பல நாட்களாக ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டு வரும் சாம்சங்கின் மடக்கக் கூடிய ஸ்மார்ட்ஃபோன் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் விற்பனைக்கு வரும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்ஃபோனுக்கு சாம்சங் வின்னர் என்று ரகசிய பெயர் வைக்கப்ப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. 7 இன்ச்சில் டாப்லெட்டை போல இருக்கும் இதை, மடக்கி ஸ்மார்ஃபோனாக பயன்படுத்திக் கொள்ள முடியும்.
இந்த மடக்கக் கூடிய ஸ்மார்ட்ஃபோன் கேமர்களை இலக்காக வைத்து சந்தைக்கு வரும் என்று வால் ஸ்ட்ரீட் செய்தி நிறுவனம் கூறியுள்ளது. முதலில் சிறிய அளவில் மட்டுமே விற்பனை செய்யப்படும் என்றும், பயன்பாட்டாளர்களின் கருத்துக்களை பெற்றதும் முழுமையாக விற்பனைக்கு வரும் என்றும் கூறப்படுகிறது.
இந்த மடக்கக் கூடிய ஸாம்ர்ட்ஃபோன், சாதாரணமான ஒரு மொபைலாக இருக்காது. சந்தையில் உள்ள போட்டியில் தனித்துவமாக இருக்கும் வகையில் இந்த ஸ்மார்ட்ஃபோனை உருவாக்கி வருவதாக கேலக்ஸி எஸ் 9 அறிமுகத்தின் போது சாம்சங் மொபைலின் தலைவர் கோ தெரிவித்தார்.
இந்த ஸ்மார்ட்ஃபோன் பற்றி பல தகவல்கள் இணையத்தில் உலாவிய படி இருக்கின்றன. சில தகவல்கள் இந்த மொபைலின் விலை 1,27000 ரூபாய்க்கு மேல் இருக்கும் என்றும் கூறுகின்றன.
வால் ஸ்ட்ரீட் ஜர்னலின் தகவல் படி, இந்த ஃபோனின் ஒருபுறம் டிஸ்பிளேவும் மறுபுறம் கேமரா இருக்கும் எனக் கூறியுள்ளது. ஆனால், அதிகமாக சூடாவது மட்டுமே, சாம்சங் சந்தித்து வரும் ஒரே பிரச்சனை என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்