Samsung Galaxy A06 செல்போன் மாடலில் தெறிக்க விடும் அம்சங்கள்

Samsung Galaxy A06 ஆனது Galaxy A05 மடலுக்கு அடுத்ததாக இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

Samsung Galaxy A06 செல்போன் மாடலில் தெறிக்க விடும் அம்சங்கள்

Photo Credit: Samsung

ஹைலைட்ஸ்
  • Samsung Galaxy A06 இரட்டை பின்புற கேமரா அமைப்பை கொண்டிருக்கும் என்று எதிர
  • ஆண்ட்ராய்டு 14 OS வசதியுடன் வரும் என தெரிகிறது
  • MediaTek Helio G85 SoC என்ற சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது
விளம்பரம்

நீங்கள் பட்ஜெட் விலையில் புதிதாக ஸ்மார்ட்போன், வாட்ச், ஸ்பீக்கர் உட்பட எது வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றாலும் இந்த பதிவு உங்களுக்கானது மக்களே. நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குள் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? எந்த போன் சிறந்த பெர்பார்மென்ஸை கொண்டுள்ளது? எந்த போனில் கேமரா அம்சம் மிரட்டலாக இருக்கிறது? எந்த போனில் டிஸ்பிளே சூப்பராக அமைந்துள்ளது? எது பட்ஜெட்டில் சூப்பர் போன்? என்பது போன்ற விபரங்களை நாங்கள் உங்களுக்கு விளாவாரியாக சொல்லப்போகிறோம். இப்போ நாம் பார்க்க இருப்பது Samsung Galaxy A06 செல்போன். 

Samsung Galaxy A06 மாடல் இப்போது வெளியாகும் செல்போனிகளில் மலிவு விலையாக இருக்கும். வரும் வாரங்களில் இந்தியாவில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் ஆன்லைனில் இந்த Samsung Galaxy A06  ஸ்மார்ட்போனின் போட்டோக்கள் வெளியாகி உள்ளது. குறிப்பாக எல்இடி பிளாஷ் வசதியுடன் டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. அதேபோல் வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்பிளே உடன் இந்த போன் அறிமுகமாகும். இப்போது ஆன்லைனில் கசிந்த Samsung Galaxy A06  செல்போனின் அம்சங்களைப் பார்க்கலாம்.

இரண்டு தனித்தனி வட்ட வடிவ கேமரா அமைப்பு பின்புற பேனலின் மேல் இடது மூலையில் செங்குத்தாக உள்ளது. முந்தைய Galaxy A05 செல்போனை போலவே செங்குத்து டைப் பேனல் தெரிகிறது. பவர் பட்டன் மற்றும் வால்யூம் ராக்கர் வலது விளிம்பில் உள்ளது. இது Galaxy A55  மற்றும்  Galaxy A35ல் காணப்பட்டதைப் போன்று இருக்கிறது. Galaxy A06 ரெண்டர்கள் கருப்பு மற்றும் வெள்ளி வண்ணங்களில் இப்போது வெளியாகி இருக்கிறது. 

Samsung Galaxy A06 ஆனது 6GB RAM உடன் இணைக்கப்பட்ட MediaTek Helio G85 SoC உடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது., முந்தைய அறிக்கையின்படி இது 6.7-இன்ச் எல்சிடி திரை மற்றும் ஆண்ட்ராய்டு 14-அடிப்படையிலான UI வசதியுடன் வரும் என தெரிகிறது. 15W வயர்டு சார்ஜிங் வசதியுடன் 5,000mAh பேட்டரியைக் கொண்டிருக்கும். Samsung Galaxy A06 இந்தியாவில் தோராயமாக ரூ. 18,200 என்ற  விலை நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிய வருகிறது. 50-மெகாபிக்சல் + 2-மெகாபிக்சல் பின்புற கேமரா இருக்கலாம் என கூறப்படுகிறது. 4 ஜிபி, 6 ஜிபி அளவிலான ரேம் இருக்கும். முன் கேமரா 8-மெகாபிக்சல் என்கிற ரேஞ்சில் இருக்கும். 64 ஜிபி, 128 ஜிபி மெமரி அளவுடன் இருக்கும் என தெரிகிறது. 

MediaTek Helio G85 SoC சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேபோல் இந்த Samsung போனின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சாம்சங் நிறுவனம். பின்பு சில்வர் மற்றும் பிளாக் நிறங்களில் இந்த போன் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது. Android 14 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு Samsung Galaxy A06  ஸ்மார்ட்போன் அறிமுகமானாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்ப அப்டேட்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்புறம் சைடு மவுண்டெட் Fingerprint Scanner வசதி இருக்கிறது. 

கூடுதலாக மெமரி நீட்டிப்பு வசதியும் கொண்டுள்ளது. நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் உள்ளது. Samsung Galaxy A06 பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். வைஃபை, என்எப்சி, புளூடூத், 3.5எம்எம் ஆடியோ ஜாக், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி சப்போர்ட் செய்கிறது. 
 

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Gadgets 360 Staff
 ...மேலும்
        
    
பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
  1. Redmi 15 5G: ₹15,000-க்குள்ளே 7,000mAh பேட்டரி, 144Hz டிஸ்ப்ளே உடன் மாஸ் என்ட்ரி!
  2. Airtel-ன் அதிர்ச்சி அறிவிப்பு! ₹249 ரீசார்ஜ் திட்டம் நீக்கம்! இனி ₹50 அதிகம் செலவு செய்யணும்
  3. Honor X7c 5G லான்ச்! ₹14,999-க்கு 5G போன்! Snapdragon 4 Gen 2 SoC, 5,200mAh பேட்டரி
  4. Airtel-ஆல் வந்த ஜாக்பாட்! 6 மாதங்களுக்கு Apple Music இலவசம்! எப்படி ஆக்டிவேட் செய்வது
  5. iQOO 15: Snapdragon 8 Gen 4, 150W சார்ஜிங்! அடுத்த வருஷம் மாஸ் என்ட்ரி கொடுக்கப்போகுது!
  6. Infinix Hot 60i 5G: ₹10,000-க்குள்ளே 6,000mAh பேட்டரியுடன் மாஸ் என்ட்ரி!
  7. Vu Glo QLED TV 2025: 120W சவுண்ட்பார், 120Hz ரிஃப்ரெஷ் ரேட் உடன் அதிரடி! விலை மற்றும் முழு அம்சங்கள்!
  8. Realme P4 சீரிஸ்: 6,000 nits டிஸ்ப்ளேவுடன் ஒரு புது புரட்சி! ஆகஸ்ட் 20-ல் இந்தியாவில் வெளியீடு
  9. Oppo K13 Turbo: போனுக்குள்ள ஃபேனா? இந்தியால லான்ச் ஆன முதல் கூலிங் ஃபேனுடன் கூடிய ஸ்மார்ட்போன்
  10. Lava Blaze AMOLED 2 5G: ₹13,499-க்கு AMOLED டிஸ்ப்ளே, Dimensity 7060 ப்ராசஸரோட மிரட்டல் லான்ச்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »