10வது தலைமுறை இன்டெல் ப்ராசஸர், இரண்டு வண்ணங்களில் RedmiBook 14 Pro லேப்டாப்!

விளம்பரம்
Written by மேம்படுத்தப்பட்டது: 30 ஆகஸ்ட் 2019 16:38 IST
ஹைலைட்ஸ்
  • RedmiBook 14 Pro 14-இன்ச் FHD திரையை கொண்டுள்ளது.
  • RedmiBook 14 Pro 512GB சேமிப்பை கொண்டுள்ளது
  • இன்டெல் கோர் i3 வகை அறிமுகமாகவில்லை

RedmiBook 14 Pro லேப்டாப்பில் ஜீஃபோர்ஸ் MX250 கிராபிக்ஸ் கார்டு (Nvidia GeForce MX250 graphics) பொருத்தப்பட்டுள்ளது.

Redmi Note 8, Redmi Note 8 Pro, ஸ்மார்ட்போன்கள் மற்றும் Redmi TV ஆகியவற்றுடன் RedmiBook 14 Pro லேப்டாப்பும் நேற்று அறிமுகமானது. 3 வகைகளில் அறிமுகமாகியுள்ள இந்த RedmiBook 14 Pro லேப்டாப் 10வது தலைமுறை இன்டெல் ப்ராசஸர்களை கொண்டுள்ளது. ப்ராசஸர் மேம்பாட்டை தவிர்ந்து இந்த Pro வகை லேப்டாப், ரெட்மிபுக் 14 போன்றே முழுவதுமாக அமைந்துள்ளது. இதற்கு முந்தைய வகை சில்வர் என்ற ஒரே வண்ணத்தில் அறிமுகமான நிலையில், இந்த ரெட்மிபுக் 14 Pro சாம்பல் மற்றும் பின்க் என இரண்டு வண்ணங்களில் அறிமுகமாகியுள்ளது.

10வது தலைமுறை இன்டெல் ப்ராசஸர்களை கொண்டுள்ள இந்த RedmiBook 14 Pro லேப்டாப் 3 வகைகளில் அறிமுகமாகியுள்ளது. இந்த லேப்டாப்பின் முதல் வகை இன்டெல் கோர் i5 ப்ராசஸரும், 8GB RAM, 256GB சேமிப்பு அளவையும் கொண்டுள்ளது. இந்த வகையின் விலை 3,999 யுவான்கள் (40,000 ரூபாய்). இன்டெல் கோர் i5 ப்ராசஸருடன் 8GB RAM, 512GB சேமிப்பு அளவு கொண்ட மற்றொரு வகை லேப்டாப் 4,499 யுவான்கள் (45,000 ரூபாய்) என்ற விலையில் விற்பனையாகவுள்ளது. அதிகபடியாக i7 ப்ராசஸர், 8GB RAM, 512GB சேமிப்பு அளவு கொண்ட இதன் டாப்-என்ட் வகை 4,999 யுவான்கள் (50,000 ரூபாய்) என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த லேப்டாப்கள் செப்டம்பர் 6-ல் தனது முதல் விற்பனையை சந்திக்கிறது.

4-இன்ச் திரை கொண்ட இந்த லேப்டாப், பத்தாவது தலைமுறை i7 ப்ராசஸர், 512GB சேமிப்பு அளவு கொண்டுள்ளது. மேலும், இந்த லேப்டாப்பில் ஜீஃபோர்ஸ் MX250 கிராபிக்ஸ் கார்டு (Nvidia GeForce MX250 graphics) பொருத்தப்பட்டுள்ளது.  மேலே குறிப்பிட்டது போல, முந்தைய வகையை போல் சில்வர் என்ற ஒரே வண்ணத்தில் இல்லாமல், ரெட்மிபுக் 14 Pro சாம்பல் மற்றும் பின்க் என இரண்டு வண்ணங்களில் அறிமுகமாகியுள்ளது.

மீதமுள்ள சிறப்பம்சங்களை பார்க்கையில் 178 டிகிரி கோணத்துடன் மற்றும் 250 நைட் உச்ச பிரகாசத்துடன் 14-இன்ச் FHD (1,920 x 1080 பிக்சல்கள்) திரையை கொண்டுள்ளது. இந்த லேப்டாப்பில் 46W பேட்டரி பொருத்தப்பட்டிருக்கிறது, இது வெறும் 35 நிமிடங்களில் 50 சதவீதம் வரை சார்ஜ் செய்யப்படும் என்றும் முழுமையாக சார்ஜ் செய்தவுடன் 10 மணி நேரம் நீடிக்கும் திறனை கொண்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. போர்ட் தேர்வில் இரண்டு USB 3.0 போர்ட்கள், ஒரு USB  2.0 போர்ட், 3.5mm ஆடியோ ஜாக் மற்றும் ஒரு HDMI போர்ட் ஆகியவை அடங்கும். மடிக்கணினி சுமார் 1.5 கிலோ எடையும், 323 x 228 x 17.95mm பரிமாணங்களையும் கொண்டிருக்கும்.

 
KEY SPECS
Display size 14.00-inch
Display resolution 1080x1920 pixels
Touchscreen No
Processor Core i5
RAM 8GB
OS Windows 10 Home
SSD 256GB
Graphics Nvidia GeForce MX250
Weight 1.50 kg
 
NEWS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: RedmiBook 14 Pro, RediBook 14 Pro Specifications, Redmi, Xiaomi
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. சாம்சங் போன்களில் பூட்லோடர் லாக்? One UI 8-ல் புதிய சிக்கல் - உங்கள் போன் பாதிக்கப்படுமா?
  2. Oppo Reno 14FS 5G: ₹45,700 விலையில் அறிமுகமா? அசத்தல் டிசைன், Snapdragon 6 Gen 4 SoC உடன் கசிந்த தகவல்கள்!
  3. Snapdragon 7 Gen 4 SoC உடன் Realme 15 Pro 5G - அம்சங்கள், விலை, எப்போ வாங்கலாம்? முழு விவரம்!
  4. Infinix Smart 10: ₹6,799-க்கு AI அம்சங்களுடன் இந்தியாவில் அறிமுகம்! 5,000mAh பேட்டரி, 120Hz டிஸ்ப்ளே - வாங்கலா
  5. அறிமுகமானது Itel Super Guru 4G Max: 3-இன்ச் டிஸ்ப்ளே, 2500mAh பேட்டரியுடன் - வாங்கலாமா?
  6. அறிமுகமாகிறது Moto G86 Power: Snapdragon 6 Gen 1 SoC, அசத்தலான அம்சங்களுடன் - வாங்கலாமா?
  7. Lava Blaze Dragon 5G: ₹9,999-க்கு கீழ் வருதா? Snapdragon 4 Gen 2 SoC, 120Hz டிஸ்ப்ளே - ஜூலை 25 அறிமுகம்!
  8. அறிமுகமாகிறது Redmi 15 சீரிஸ்? 6000mAh பேட்டரி, 120Hz டிஸ்ப்ளே - வெளியான Redmi-யின் ரகசிய தகவல்!
  9. Vodafone Idea வாடிக்கையாளர்களுக்கு ஜாக்பாட்! ₹199, ₹179 ரீசார்ஜில் புதிய சலுகைகள் - வெளியான தகவல்!
  10. அறிமுகமானது Asus Vivobook 14: AI அம்சங்கள், 14-இன்ச் WUXGA ஸ்க்ரீனுடன் - வாங்கலாமா? முழு விவரம்!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.