சாம்சங் கேலக்ஸி ஏ 10 எஸ், 2.66 ஜிபி அப்டேட்டைப் பெறுவதாகக் கூறப்படுகிறது.
சாம்சங் கேலக்ஸி ஏ 10 எஸ், நிறுவனத்தின் பட்ஜெட் போனாக ஆகஸ்ட் 2019-ல் அறிமுகப்படுத்தப்பட்டது
இந்தியாவில், சாம்சங் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கேலக்ஸி ஏ 10 எஸ்-ஐ பட்ஜெட் போனாக அறிமுகபடுத்தியது. நிறுவனம் மார்ச் மாதத்தில் Android 10-அடிப்படையிலான ஒன் யுஐ 2.0 அப்டேட் கொண்டு வந்தது நிலையில், இப்போது, கேலக்ஸி ஏ 10 எஸ் போனுக்கு வெளியிடுகிறது. புதிய அப்டேட் A107FXXU5BTCB நிலைபொருள் எண்ணுடன் வருகிறது. இந்த அப்டேட் மார்ச் 2020 பாதுகாப்பு புதுப்பிப்பை கொண்டு வருந்துள்ளது. மேலும், சமீபத்திய மென்பொருள் மேம்பாடுகளுடன் சேர்க்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கேலக்ஸி ஏ 10 எஸ்-ன் ஒன் யுஐ 2.0 அப்டேடின் ஃபைல் அளவு 2.66 ஜிபி ஆகும்.
Samsung Galaxy A10s 2 ஜிபி அல்லது 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்பில்ட் ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்டு MT6762 Helio P22-ஆல் இயக்கப்படுகிறது. இந்த போன் வாட்டர் டிராப் நாட்சுடன் 6.2 இன்ச் எச்டி + (720x1,520 பிக்சல்கள்) டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. கேலக்ஸி ஏ 10 எஸ் டூயல் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளன, இதில் 13 மெகாபிக்சல் முதன்மை ஷூட்டர் மற்றும் 2 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமராவும் உள்ளன. போனின் முன் கேமரா 8 மெகாபிக்சல் லென்ஸைக் கொண்டுள்ளஹ்து. கேலக்ஸி ஏ 10 எஸ் 4,000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது. இந்த போனின் விலை ரூ.10,499 ஆகும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Samsung Galaxy S27 Ultra Tipped to Launch With a Custom Snapdragon 8 Elite Series Chip