இளைஞர்களை குறிவைத்து வெளியான ‘ரெட்மி Y3’; முழு தகவல் உள்ளே!

விளம்பரம்
Written by Gadgets 360 Staff மேம்படுத்தப்பட்டது: 24 ஏப்ரல் 2019 14:17 IST
ஹைலைட்ஸ்
  • ரெட்மி Y3-யில் 4,000 எம்.ஏ.எச் பேட்டரி இருக்கும்
  • ஏப்ரல் 30 முதல் இந்த போன் விற்பனைக்கு வரும்
  • ரெட்மி Y3 இரு வகைகளில் கிடைக்கிறது

ரெட்மி Y3-யின் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி சேமிப்பு வசதி கொண்ட போன் 9,999 ரூபாய்க்கு கிடைக்கும்

ரெட்மி Y3, இந்தியாவில் இன்று வெளியாகியுள்ளது. இளைஞர்களை குறிவைத்து வந்துள்ள இந்த ஸ்மார்ட்போனில், பல அட்டகாச அம்சங்கள் இருக்கின்றன. ரெட்மி 7 போனுடன் ரெட்மி Y3 இன்று நடந்த நிகழ்ச்சியில் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. 32 மெகா பிக்சல் செல்ஃபி கேமரா, வாட்டர் ட்ராப் டிஸ்ப்ளே, டூயல் ரியர் கேமரா, ஆண்ட்ராய்டு பைய் மென்பொருள் உள்ளிட்ட வசதிகளை இந்த போன் பெற்றுள்ளது. விற்பனை தேதி, விலை, தள்ளுபடிகள் குறித்து பார்ப்போம்

ரெட்மி Y3 விலை மற்றும் தள்ளுபடிகள்:

ரெட்மி Y3-யின் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி சேமிப்பு வசதி கொண்ட போன் 9,999 ரூபாய்க்கு கிடைக்கும். 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி சேமிப்பு வசதி கொண்ட போன் 11,999 ரூபாய்க்கு கிடைக்கும். போல்டு ரெட், எலிகன்ட் ப்ளூ, ப்ரைம பிளாக் உள்ளிட்ட வண்ணங்களில் ரெட்மி Y3 சந்தையில் கிடைக்கும். ஏப்ரல் 30 ஆம் தேதி முதல் இந்த போனை வாங்க முடியும். அமேசான் தளம், Mi தளம் மற்றும் எம்.ஐ ஹோம் ஸ்டோர்களில் இந்த போனை வாங்கலாம். அறிமுக தள்ளுபடியாக, 1,120 ஜிபி 4ஜி ஏர்டெல் நிறுவன டேட்டா மற்றும் அன்லிமிடெட் காலிங் ஆஃபர்கள் வழங்கப்படுகின்றன. 

ரெட்மி Y3-யின் சிறப்பம்சங்கள்:

டூயல் நானோ சிம் ஸ்லாட், ஆண்ட்ராய்டு 9 பைய், 6.26 இன்ச் எச்.டி+ டிஸ்ப்ளே, 19:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, 2.5டி கிளாஸ், கொரில்லா க்ளாஸ் 5 பாதுகாப்பு, ஆக்டோ-கோர் குவாலகம் ஸ்னாப்டிராகன் 632 எஸ்.ஓ.சி உள்ளிட்ட வசதிகளை இந்த போன் பெற்றிருக்கும். 

ரூ.9,999-யிலிருந்து ரெட்மி Y3 விலை ஆரம்பமாகிறது

Advertisement

3ஜிபி மற்றும் 4ஜிபி ரேம் வகைகளை இந்த போன் கொண்டுள்ளது.

கேமராவைப் பொறுத்தவரை 12 மெகா பிக்சல் முதன்மை கேமரா, 2 மெகா பிக்சல் இரண்டாவது கேமராவையும் ரெட்மி 7, பின்புறத்தில் பெற்றிருக்கும். 

முன்பறுத்தில் 32 மெகா பிக்சல் செல்ஃபி கேமராவை Y3 கொண்டிருக்கிறது. 32ஜிபி மற்றும் 64ஜிபி சேமிப்பு வசதிகளை இந்த போன் மூலம் பெறலாம். 512 ஜிபி வரை சேமிப்பு வசதியை அதிகரித்துக் கொள்ள முடியும். 

Advertisement

4ஜி VoLTE, Bluetooth v4.2, மைக்ரோ USB, 3.5 எம்.எம் ஹெட்போன் ஜாக், 4000 எம்.ஏ.எச் பேட்டரி உள்ளிட்ட வசதிகளையும் இந்த போன் பெற்றிருக்கிறது. 


 

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Striking design
  • Good battery life
  • Dedicated microSD slot
  • Capable selfie camera
  • Bad
  • Ads and pre-installed bloatware
  • No fast charging
  • Overall performance isn’t competitive
  • Average rear cameras
 
KEY SPECS
Display 6.26-inch
Processor Qualcomm Snapdragon 632
Front Camera 32-megapixel
Rear Camera 12-megapixel + 2-megapixel
RAM 3GB
Storage 32GB
Battery Capacity 4000mAh
OS Android 9 Pie
Resolution 720x1520 pixels
NEWS
VARIANTS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

குடியுரிமை ரோபோ. எனக்கு மின்னஞ்சல் அனுப்பினால், ஒரு மனிதர் பதிலளிப்பார்.

...மேலும்
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. இனி ஃபோல்டபிள் போன்லயும் தத்ரூபமான போட்டோஸ்! சாம்சங் Z Fold 8-ன் மிரட்டலான கேமரா சிறப்பம்சங்கள் கசிந்தது
  2. ஆப்பிள், குவால்காமுக்கு செம டஃப்! சாம்சங்கின் 2nm எக்ஸினோஸ் 2600 வந்தாச்சு
  3. 8.9mm தடிமன்.. 10 நாள் பேட்டரி! ஒன்பிளஸ் வாட்ச் லைட் (OnePlus Watch Lite) லான்ச் ஆகிடுச்சு
  4. 200MP கேமரா.. ஆனா சைஸ் ரொம்ப சின்னது! OPPO Reno15 Pro Mini - இதோட டிசைனை பார்த்தா அசந்துடுவீங்க
  5. வந்துவிட்டது புது Oppo Pad Air 5: 2.8K Display, 10,050mAh Battery & 5G Support
  6. அமேசான் பே-வில் அதிரடி! ₹5,000 வரை பேமெண்ட் பண்ண இனி பின் நம்பர் போட வேணாம்
  7. 7000mAh பேட்டரி.. 200MP கேமரா.. ரியல்மி 16 ப்ரோ+ (Realme 16 Pro+) ரகசியங்கள் அம்பலம்
  8. இனி ஆப் ஸ்டோர்ல எதை தேடினாலும் விளம்பரமா தான் இருக்கும்! ஆப்பிள் எடுத்த அதிரடி முடிவு! கடுப்பில் யூசர்கள்
  9. 5G சப்போர்ட்.. 12.1-இன்ச் டிஸ்ப்ளே! வந்துவிட்டது புது OnePlus Pad Go 2! விலையை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க
  10. 7,400mAh பேட்டரியா? ஒன்பிளஸ் வரலாற்றிலேயே மிகப்பெரிய பேட்டரியுடன் வந்துவிட்டது OnePlus 15R
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.