அதிரடி விலைக்குறைப்பில் Samsung Galaxy A80! ரூ. 39,990/- ஒன்லி....

ஜூலை மாதம் இந்தியாவில், Samsung Galaxy A80-யின் விலை ரூ. 47,990 என விலைகுறியீட்டைக் கொண்டிருந்தது.

அதிரடி விலைக்குறைப்பில் Samsung Galaxy A80! ரூ. 39,990/- ஒன்லி....

full-screen அனுபவத்தை வழங்குகிறது Samsung Galaxy A80

ஹைலைட்ஸ்
  • Samsung Galaxy A80-யின் விலை ரூ. 8,000 வரை குறைந்துள்ளது
  • Samsung India online store-ல் இந்த விலைக்குறைப்பு பிரதிபலிக்கிறது
  • ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் கடைகளிலும் புதுபிக்கப்பட்ட விலையில் வழங்குகின்றன
விளம்பரம்

இந்தியாவில் Samsung Galaxy A80-யின் விலை ரூ. 39,990-யாக குறைந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஏப்ரல் மாதத்தில் உலகளாவிய அறிமுகமானதைத் தொடர்ந்து ஜூலை மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.


இந்தியாவில் Samsung Galaxy A80-யின் விலை

இந்தியாவில் Samsung Galaxy A80-யின் விலை ரூ. 39,990-யாக Samsung India online store மூலம் பெறமுடியும். Amazon.in மற்றும் Flipkart உள்ளிட்ட ஆன்லைன் சந்தைகளும் புதிய விலையை பிரதிபலிக்கின்றன. இதேபோல், மும்பையைச் சேர்ந்த சில்லறை விற்பனையாளரான மகேஷ் டெலிகாமின் மணீஷ் காத்ரி, சமீபத்திய விலை குறைப்பு ஆஃப்லைன் கடைகளுக்கும் பொருந்தும் என்று கூறுகிறார். விலை வீழ்ச்சியை உறுதிப்படுத்த நாங்கள் சாம்சங் இந்தியாவை அணுகியுள்ளோம், மீண்டும் அறிவிப்பு வரும்போது நாங்கள் இந்த இடத்தை புதுப்பிப்போம்.


Samsung Galaxy A80-யின் விவரக்குறிப்புகள்:

டூயல்-சிம் (நானோ) Samsung Galaxy A80, One UI உடன் Android 9 Pie-யால் இயங்குகிறது. 6.7-inch full-HD+ (1080x2400 pixels) Super AMOLED 'New Infinity Display' உடன் 20:9 aspect ratio-வைக் கொண்டுள்ளது. ஹூட்டின் படி, இந்த போன் 8GB RAM உடன் இணைக்கப்பட்டு, Qualcomm Snapdragon 730G SoC-யால் இயங்குகிறது.

புகைக்கடங்கள் மற்றும் வீடியோவுக்கு, Samsung Galaxy A80-ல் f/2.0 lens உடன் 48-megapixel முதன்மை சென்சார் மற்றும் ultra-wide-angle 123-degree f/2.2 lens உடன் 8-megapixel secondary சென்சாருடம் சுழலும் கேமராவும் அடங்கும்.  IR சென்சாருடன் 3D depth கேமராவும் உள்ளது. மேலும், selfie mode-ஐ ஒருமுறை தேர்ந்தெடுக்கும் போது கேமரா அமைப்பு மேலே எழுவதோடு மற்றும் சுழலவும் செய்யும்.

Galaxy A80-ல் 128GB ஆன்போர்ட் ஸ்டோரேஜ் உள்ளது. இதை விவாக்க முடியாது. இணைப்பு விருப்பங்களில் 4G VoLTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS மற்றும் USB Type-C. தவிர, 25W fast charging ஆதரவுடன் 3,700mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

தொடர்புடைய செய்திகள்

பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
  1. Oppo K13 Turbo: போனுக்குள்ள ஃபேனா? இந்தியால லான்ச் ஆன முதல் கூலிங் ஃபேனுடன் கூடிய ஸ்மார்ட்போன்
  2. Lava Blaze AMOLED 2 5G: ₹13,499-க்கு AMOLED டிஸ்ப்ளே, Dimensity 7060 ப்ராசஸரோட மிரட்டல் லான்ச்
  3. Tecno Spark Go 5G: ₹10,000-க்குள்ள இந்தியாவுலயே ஸ்லிம்மான 5G போன்! ஆகஸ்ட் 14-ல் வெளியீடு!
  4. Panasonic-ன் புது மிரட்டல் டிவி! MiniLED தொழில்நுட்பம், Dolby Atmos-உடன் வெளியீடு!
  5. Samsung Galaxy A17 5G: ₹17,500-க்கு ஒரு பெரிய பேட்டரி போன்! பட்ஜெட் மார்க்கெட்டில் ஒரு புதிய அஸ்திரம்!
  6. Lava-வின் புதிய அஸ்திரம்! Blaze AMOLED 2 5G லான்ச் தேதி உறுதி! AMOLED டிஸ்ப்ளே உடன் அதிரடி!
  7. Motorola Razr 60: போன்ல வைரங்கள் பதிக்கப்பட்டு வந்தாச்சு! அசத்தலான Brilliant Collection!
  8. Oppo K13 Turbo சீரிஸ்: போனுக்குள்ளயே ஃபேன் வச்சு மாஸ் காட்ட வர்றான்! இந்தியால ஆகஸ்ட் 11-ல் லான்ச்!
  9. Vivo Y400 5G லான்ச்! Snapdragon 4 Gen 2 SoC-வோட கலக்கப் போகுது!
  10. Amazon சேல்ல லேப்டாப் வாங்க இதுதான் சரியான நேரம்! ரூ. 60,000-க்குள்ள டாப் பிராண்டுகளின் மாஸ் டீல்ஸ்!
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »