Redmi Y3 இப்போது MIUI 11 அப்டேட்டைப் பெற்ற முதல் தொலைபேசிகளின் தொகுப்பில் இணைகிறது. அக்டோபர் 22 முதல் அக்டோபர் 31 வரை வெளியிட திட்டமிடப்பட்ட MIUI Global Stable ROM அப்டேட்டுகளின் முதல் தொகுப்பின் ஒரு பகுதியாக இந்த தொலைபேசி இருந்தது. இந்த அப்டேட் ஏற்கனவே Redmi K20, Redmi K20 Pro, Redmi Note 7, Redmi Note 7S மற்றும் Redmi Note 7 Pro பயனர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இப்போது Redmi Y3 தொடர்ந்து அதிகரித்து வரும் பட்டியலில் சேர்க்கிறது. MIUI 11, ஒரு புதிய minimalistic வடிவமைப்பு, புதிய dynamic sound effects, புதிய Mi File Manager app, Steps Tracker, Wallpaper Carousel மற்றும் Floating Calculator போன்ற அம்சங்களைக் கொண்டுவருகிறது.
இந்தியாவில் Redmi Y3 பயனர்கள் தங்கள் அலகுகளில் வரும் ஆண்ட்ராய்டு 10 அடிப்படையிலான MIUI 11 அப்டேட்டின் ஸ்கிரீன் ஷாட்களைப் பகிர்ந்து கொள்ள மன்றங்களுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இந்த அப்டேட்டுக்கான பதிப்பு எண் MIUI 11.0.3.0.PFFINXM ஆகும். இது 648MB அளவு கொண்டதாகும். இந்த அப்டேட் ஆகஸ்ட் பாதுகாப்பு இணைப்புடன் (security patch) வருகிறது. இப்போதைக்கு, Redmi Y3 அப்டேட் தொடர்பாக ஜியோமியிடமிருந்து எந்த அறிவிப்பும் இல்லை. அதிகாரப்பூர்வ தரவுகளில் இருந்து பதிவிறக்க இணைப்பும் கிடைக்கவில்லை. இந்த அப்டேட், முதலில் Mi Pilot programme பயனர்களுக்கு வெளிவருகிறது. மீதமுள்ளவர்கள் அந்த அப்டேட்டை பின்னர் பெறுவார்கள்.
உங்கள் Redmi Y3-யில் புதிய அப்டேட் வந்துவிட்டதா என்பதைப் About Phone > System Update பிரிவில் சரிபார்க்க பரிந்துரைக்கிறோம். உங்களுக்கு வந்திருந்தால், வலுவான Wi-Fi இணைப்பு மற்றும் போன் சார்ஜில் இருக்கும் போது அப்டேட்டை பதிவிறக்கவும்.
இதன் மூலம், இந்தியாவில் MIUI 11 அப்டேட் பெறத் தொடங்கும் முதல் தொகுப்பிலிருந்து Redmi 7 மட்டுமே மீதமுள்ளது. அதன் இரண்டாம் கட்டம் Redmi 6, Redmi 6 Pro, Redmi 6A, Redmi Note 5, Redmi Note 5 Pro, Redmi 5, Redmi 5A, Redmi Note 4, Redmi Y1, Redmi Y1 Lite, Redmi Y2, Redmi 4, Mi Mix 2 மற்றும் Mi Max 2 ஆகியவை நவம்பர் 4-12-க்கு இடையில் அப்டேட்டைக் காணும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்