Samsung Galaxy A51-ல் 3.5mm audio jack இருப்பதைக் காணலாம்
Photo Credit: Pricebaba
Samsung Galaxy A51 அடுத்த ஆண்டு அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
Samsung Galaxy A51 இப்போது கசிவை அடிப்படையாகக் கொண்ட 360 டிகிரி ரெண்டர்ஸ் ஆன்லைனில் வழங்கப்படுகிறது. தொலைபேசியின் பின்புறத்தில் குவாட் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும் என்று ரெண்டர்கள் பரிந்துரைக்கின்றன - rectangular-shaped தொகுதியில். இந்த தொலைபேசி Samsung Galaxy Note 10 சீரிஸைப் போன்ற hole-punch டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. Samsung Galaxy A51-ல் உள்ள hole-punch டிஸ்ப்ளே மேல் மையத்தில் செல்பி கேமரா கட்-அவுட்டைக் கொண்டுள்ளது. Samsung Galaxy A51, 6.5 inch டிஸ்ப்ளே மற்றும் கேமரா பம்பில் 8.5mm தடிமனாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரைஸ்பாபா (Pricebaba) மற்றும் ஆன்லீக்ஸ் (Onleaks) கசிவு அடிப்படையிலான 5K ரெண்டர்களையும், Samsung Galaxy A51-ன் 360 டிகிரி வீடியோவையும் பகிர்ந்துள்ளன. போனில் 3.5mm audio jack, speaker grille மற்றும் கீழ் விளிம்பில் USB Type-C port , இடது விளிம்பில் SIM tray மற்றும் போனின் வலது விளிம்பில் power மற்றும் volume பொத்தான்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. Galaxy A51, glossy black finish-ஐக் கொண்டது. பின்புற கைரேகை சென்சார் காணப்படவில்லை. போனின் திரையில் in-screen fingerprint சென்சார் இருக்கக்கூடும் என்பதை இது குறிக்கிறது.
குறிப்பிட்டுள்ளபடி, Galaxy A51 ஆனது Galaxy Note 10 போன்ற hole-punch டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. போனின் மேல் மையத்தில், cut-out உள்ளது. மேலும், rectangular-shaped தொகுதிக்குள், பின்புறத்தில் குவாட் கேமரா அமைப்பு உள்ளது. இது ஃபிளாஷ் வசதியையும் கொண்டுள்ளது. சாம்சங் போனில் 6.5-inch டிஸ்பிளே மற்றும் 58.4x73.7x7.9mm அளவீடு இருக்கும். கேமரா பம்பைச் சுற்றி 8.5mm தடிமன் இருக்கும் என்றும் அறிக்கை கூறுகிறது.
கடந்த கால அறிக்கைகள் full-HD+ டிஸ்பிளே, 4,000mAh பேட்டரி, 48-megapixel முதன்மை சென்சார், முன் பேனனில் 32-megapixel செல்ஃபி கேமரா ஆகியவை இருக்கும். ஸ்மார்ட்போனில் Android 10-ஐ அடிப்படையாகக் கொண்ட One UI 2.0 இருப்பதாகவும் கூறப்படுகிறது. Samsung Galaxy A51, Exynos 9611 SoC மூலம் இயக்கப்படலாம் என்று Geekbench கசிவு தெரிவிக்கிறது. Samsung தனது 2020 range, Galaxy A-series மாடல்களில் Galaxy A51-ஐக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
ZTE Blade V80 Vita Leaked Render Suggests Design Similar to iPhone 17 Pro