Redmi நிறுவனம் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை விரைவில் அறிமுகப்படுத்தப் போறதா அதிகாரப்பூர்வமா அறிவிச்சிருக்காங்க
Photo Credit: Xiaomi
Redmi Note 14 Pro 5G (படம்) மற்றும் Pro+ மாறுபாடு சமீபத்தில் ஷாம்பெயின் தங்க நிறத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில கடந்த 11 வருஷமா தனி இடத்தை பிடிச்சு, பல சாதனைகளை படைச்சிருக்க Redmi நிறுவனம், இப்போ ஒரு பிரம்மாண்டமான அறிவிப்பை வெளியிட்டுருக்காங்க. இந்தியால 11 வருஷங்களை வெற்றிகரமா நிறைவு செஞ்சதை கொண்டாடும் வகையில, அவங்க இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை விரைவில் அறிமுகப்படுத்தப் போறதா அதிகாரப்பூர்வமா அறிவிச்சிருக்காங்க! இந்த செய்தி, Redmi ரசிகர்கள் மத்தியில ஒரு பெரிய எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கு. வாங்க, இந்த புது போன்கள் பத்தி என்னென்ன தகவல்கள் கிடைச்சிருக்குனு கொஞ்சம் டீட்டெய்லா தெரிஞ்சுக்குவோம். Redmi நிறுவனம் அவங்களுடைய 11-வது ஆண்டு நிறைவை ஒட்டி, ஜூலை 23, 2025 அன்றும், ஜூலை 24, 2025 அன்றும் என அடுத்தடுத்து இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தப் போறதா உறுதிப்படுத்தியிருக்காங்க. சமூக வலைத்தளங்கள்ல, "இந்தியாவில் கால் பதித்து 11 அற்புதமான ஆண்டுகள் ஆகிவிட்டன! இது தொடங்கிய நாளைக் கொண்டாடும் வகையில், ஒன்று அல்ல, இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை உங்களுக்குக் கொண்டு வருகிறோம்! புதுமையின் அடுத்த அத்தியாயத்தை அனுபவிக்கத் தயாராகுங்கள். 11 ஆண்டுகால அசைக்க முடியாத ஆதரவுக்கு நன்றி!" என்று பதிவிட்டு, இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்காங்க.
Redmi நிறுவனம் இந்த புதிய போன்களோட பெயரையோ, முழுமையான சிறப்பம்சங்களையோ இன்னும் வெளியிடலை. ஆனா, வெளியிடப்பட்ட டீசர்கள்ல ரெண்டு போன்களோட சில பகுதிகள் மட்டும் தெரியுது. ஒரு போன் வெள்ளை நிறத்துலயும், இன்னொரு போன் இரட்டை நிறத்துல (dual-tone burgundy)யும் இருக்கும்னு எதிர்பார்க்கப்படுது.
கசிந்த தகவல்களின்படி, இந்த புதிய போன்கள் Redmi 15 சீரிஸைச் சேர்ந்ததா இருக்கலாம்னு சொல்லியிருக்காங்க. குறிப்பாக, Redmi 15 மற்றும் Redmi 15C மாடல்களாக இருக்கலாம் என ஊகங்கள் பரவியுள்ளன.
டிஸ்ப்ளே: 6.9-இன்ச் 120Hz LCD டிஸ்ப்ளே.
ப்ராசஸர்: MediaTek Helio G81 ப்ராசஸர்.
ரேம் மற்றும் ஸ்டோரேஜ்: 4GB RAM மற்றும் 256GB வரை ஸ்டோரேஜ்.
கேமரா: 50MP பிரைமரி ரியர் கேமரா மற்றும் 13MP செல்ஃபி கேமரா.
பேட்டரி: 6,000mAh பேட்டரி மற்றும் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி.
மற்ற அம்சங்கள்: IP64 ரேட்டிங், NFC, பக்கவாட்டில் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார்.
Redmi நிறுவனம் இந்த போன்களில் மிகப்பெரிய பேட்டரி திறனுக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பதாகவும் டீசர்கள்ல தெரியுது. "சக்திக்கு ஆளாக தயாராகுங்கள். பலவீனமான பேட்டரிகள், சராசரி பவர், மற்றும் வெற்று வாக்குறுதிகளைத் தாண்டி வந்துவிட்டோம். இது #PowerRevolution-ன் ஆரம்பம். #mAhAisComing" என்று Redmi பதிவிட்டுள்ளது. இது நீண்ட பேட்டரி ஆயுளை உறுதிப்படுத்தும் ஒரு குறிப்பாகப் பார்க்கப்படுகிறது.
Redmi கடந்த ஒரு தசாப்தத்திற்கும் மேலாக இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்களின் இந்த 11 ஆண்டு கொண்டாட்ட அறிவிப்பு, புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் மேம்பட்ட பயனர் அனுபவங்களுடன் பட்ஜெட் மற்றும் மிட்-ரேஞ்ச் பிரிவில் புதுமைகளை கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய போன்களின் அதிகாரப்பூர்வ சிறப்பம்சங்கள் மற்றும் விலைகள், வரும் நாட்களில் முழுமையாகத் தெரியவரும். அவை சந்தையில் எந்த அளவுக்கு வரவேற்பைப் பெறும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்