சி, “M வகை போன்களை இந்தியாவில் தான் நாங்கள் முதன் முதலாக அறிமுகம் செய்ய உள்ளோம். மற்ற சந்தைகளில் அடுத்தடுத்துதான் இந்த போன்கள் விற்பனை செய்யப்படும். இந்த போன், முழுக்க முழுக்க இந்திய வாடிக்கையாளர்களை மனதில் வைத்து உருவாக்கப்பட்டுள்ளது” என்றுள்ளார்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
ces_story_below_text
விளம்பரம்
விளம்பரம்
Vivo V70 Series India Launch Timeline Leaked; Two Models Expected to Debut