சுழலும் கேமரா வசதியுடன் வெளியான சாம்சங் கேலக்ஸி A80; விலை மற்றும் ஆரம்ப தள்ளுபடி விவரம்!
சாம்சங் கேலக்ஸி A80, இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வரும் ஜூலை 22 முதல் 31 ஆம் தேதி வரை இந்த போனை ப்ரீ-புக்கிங் செய்து கொள்ளலாம். சாம்சங் நிறுவனம், கேலக்ஸி A80 குறித்த முதல் அறிவிப்பை கடந்த ஏப்ரல் மாதம் வெளியிட்டது. இந்த ஸ்மார்ட்போனில் மிகவும் கவனிக்கவைத்த அம்சம், சுழலும் கேமரா. அந்த கேமரா மூலம் அட்டகாசமான படங்கள் எடுக்க முடியும் என்று சொல்லப்படுகிறது.
சாம்சங் கேலக்ஸி A80 விலை மற்றும் ஆரம்பகால ஆஃபர்:
8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதி கொண்டு வரும் ஒரே வகைதான், கேலக்ஸி A80-யில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை 47,990 ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ப்ரீ-புக்கிங் காலத்தில் இந்த போனை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு, ஒரு முறை ஸ்க்ரீன் மாற்றுதல் இலவசமாக செய்து தரப்படும். மேலும் சிட்டி வங்கி கிரெடிட் கார்டை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால், 5 சதவிகித கேஷ் பேக் கொடுக்கப்படும்.
தேவதை கோல்டு, கோஸ்ட் வெள்ளை, ஃபேன்டம் கருப்பு ஆகிய நிறங்களில் இந்த போன் ஆகஸ்ட் 1 முதல் வாடிக்கையாளர்கள் கையில் தவழும். நோக்கி 9 ப்யூர்வியூ, ஒன்பிளஸ் 7 ப்ரோ, ஓப்போ ரெனோ 10x சூம் உள்ளிட்ட போன்களுடன் கேலக்ஸி A80 போட்டியிடும்.
சாம்சங் கேலக்ஸி A80 சிறப்பம்சங்கள்:
டூயல் சிம் (நானோ) வசதியிருக்கும் இந்த போன் ஆண்ட்ராய்டு பைய் கொண்டு இயங்குகிறது. 6.7 இன்ச் முழு எச்.டி+ திரை கொண்ட இந்த போனில் ஆமோலெட் டிஸ்ப்ளே மற்றும் 20:9 ஆஸ்பெக்ட் ராஷியோ இருக்கும். இன்-டிஸ்ப்ளே ஃபிங்கர் பிரின்ட் இருக்கிறது. ஸ்னாப்டிராகன் 730ஜி எஸ்.ஓ.சி ப்ராசஸர் கேலக்ஸி A80-க்கு பவரூட்டுகிறது.
போனின் பின்புறம் 48 மெகா பிக்சல் திறன் கொண்ட சுழலும் கேமரா இருக்கும். அதுவல்லாமல் 8 மெகா பிக்சல் கொண்ட இரண்டாவது கேமரா மற்றும் மூன்றாவது 3டி டெப்த் கேமரா கொடுக்கப்பட்டுள்ளன.
இந்த போனில் வீடியோ பார்க்கும் போது அதிர்வுகளைத் தவிர்க்க, சூப்பர் ஸ்ட்டி மோட் டிசைன் கொடுக்கப்பட்டுள்ளதாம். 3டி டெப்த் கேமராவைப் பயன்படுத்தி, துல்லியமான படங்களை எடுக்க முடியுமாம்.
இந்த வசதிகளைத் தாண்டி, 4ஜி வோல்ட், வை-ஃபை 802, ப்ளூடூத், யூ.எஸ்.பி டைப் - சி, 3,700 எம்.ஏ.எச் பேட்டரி, 25w அதிவேக சார்ஜிங் போன்றவைகளும் இருக்கின்றன.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்