செல்போன் தயாரிப்பில் முன்னணியில் உள்ள சாம்சங் நிறுவனம் கேலக்சி மாடலில் புதிய செல்போன்களை வெளியிட்டுள்ளது. இந்த போன்கள் நீலம், கறுப்பு, மற்றும் தங்க நிறத்தில் கிடைக்கிறது.
சாம்சங் ஏ6 கேலக்சி சிறப்பம்சங்கள்: ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ, 5.6 இன்ச் எச்டி டிஸ்ப்ளே, 720க்கு 1480 ரெசொல்யூஷன், 1.6 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் எக்சைனோஸ் 7 பிராசசர், 16 எம்பி பின்புற கேமரா, 16 எம்பி முன்புற கேமரா, 3ஜிபி ரேம் 32 ஜிபி இன்டர்னல் மெமரி மற்றும் 4ஜிபி ரேம், 64 ஜிபி ஸ்டோரேஜ், 256 ஜிபி வரை மெமரியை நீட்டித்துக் கொள்ளும் வசதி, 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், ஜிபிஎஸ், 3.5 எம்எம் ஆடியோ ஜாக், பிங்கர்பிரின்ட் ஸ்கேனர், 3000எம்ஏஎச் பேட்டரி. இந்த போன் ரூ. 21,990 மற்றும் ரூ. 22,990 என்ற இரு விலையில் கிடைக்கிறது.
சாம்சங் ஏ6 பிளஸ் சிறப்பம்சங்கள்: ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ, 6 இன்ச் புல் எச்டி, 1080 க்கு 2220 ரெசொல்யூஷன் டிஸ்ப்ளே, ஆக்டாகோர் குவால்கம் 450 பிராசசர், 4ஜிபி ரேம், இரண்டு பக்கமும் 16 + 5 எம்பி பின்புற கேமராக்கள், 24 எம்பி செல்பி கேமரா, பிங்கர் பிரின்ட் ஸ்கேனர் வசதி, 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், ஜிபிஎஸ், 3.5 எம்எம் ஆடியோ ஜாக், 3500 எம்ஏஎச் பேட்டரி, 3ஜிபி ரேம் 32 ஜிபி இன்டர்னல் மெமரி மற்றும் 4ஜிபி ரேம், 64 ஜிபி ஸ்டோரேஜ், 256 ஜிபி வரை மெமரியை நீட்டித்துக் கொள்ளும் வசதி. இதன் விலை ரூ. 25,990 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சாம்சங் கேலக்சி ஜே 6 சிறப்பம்சங்கள்: ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ 5.6 இன்ச் 720 க்கு 1480 ரெசொல்யூஷன் டிஸ்ப்ளே, எக்சைனோஸ் 7870 ஆக்டா கேர் பிராசசர், 13 எம்பி பின்புற கேமரா, 8 எம்பி முன்புற கேமரா, வைபை, ப்ளூடூத், ஜிபிஎஸ், பிங்கள் பிரின்ட் ஸ்கேனர், 3000 எம்ஏஎச் பேட்டரி, 3ஜிபி ரேம் 32 ஜிபி இன்டர்னல் மெமரி மற்றும் 4ஜிபி ரேம், 64 ஜிபி ஸ்டோரேஜ், 256 ஜிபி வரை மெமரியை நீட்டித்துக் கொள்ளும் வசதி. இந்த போன் ரூ. 13,990 மற்றும் ரூ. 16490 என்ற இரு விலைகளில் இந்தியாவில் கிடைக்கிறது.
பொறுப்புத்துறப்பு: பேடிஎம்மின் முதன்மை நிறுவனமான ஒன் 97 கேட்ஜெட்ஸ் 360யின் பங்குதாரர்
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்