ஆண்ட்ராய்டு 10 அப்டேட் பெறும் சாம்சங் கேலக்ஸி ஏ 10 எஸ்! 

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 2 ஏப்ரல் 2020 17:08 IST
ஹைலைட்ஸ்
  • புதிய அப்டேட் A107FXXU5BTCB நிலைபொருள் எண்ணுடன் வருகிறது
  • கேலக்ஸி ஏ 10 எஸ் அப்டேட், மார்ச் 26 ஆம் தேதி உருவாக்க தேதியைக் காட்டியது
  • இந்தியாவில் பயனருக்கான அப்டேட் எப்போது வெளியிடப்படும் என்று தெரியவில்லை

சாம்சங் கேலக்ஸி ஏ 10 எஸ், நிறுவனத்தின் பட்ஜெட் போனாக ஆகஸ்ட் 2019-ல் அறிமுகப்படுத்தப்பட்டது

இந்தியாவில், சாம்சங் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கேலக்ஸி ஏ 10 எஸ்-ஐ பட்ஜெட் போனாக அறிமுகபடுத்தியது. நிறுவனம் மார்ச் மாதத்தில் Android 10-அடிப்படையிலான ஒன் யுஐ 2.0 அப்டேட் கொண்டு வந்தது நிலையில், இப்போது, கேலக்ஸி ஏ 10 எஸ் போனுக்கு வெளியிடுகிறது. ​​புதிய அப்டேட் A107FXXU5BTCB நிலைபொருள் எண்ணுடன் வருகிறது. இந்த அப்டேட் மார்ச் 2020 பாதுகாப்பு புதுப்பிப்பை கொண்டு வருந்துள்ளது. மேலும், சமீபத்திய மென்பொருள் மேம்பாடுகளுடன் சேர்க்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கேலக்ஸி ஏ 10 எஸ்-ன் ஒன் யுஐ 2.0 அப்டேடின் ஃபைல் அளவு 2.66 ஜிபி ஆகும்.  


கேலக்ஸி ஏ 10 எஸ் விவரங்கள்:

Samsung Galaxy A10s 2 ஜிபி அல்லது 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்பில்ட் ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்டு MT6762 Helio P22-ஆல் இயக்கப்படுகிறது. இந்த போன் வாட்டர் டிராப் நாட்சுடன் 6.2 இன்ச் எச்டி + (720x1,520 பிக்சல்கள்) டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. கேலக்ஸி ஏ 10 எஸ் டூயல் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளன, இதில் 13 மெகாபிக்சல் முதன்மை ஷூட்டர் மற்றும் 2 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமராவும் உள்ளன. போனின் முன் கேமரா 8 மெகாபிக்சல் லென்ஸைக் கொண்டுள்ளஹ்து. கேலக்ஸி ஏ 10 எஸ் 4,000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது. இந்த போனின் விலை ரூ.10,499 ஆகும்.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Samsung, Samsung Galaxy A10s, Android 10
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. 9 JBL ப்ரோ ஸ்பீக்கர்கள்,10,200mAh பேட்டரியுடன் மோட்டோ பேட் 70 க்ரூவ் இந்தியாவில் அறிமுகம்:விலை, சிறப்பம்சங்கள்
  2. இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி F70 புரோ 5G விலை, வெளியீட்டு தேதி மற்றும் அம்சங்கள் அறிவிப்பு
  3. சோனி WF-1000XM6 உடன் சோனி 1000X தி கலெக்‌ஷன் DSEE அல்டிமேட் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பம்சங்கள்
  4. ஒன்பிளஸ் N6x இந்தியாவில் 7,000mAh பேட்டரி, 13-மெகாபிக்சல் பின்புற கேமராவுடன் அறிமுகம்: விலை, விவரக்குறிப்புகள்
  5. இந்தியாவில் eSIM மற்றும் பிசிக்கல் சிம்: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை
  6. இந்தியாவில் PS5 ஸ்டாண்டர்ட் எடிஷன் விலையை சோனி ரூ. 15,000 உயர்த்தியுள்ளது
  7. ஆகஸ்ட் 1 முதல் இந்தியாவில் நத்திங் ஃபோன் (4a) விலை ரூ. 3,000 உயரும் என தகவல்
  8. ஆசஸ் பேட் இந்திய விலை, ரேம் மற்றும் ஸ்டோரேஜ் வகைகள் அறிவிப்பு; ஆகஸ்ட் 6 முதல் விற்பனை தொடங்குகிறது
  9. சாம்சங்கின் 50MP கேமரா கொண்ட மடிக்கக்கூடிய ஃபோனுக்கு ₹19,000 தள்ளுபடி; சமீபத்திய சலுகையைப் பாருங்கள்
  10. AI உதவியுடன் இன்டர்வியூவில் வென்று ₹1.5 கோடி வேலை பெற்ற நபர்; தனது உத்தியைப் பகிர்ந்துள்ளார்!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.