Samsung Galaxy A21s பற்றிய சில புதிய தகவல்கள் இப்போது வெளிவந்துள்ளன. சாம்சங் இந்த மாதத்தில் அமெரிக்க சந்தையில் சாம்சங் கேலக்ஸி ஏ 21-ஐ அறிமுகப்படுத்தியது. மேலும் ,சாம்சங் கேலக்ஸி ஏ 21 எஸ் செயல்பாட்டில் உள்ளது என்பது அறியப்படுகிறது. சமீபத்திய அறிக்கையில், இந்த போனின் விவரக்குறிப்பு குறித்த சில முக்கியமான தகவல்களை நாங்கள் முன்பு பெற்றுள்ளோம்.
இந்த சாம்சங் போனை பற்றி டிப்ஸ்டர் சுதான்ஷு அம்போர் உரிமை கோரியுள்ளார். சாம்சங் கேலக்ஸி ஏ 21 எஸ் பற்றிய இந்த தகவல் புதிய தரவில் இருந்து வந்தது என்றும் அவர் தெரிவித்தார். அத்தகைய சூழ்நிலையில் முழுமையாக நம்புவது தவறு.
சாம்சங் கேலக்ஸி ஏ 21 எஸ்-ல் 6.55 இன்ச் எச்டி + ரெசல்யூஷன் டிஸ்ப்ளே மற்றும் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. முதன்மை கேமரா 48 மெகாபிக்சல்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனுடன், 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் கேமரா கொடுக்க முடியும். செல்ஃபி கேமரா 13 மெகாபிக்சல்கள் இருக்கலாம். சாம்சங் கேலக்ஸி ஏ 21 எஸ்-ல் டியூ டிராப் நாட்ச் போன்ற ஹோல்-பஞ்ச் வடிவமைப்பு இருக்குமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
Samsung Galaxy A21s-
— Sudhanshu Ambhore (@Sudhanshu1414) April 25, 2020
6.55" IPS, HD+, 720 x 1600
48MP + 8MP + 2MP
13MP
3GB + 64GB
microSD slot
5000mAh
FS scanner, Micro USB, NFC, Dual SIM, 3.5mm jack, BT 5.0
Black, Blue & White
Note- This info is from a relatively new source, so it's better to take it with a pinch of salt????
இந்த போனில் 5,000 எம்ஏஎச் பேட்டரி இருப்பதாக டிப்ஸ்டர் கூறியுள்ளார். இதில் 3 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் வழங்கப்படும் என்று கூறியுள்ளனர். முன்னதாக, சாம்சங் கேலக்ஸி ஏ 21 எஸ் கீக்பெஞ்சின் தளத்தில் 3 ஜிபி ரேம் மற்றும் எக்ஸினோஸ் 850 செயலியுடன் பட்டியலிடப்பட்டதாக செய்திகள் வந்தன.
Samsung கேலக்ஸி ஏ 21 எஸ்-ல் கைரேகை சென்சார், மைக்ரோ-யூ.எஸ்.பி போர்ட், என்.எஃப்.சி, டூயல் சிம், புளூடூத் மற்றும் 3.5 மிமீ ஹெட்போன் ஜாக் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் என்று சுதன்ஷு அம்போர் தெரிவித்தார். இந்த போன் கருப்பு, நீலம் மற்றும் வெள்ளை வண்ணங்களில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
Will OnePlus 8 series be able to take on iPhone SE (2020), Samsung Galaxy S20 in India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்