சாம்சங் கேலக்ஸி A70, A80 விலை மற்றும் ரிலீஸ் தேதி விவரம்..!

சாம்சங் கேலக்ஸி A70, A80 விலை மற்றும் ரிலீஸ் தேதி விவரம்..!

தற்போது A வரிசை போன்களில் சாம்சங்கிற்கு 10,000 ரூபாய் முதல் 50,000 ரூபாய் வரை அனைத்து விலை ரேஞ்சிலும் ஒரு போன் உள்ளது. 

ஹைலைட்ஸ்
  • சாம்சங் கேலக்ஸி A70 ஸ்மார்ட் போன் அடுத்த வாரம் ரிலீஸ்
  • சாம்சங் கேலக்ஸி A80 மே மாதம் ரிலீஸ்
  • கேலக்ஸி A70 25,000 ரூபாய் முதல் 30,000 ரூபாய் வரை விலை இருக்கும்
விளம்பரம்

சாம்சங் கேலக்ஸி A70 ஸ்மார்ட் போன் அடுத்த வாரம் இந்தியாவில் ரிலீஸ் ஆகிறது. சாம்சங் கேலக்ஸி A80 மே மாதம் இந்தியாவில் ரிலீஸ் செய்யப்படும் என்று அந்நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாம்சங் நிறுவனம் அதன் A வகை போன் விற்பனையின் மூலம் மட்டும் சுமார் 4 பில்லியன் டாலர் வருவாய் ஈட்ட திட்டமிட்டு வருகிறது. இது இந்திய மதிப்பில் 27,700 கோடி ரூபாய் ஆகும். சாம்சங் கேலக்ஸி A70 சென்ற மாதம் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், சாம்சங் கேலக்ஸி A80 சென்ற வாரம் அறிமுகம் செய்யப்பட்டது. 

சாம்சங் கேலக்ஸி A70, A80 விலை:

‘கேலக்ஸி A70-ஐ நாங்கள் 25,000 ரூபாய் முதல் 30,000 ரூபாய் வரை இருக்கும் வகையில் வெளியிடுவோம். A80-ஐப் பொறுத்தவரை 45,000 ரூபாய் முதல் 50,000 ரூபாய் வரை விலை நிர்ணயம் செய்யப்படும்' என்று சாம்சங், மூத்த துணைத் தலைவர் ரஞ்சிவித் சிங் தகவல் தெரிவித்துள்ளார். 
 

ஆண்ட்ராய்டு பைய் ஒன் யூ.ஐ-யில் இயங்கும், டூயல் சிம் ஸ்லாட் கொண்ட சாம்சங் கேலக்ஸி A70-யில் முழு ஹெச்.டி 6.7 இன்ச் ஸ்க்ரீன், சூப்பர் ஆமோலெட் இன்ஃபினிட்டி-யூ டிஸ்ப்ளே பேனல் இருக்கிறது. 20:9 ஆஸ்பக்ட் ரேஷியோவில் இது இயங்குகிறது. அக்டா-கோர் குவால்கம் ஸ்னப்டிராகன் 675 எஸ்ஓசி-யால் பவரூட்டப்பட்டுள்ள சாம்சங் கேலக்ஸி A70, 6 ஜிபி மற்றும் 8 ஜிபி வகைகளில் கிடைக்கும். 128 ஜிபி சேமிப்பு வசதியுடன் வரும் இந்த போனில், 512 ஜிபி வரை சேமிப்பு வசதியைக் கூட்டிக் கொள்ளும் அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது. 

டூயல் சிம்-கார்டு அமைப்புகளை கொண்ட A80 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 9.0 பைய் மென்பொருள் கொண்டு செயல்படுகிறது. 6.7 இஞ்ச் (1080x2400 பிக்சல்) திரை, சூப்பர் அமோலெட் இன்ஃபைநைட் டிஸ்பிளே, நாட்ச்யில்லா திரை, ஸ்னாப்டிராகன் 730G SoC மறும் இரண்டு கோர்களை கொண்ட ஆக்டா-கோர் பிராசஸசரை போன்ற பல சிறப்பு அமைப்புகளை இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. மேலும் இந்த தயாரிப்பு 8ஜிபி ரேம் மற்றும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர் பிரின்ட் வசதியையும் கொண்டுள்ளது.

இந்த ஆண்டு மார்ச் முதல் ஜூன் வரை மாதத்துக்கு ஒரு போன் ரிலீஸ் செய்யப்படும் என்று சாம்சங் நிறுவனம் அறிவித்திருந்தது. 

அதன்படி, A வரிசை போன்களில் நான்காவதாக கேலக்ஸி A20-ஐ இந்த மாதத் தொடக்கத்தில் வெளியிட்டது. 12,290 ரூபாய்க்கு இந்த போன் இந்திய சந்தையில் கிடைக்கிறது. மார்ச் மாதம் சாம்சங், கேலக்ஸி A10 போனை 8,490 ரூபாய்க்கு வெளியிட்டது. 

தற்போது A வரிசை போன்களில் சாம்சங்கிற்கு 10,000 ரூபாய் முதல் 50,000 ரூபாய் வரை அனைத்து விலை ரேஞ்சிலும் ஒரு போன் உள்ளது. 

2018 நிதி ஆண்டில் சாம்சங் நிறுவனம், இந்திய சந்தையில் 5.5 பில்லியன் டாலர் அளவுக்கு வருவாய் ஈட்டியது. இந்நிலையில் அந்த லாபத்தை இந்த ஆண்டு அந்நிறுவனம் அதிகரிக்கப் பார்க்கும். 

இது குறித்து சிங் மேலும் தெரிவிக்கையில், ‘இந்த வாரத்தில் நாங்கள் கேலக்ஸி A2 கோர் போனை 5,290 ரூபாய்க்கு ரிலீஸ் செய்யப் போகிறோம். இதன் மூலம் சாதாரண போன் பயன்படுத்துபவர்கள் ஸ்மார்ட் போனுக்கு மாற சுலபமாக இருக்கும்' என்றுள்ளார். 

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Beautiful Super-AMOLED display
  • Impressive slow-mo video recording
  • Good battery life and fast charging
  • Bad
  • Bulky and heavy
  • No camera night mode
  • No OIS or EIS
Display 6.70-inch
Processor Qualcomm Snapdragon 675
Front Camera 32-megapixel
Rear Camera 32-megapixel + 8-megapixel + 5-megapixel
RAM 6GB
Storage 128GB
Battery Capacity 4500mAh
OS Android 9 Pie
Resolution 1080x2400 pixels
Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Samsung Galaxy A80, Samsung Galaxy A70, Samsung
பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »