அதிரடி விலைக்குறைப்பில் Samsung Galaxy A20s! 

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 14 ஜனவரி 2020 14:57 IST
ஹைலைட்ஸ்
  • Galaxy A20s 3GB RAM ஆப்ஷன் ரூ. 1,000 விலைக் குறைப்பை பெற்றுள்ளது
  • இந்த போன் நீல, கருப்பு, பச்சை என மூன்று கலர் ஆப்ஷன்களில் வருகிறது
  • Galaxy A20s, 18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4,000mAh பேட்டரியை கொண்டுள்ளது

Samsung Galaxy A20s, பின்புறத்தில் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது

Samsung Galaxy A20s இந்தியாவில் நிரந்தர விலைக் குறைப்பைப் பெற்றுள்ளன. நிறுவனம், அதன் 3GB RAM ஆப்ஷனுக்கு ரூ. 1,000 விலைக் குறைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன், 4GB RAM ஆப்ஷன் அசல் விலையில் தொடர்ந்து விற்பனைக்கு வரும்.


இந்தியாவில் Samsung Galaxy A20s விலை:

இந்தியாவில் Samsung Galaxy A20s 3GB RAM + 323GB ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை ரூ. 10,999-யாக நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த மாடலின் அசல் விலை ரூ. 11,999, அதாவது ரூ. 1,000 விலைக் குறைப்புடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 4GB RAM+ 64GB ஸ்டோரேஜ் வேரியண்ட்டில் விலை குறைப்பு ஏற்படாது என்றும், தொடர்ந்து ரூ. 13,999-ல் விற்பனையில் இருக்கும் என்றும் Samsung தெரிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் Samsung India eShop, Samsung Opera House மற்றும் நாடு முழுவதும் உள்ள முன்னணி இ-காமர்ஸ் போர்ட்டல்கள் மற்றும் சில்லறை கடைகள் மூலம் கிடைக்கிறது. இது கருப்பு, நீலம் மற்றும் பச்சை ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் பட்டியலிடப்பட்டுள்ளது. 


Samsung Galaxy A20s விவரக்குறிப்புகள், சிறப்பம்சங்கள்:

டூயல்-சிம் Samsung Galaxy A20s, Android 9 Pie-ல் இயங்குகிறது. இது 6.5-inch HD+ (720x1560 pixels) Infinity-V டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. 4GB RAM வரை இணைக்கப்பட்டு, octa-core Qualcomm Snapdragon 450 SoC-யால் இயக்கப்படுகிறது. இது 32GB மற்றும் 64GB ஆன்போர்டு ஸ்டோரேஜ் ஆப்ஷனைக் கொண்டுள்ளது. இந்த இரண்டும் microSD card வழியாக (512GB வரை) விரிவாக்கம் செய்யலாம். சாம்சங், Galaxy A20s-ல், 15W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4,000mAh பேட்டரியை வழங்குகிறது.

போனின் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பில், f/1.8 lens உடன் 13-megapixel முதன்மை சென்சார், ultra-wide lens உடன் 8-megapixel இரண்டாம் நிலை சென்சார் மற்றும் depth sensing-கிற்கு 5-megapixel மூன்றாம் நிலை சென்சார் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. செல்ஃபிகளுக்காக, முன்புறத்தில், 8-megapixel கேமரா சென்சாரும் உள்ளது. போனின் இணைப்பு விருப்பங்களில், 4G VoLTE, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth v4.2, GPS/ A-GPS USB Type-C மற்றும் 3.5mm headphone jack ஆகியவை அடங்கும். தவிர, இந்த போன் 163.3x77.5x8.0mm அளவீட்டையும், 183 கிராம் எடையையும் கொண்டதாகும்.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. அறிமுகமானது Itel Super Guru 4G Max: 3-இன்ச் டிஸ்ப்ளே, 2500mAh பேட்டரியுடன் - வாங்கலாமா?
  2. அறிமுகமாகிறது Moto G86 Power: Snapdragon 6 Gen 1 SoC, அசத்தலான அம்சங்களுடன் - வாங்கலாமா?
  3. Lava Blaze Dragon 5G: ₹9,999-க்கு கீழ் வருதா? Snapdragon 4 Gen 2 SoC, 120Hz டிஸ்ப்ளே - ஜூலை 25 அறிமுகம்!
  4. அறிமுகமாகிறது Redmi 15 சீரிஸ்? 6000mAh பேட்டரி, 120Hz டிஸ்ப்ளே - வெளியான Redmi-யின் ரகசிய தகவல்!
  5. Vodafone Idea வாடிக்கையாளர்களுக்கு ஜாக்பாட்! ₹199, ₹179 ரீசார்ஜில் புதிய சலுகைகள் - வெளியான தகவல்!
  6. அறிமுகமானது Asus Vivobook 14: AI அம்சங்கள், 14-இன்ச் WUXGA ஸ்க்ரீனுடன் - வாங்கலாமா? முழு விவரம்!
  7. Lava Blaze Dragon: ₹10,000-க்குள் இந்தியாவில் லான்ச்! Snapdragon 4 Gen 2 SoC உடன் ஜூலை 25 அறிமுகம்!
  8. அறிமுகமானது Samsung Galaxy F36 5G: Circle to Search, Gemini Live - வாங்கலாமா? முழு விவரம்!
  9. இந்தியாவில் Vivo V60 லான்ச் தேதி லீக்! முதல் முறையாக OriginOS - முழு அம்சங்கள், எதிர்பார்ப்புகள்!
  10. அறிமுகமாகிறது Lava Agni 4: புதிய டிசைன், 50MP கேமரா - லீக் ஆன சிறப்பம்சங்கள் மற்றும் விலை இதோ!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.