சாம்சங் கேலக்ஸி ஏ 80 ஸ்மார்ட்போன் தாய்லாந்தில் நேற்று நடைபெற்ற சாம்சங் நிகழ்ச்சியில் மார்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்டது. 48 மெகா பிக்சல் முதற்கட்ட பின்புற கேமரா, சூப்பர் அமோலெட் முழு ஹெச்டி திரையை இந்த போன் கொண்டுள்ளது.
மேலும் இந்த போனில் டால்பி அட்மோஸ் ஆடியோ வசதி, ஆண்ட்ராய்டு பைய் மென்பொருள், இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரின்ட் சென்சார் இடம்பெற்றுள்ளது. இந்த போனின் சிறப்பம்சமாக சுழலும் மேகரா இடம்பெற்றுள்ளது. இந்த மேரா பின்புறத்தில் அமைந்திருப்பதால் நாட்ச் இல்லாத திரையை பெற முடிகிறது. சாம்சங் கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போனில் சிறப்பு சென்சார்களை கொண்ட கேமராக்கள் அமைந்திருப்பதால் தரம்வாய்ந்த செல்ஃபி புகைப்படங்களை எடுக்க முடியும்.
இந்த போனில் இடம்பெற்றுள்ள 'இன்டெலிஜன்ட் பேட்டரி' வசதி போனின் பேட்டரி ஆயுளை நீட்டிக்கிறது. 25W அதிவிரைவாக சார்ஜ் செய்யும் தொழில்நுட்பம் இந்த போனில் இடம்பெற்றுள்ளது. தாய்லாந்தில் நடைபெ அந்த நிகழ்ச்சியில் விரைவில் கேலக்ஸி ஏ70 ஸ்மார்ட்போன் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி ஏ80 போனின் விலை மற்றும் வெளியாகும் தேதி:
இந்த சாம்சங் தயாரிப்பு சுமார் ரூ.50,500க்கு விற்பனை செய்யப்படவுள்ளது. மேலும் வெளியாகியுள்ள தகவலின்படி இந்த ஸ்மார்ட்போன் ஏஞ்சல் கோல்டு, கோஸ்ட் வைட் மற்றும் ஃபேன்டம் பிளாக் போன்ற நிறங்களில் வெளியாகிறது. இந்த தயாரிப்பு வரும் மே மாதம் 29 தேதி முதல் ஆசியா, ஆஸ்திரேலியா, சீனா, ஐரோப்பா, ஹாங்காங், அரபு நாடுகள், நியூசிலாந்து மற்றும் ரஷ்யாவில் விற்பனைக்கு வெளியாகிறது
அதுபோல் சாம்சங் கேலக்ஸி ஏ70 ஸ்மார்ட்போன் வரும் ஏப்ரல் 26 ஆம் தேதி வெளியாகிறது. இந்த தயாரிப்பு பிளாக், புளூ, கோரல் மற்றும் வெள்ளை நிறங்களில் வெளியாகவுள்ளது.
சாம்சங் கேலக்ஸி ஏ80 ஆமைப்புகள்:
டூயல் சிம்-கார்டு அமைப்புகளை கொண்ட இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 9.0 பைய் மென்பொருள் கொண்டு செயல்படுகிறது. 6.7 இஞ்ச் (1080x2400 பிக்சல்) திரை, சூப்பர் அமோலெட் இன்ஃபைநைட் டிஸ்பிளே, நாட்ச்யில்லா திரை, ஸ்னாப்டிராகன் 730G SoC மறும் இரண்டு கோர்களை கொண்ட ஆக்டா-கோர் பிராசஸசரை போன்ற பல சிறப்பு அமைப்புகளை இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. மேலும் இந்த தயாரிப்பு 8ஜிபி ரேம் மற்றும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர் பிரின்ட் வசதியையும் கொண்டுள்ளது.
கேமரா தொழிநுட்பத்தில் ஒரு புதிய அறிமுகதை இந்த கேலக்ஸி ஏ80 போனுக்கு கிடைத்துள்ளது. இந்த போனில் சுழலும் பின்புற கேமரா வசதி இடம்பெற்றுள்ளது. பின்புற கேமராவில் 48 மெகா பிக்சல் சென்சார், 8 மெகா பிக்சல் சென்சார் மற்றும் முன்று கோணத்தில் புகைப்படத்தை எடுக்க உதவும் சென்சாரும் அமைக்கப்பட்டுள்ளது.
செல்ஃபிகளை பொறுத்தவரை இந்த போனில் இருக்கும் மூன்று பின்புற கேமராக்கள் சுழன்று முன்புற கேமராவாக மாறுகின்றன. இதன் மூலம் பாப்-ஆப் செல்ஃபி மேரா, சாம்சங் வழங்கும் சூப்பர் ஸ்டேடி வீடியோ மோட், சீன் ஆப்டிமைசர் மற்றும் குறைகளை நீக்கும் ஃபிளா டிடெக்ஷன் போன்ற பல ஃபில்டர்களை இந்த போன் பெற்றுள்ளது.
இந்த போனில் 128ஜிபி சேமிப்பு வசதி இடம்பெற்றுள்ளது. இந்த போனில் 3,700mAh பேட்டரி வசதி இடம்பெற்றுள்ளது. இதுமட்டுமின்றி பிக்ஸ்பை, சாம்சங் பே, சாம்சங் ஹெல்த் மற்றும் சாம்சங் நோக்ஸ் போன்ற பல முக்கிய அமைப்புகளையும் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்