Photo Credit: Reliance
நீங்கள் பட்ஜெட் விலையில் புதிதாக ஸ்மார்ட்போன், வாட்ச், ஸ்பீக்கர் உட்பட எது வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றாலும் இந்த பதிவு உங்களுக்கானது மக்களே. நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குள் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? எந்த போன் சிறந்த பெர்பார்மென்ஸை கொண்டுள்ளது? எந்த போனில் கேமரா அம்சம் மிரட்டலாக இருக்கிறது? எந்த போனில் டிஸ்பிளே சூப்பராக அமைந்துள்ளது? எது பட்ஜெட்டில் சூப்பர் போன்? என்பது போன்ற விபரங்களை நாங்கள் உங்களுக்கு விளாவாரியாக சொல்லப்போகிறோம். இப்போ நாம் பார்க்க இருப்பது Jio New Year Welcome Plan 2025 ஆபர் பற்றி தான்.
ரிலையன்ஸ் ஜியோ 2025 ஆம் ஆண்டு புத்தாண்டுக்கு ரூ.2,025 விலையில் கவர்ச்சிகரமான ப்ரீபெய்டு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதில் 5G கவரேஜ் இல்லாத பகுதிகளில் கூட, தினமும் சுமார் 2.5 GB அடிப்படையில் 500 GB 4G தரவு பெறலாம். மேலும் வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் சேவைகளை தருகிறது. இது சந்தாதாரர்களுக்கு ரூ. 2,150 மதிப்புள்ள கூடுதல் நன்மைகளைப் பெறுவதற்கான வாய்ப்பை வழங்குகிறது. ஷாப்பிங் இணையதளங்கள், உணவு விநியோக பயன்பாடுகள் மற்றும் விமான முன்பதிவு தளங்களில் தள்ளுபடிகளை பெறலாம். இந்த திட்டம் மூலம் வருடத்துக்கு ரூ.400 சேமிக்க முடியும். இந்த சலுகைகளைப் பெற ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் ஜனவரி 11, 2025க்குள் ரீசார்ஜ் திட்டத்தை பெற வேண்டும்.
ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் Jio New Year Welcome Plan 2025 தற்போது இந்தியாவில் ரூ. 2,025 என்கிற விலையில் கிடைக்கிறது. இந்த திட்டத்தின் பலன்கள் வாங்கிய நாளிலிருந்து 200 நாட்களுக்கு செல்லுபடியாகும். நாட்டில் உள்ள அனைத்து ரிலையன்ஸ் ஜியோ ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களும் டிசம்பர் 11 முதல் ஜனவரி 11, 2025 வரை இந்தத் திட்டத்தைப் பெற முடியும்.
புதிதாக அறிவிக்கப்பட்ட Jio New Year Welcome Plan 2025 வரம்பற்ற 5G டேட்டா தாகருக்கிறது. 5G இணைப்பு வாடிக்கையாளர் இருக்கும் பகுதியில் 5G நெட்வொர்க் கிடைப்பதை பொறுத்து இருக்கிறது. இந்தத் திட்டத்தில் 500ஜிபி 4ஜி டேட்டா அல்லது ஒரு நாளைக்கு 2.5ஜிபி 4ஜி டேட்டா கிடைக்கும். 5G கவரேஜ் இல்லாத பகுதிகளில் கூட, தினமும் சுமார் 2.5 GB அடிப்படையில் 500 GB 4G தரவு பெறலாம்.
வாடிக்கையாளர்கள் வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் SMS செய்ய முடியும். ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்கள் JioTV, JioCinema மற்றும் JioCloud சந்தாக்களை அனுபவிக்க முடியும். மேலும், 2,150 ரூபாய் மதிப்புள்ள பிராண்டுகளின் கூப்பன்களைப் பெறலாம். இதனை கொண்டு பல தளங்களில் சலுகை விலையில் அதன் சேவைகளை பெறலாம். இந்த திட்டத்தில் AJIO, Swiggy மற்றும் EaseMyTrip போன்ற பல்வேறு சேவைகளில் தள்ளுபடிகளை வழங்கும் பார்னர் கூப்பன்களுடன் இந்த சிறப்பு புத்தாண்டு திட்டம் வருகிறது.புதிய ஆடைகள், ஃபேஷன் ஆக்சஸரீஸ், வீட்டு உபயோகப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான தயாரிப்புகளை வாங்க விரும்புபவர்களுக்கு இந்த சலுகை சிறந்தது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்