சாம்சங் நிறுவனம் தனது அடுத்த தலைமுறை ஃபிளாக்ஷிப் சிப்செட்டான எக்ஸினோஸ் 2600-ஐ (Exynos 2600) அறிமுகப்படுத்தியுள்ளது
Photo Credit: Samsung
Samsung Exynos 2600 அறிமுகம்: 2nm GAA, Xclipse 960 GPU, 320MP கேமரா ஆதரவு
இன்னைக்கு டெக் உலகமே ஆச்சரியமா பார்க்குற ஒரு பிரம்மாண்ட அறிவிப்பை சாம்சங் (Samsung) வெளியிட்டுருக்காங்க. அதுதான் அவங்களோட லேட்டஸ்ட் அண்ட் பவர்ஃபுல் சிப்செட்டான Exynos 2600. இதுவரைக்கும் ஸ்மார்ட்போன் உலகத்துல 3nm சிப்செட்கள் தான் டாப்-ல இருந்துச்சு, ஆனா இப்போ முதல் முறையா 2nm GAA (Gate-All-Around) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்த சிப்பை சாம்சங் தயாரிச்சிருக்காங்க.
இந்த எக்ஸினோஸ் 2600-ல இருக்குற சிபியு (CPU) பத்தி பார்த்தா, இது ஒரு 10-கோர் (Deca-core) ப்ராசஸர். இதுல ஒரு C1-Ultra core (3.8GHz), மூணு C1-Pro cores (3.25GHz), அப்புறம் ஆறு C1-Pro cores (2.75GHz) இருக்கு. பழைய மாடலை விட இதோட வேகம் 39% அதிகமா இருக்கும்னு சாம்சங் சொல்லிருக்காங்க. முக்கியமா, இதுல 'லிட்டில் கோர்ஸ்' (Little Cores) அப்படின்னு சொல்லப்படுற சின்ன கோர்களை தூக்கிட்டு, எல்லாமே பவர்ஃபுல் கோர்களா வச்சிருக்காங்க.
இதுல Xclipse 960 GPU இருக்கு. இது AMD RDNA 3 ஆர்க்கிடெக்ச்சர்ல உருவானது. இதனால 'ரே டிரேசிங்' (Ray Tracing) பெர்பார்மன்ஸ் 50% அதிகமா இருக்கும். அதுமட்டும் இல்லாம, 'Exynos Neural Super Sampling' (ENSS) அப்படிங்கிற AI தொழில்நுட்பம் மூலமா, கம்மி பவர்ல கூட கேம்ஸ் எல்லாம் செம ஸ்மூத்தா ஓடும்.
எக்ஸினோஸ்னாலே ஹீட் ஆகும்னு சொல்றவங்களுக்காகவே 'Heat Path Block' (HPB) அப்படிங்கிற ஒரு புது டெக்னாலஜியை கொண்டு வந்திருக்காங்க. இது போனோட வெப்பத்தை 16% வரைக்கும் குறைச்சு, எவ்வளவு நேரம் கேம் விளையாடினாலும் போனை கூலா வச்சுக்கும். ஏஐ (AI) விஷயத்துலயும் இது ஒரு கில்லி! இதோட NPU மூலமா ஜெனரேட்டிவ் AI வேலைகள் 113% வேகமா நடக்கும்.
கேமராவை பொறுத்தவரை, இது 320MP வரைக்கும் இருக்குற கேமராக்களை சப்போர்ட் பண்ணும். 8K 30fps வீடியோ ரெக்கார்டிங் மற்றும் 4K 120fps வீடியோ எடுக்குற வசதியும் இதுல இருக்கு. வரப்போற Galaxy S26 மற்றும் S26 Plus மொபைல்கள்ல இந்த சிப்செட்டை நாம எதிர்பார்க்கலாம். மொத்தத்துல, எக்ஸினோஸ் மேல இருக்குற எல்லா நெகட்டிவ் விமர்சனங்களையும் இந்த 2600 மாடல் மாத்திடும்னு சாம்சங் ரொம்பவே நம்பிக்கையா இருக்காங்க.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்