சாம்சங் கேலக்ஸி A8s நேரலையை வெய்போ பக்கத்தில் பார்க்கலாம் என்று தெரிவித்திருந்தது.
சாம்சங் கேலக்ஸி A8s ஸ்மார்ட்போன் இன்று சீனாவில் அறிமுகமாகிறது. தென்கொரிய தயாரிப்பு நிறுவனமான சாம்சங் இந்த கேலக்ஸி A8s அறிமுகம் செய்யும் நிகழ்வை நேரலையில் காணும் வசதி செய்யப்பட்டது. இந்த போன் இன்ஃபினிட்டி ஓ டிஸ்பிளேயுடன் வெளிவரும் முதல் ஸ்மார்ட்போனாகும். இதுகுறித்து கடந்த மாதமே சாம்சங் நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டது. இதன் நேரலை வெய்போ பக்கத்தில் நேரலை ஒளிபரப்பப்பட்டது.
இதுகுறித்து சாம்சங் நிறுவனம் தனது சமூகவலைதள பதிவுகளில் முன்னதாகவே குறிப்பிட்டது. சாம்சங் கேலக்ஸி A8s நேரலையை வெய்போ பக்கத்தில் பார்க்கலாம் என்று தெரிவித்திருந்தது.
சமீபத்தில் வந்த தகவலின்படி, சாம்சங் கேலக்ஸி A8s ஸ்மார்ட்போனானது 6.39 இன்ச் டிஸ்பிளே மற்றும் புல்எச்டி கொண்டுள்ளது. மேலும் இது, குவல்காம் ஸ்நாப்டிராகன் 710 எஸ்ஓசி கொண்டுள்ளது. இதனுடன் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்நினைவகம் கொண்டுள்ளது. இதனை மைக்ரோ எஸ்.டி கார்டு கொண்டு 512ஜிபி வரை விரிவாக்கம் செய்துகொள்ளலாம்.
இந்த போனில் பின்பக்க கேம, 24 மெகா பிக்ஸெல்ஸ், 5 மெகா பிக்ஸெல்ஸ் மற்றும் 10 மெகா பிக்ஸெல்ஸ் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்பக்கம், 24 மெகா பிக்ஸெல்ஸ் சென்சார் கேமரா டிஸ்பிளே ஹோல் உள் வைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பிளாக், க்ரே கலர்களில் கிடைக்கிறது. யூஎஸ்பி டைப் சி போர்ட் கொண்டுள்ள இந்த ஸ்மார்டபோனின் பேட்டரி திறன் 3,400mAh கொண்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Take-Two CEO Says AI Won't Be 'Very Good' at Making a Game Like Grand Theft Auto
iQOO Neo 11 With 7,500mAh Battery, Snapdragon 8 Elite Chip Launched: Price, Specifications