பின்பக்கம் 24 மெகா பிக்செல்ஸ் சென்சார் ஒன்றும், 10 மெகா பிக்செல்ஸ் சென்சாரும், 5 மெகா பிக்செல்ஸ் சென்சாரும் கொண்டுள்ளது. ஸ்நாப்டிராகன் 710 பிராசஸர் கொண்ட இந்த போனானது 6.4 இன்ச் டிஸ்பிளே கொண்டுள்ளது
The Samsung Galaxy A9 Pro (2019) packs a 3,400mah battery
சாம்சங் கேலக்ஸி A9ப்ரோ (2019) ஸ்மார்ட்போனானது தென்கொரியாவில் வெளியானது. இந்த போனானது, இன்பினிட்டி ஓ டிஸ்பிளே, 6ஜிபி ரேம், 128ஜிபி நினைவகம் கொண்டுள்ளது. இதன் தோற்றம் மற்றும் சிறப்பம்சம் கொண்டு பார்க்கும்போது இது சாம்சங் கேலக்ஸி A8s ஸ்மார்ட்போன் வேரியண்ட்டை போல் இருக்கிறது. இந்த போனில் பின்பக்கம் 3 கேமராக்கள் உள்ளன. முன்புறம் 24 மெகா பிக்செல்ஸ் செல்பி கேமரா கொண்டுள்ளது. 3,400mAh பேட்டரி திறன் மற்றும் பின்பக்கம் கைரேகை சென்சார் கொண்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி A9ப்ரோ (2019) ஸ்மார்ட்போனின் கொரிய விலையானது, KRW 599,500 (தோராயமாக ரூ.37,800) ஆகும். இந்த போன் ப்ளு, பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. கொரியாவில் 28ஆம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது. மற்ற சந்தைகளில் எப்போது வருகிறது என்பது குறித்த தகவல்கள் வெளிவரவில்லை.
சீனாவில் அறிமுகமான சாம்சங் கேலக்ஸி A8s ஸ்மார்ட்போன் வடிவமைப்பு கொண்டுள்ளது. இன்பினிட்டி ஓ டிஸ்பிளே ஸ்கிரின் கொண்ட இந்த போனின் இடது முனையில் கேமரா சென்சார் கொண்டுள்ளது. பின்புறம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. யூஎஸ்பி - சி டைப் போர்ட் சார்ஜிங் வசதி உள்ளது.
சாம்சங் கேலக்ஸி A9ப்ரோ (2019) ஸ்மார்ட்போனானது, 6ஜிபி ரேம், 3,400 mAh பேட்டரி மற்றும் 128ஜிபி நினைவகம், 19.5:9 ரேஸியோ அளவை கொண்டுள்ளது.
இந்த போன் பின்பக்கம் மூன்று கேமராவையும், முன்பக்கம் 24 மெகா பிக்செல்ஸ் சென்சாரும் கொண்டுள்ளது. இதில் பின்பக்கம் 24 மெகா பிக்செல்ஸ் சென்சார் ஒன்றும், 10 மெகா பிக்செல்ஸ் சென்சாரும், 5 மெகா பிக்செல்ஸ் சென்சாரும் கொண்டுள்ளது. ஸ்நாப்டிராகன் 710 பிராசஸர் கொண்ட இந்த போனானது 6.4 இன்ச் டிஸ்பிளே கொண்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
ces_story_below_text
விளம்பரம்
விளம்பரம்
Red Magic 11 Air Battery Capacity, Chipset Revealed Ahead of January 20 Launch