முந்தைய கசிவுகள், ரெட்மி நோட் 9 ப்ரோ சீரிஸில் குவாட் கேமரா அமைப்பு உள்ளன என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளன
ரெட்மி நோட் 9 ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 9 ஆகியவை மார்ச் 12-ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளன என்று நிறுவனம் இந்த வார தொடக்கத்தில் உறுதிப்படுத்தியது. இப்போது, ஒரு புதிய கசிவு ரெட்மி நோட் 9 ப்ரோவின் சாத்தியமான கலர் வேரியண்டுகள் மற்றும் சில விவரக்குறிப்புகள் குறித்து கூடுதல் தகவல்களை அளித்துள்ளது. மேலும், ரெட்மி நோட் 9 ப்ரோ, 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் மற்றும் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ஆகிய இரண்டு வேரியாண்டுகளில் இந்தியாவுக்கு வரும் என்று பரிந்துரைக்கிறது.
மேலும், Redmi Note 9 Pro சீன உற்பத்தியாளரின் வரலாற்றுப் பதிவின் மூலம் விரிவாக்கக்கூடிய ஸ்டோரேஜுடன் வரும் என்று எதிர்பார்க்கலாம் என்று அறிக்கை கூறியுள்ளது. Redmi Note 9 போன்கள் குறைந்தது மூன்று வண்ணங்களில் வரும் - Aurora Blue, Glacier White மற்றும் Interstellar Black. இந்த அறிக்கை ரெட்மி நோட் 9 சீரிஸின் முந்தைய அமேசான் பட்டியலை ஆதரிக்கிறது, இது வரவிருக்கும் போனில் நீல நிற நிழலைக் கிண்டல் செய்தது.
ரெட்மி நோட் 9 ப்ரோ இந்த வாரம் கீக்பெஞ்சிலும் காணப்பட்டது, மேலும் Android 10 அடிப்படையில் MIUI பதிப்பைப் பயன்படுத்துவது குறித்த பட்டியல் சுட்டிக்காட்டப்பட்டது. அது தவிர, கசிவில் மதர்போர்டில் 'கர்டானா' என்று ஒன்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 'கர்டானா' என்றால் என்னவென்று எங்களுக்குத் தெரியாது. ஆனால் இந்த ரெட்மி நோட் 9 ப்ரோ குவால்காமின் ஸ்னாப்டிராகன் 720G SoC-யால் இயங்கும் என்று முன்னர் தெரிவிக்கப்பட்டுள்ளது, ஏனெனில் நிறுவனம் அதன் வரவிருக்கும் போன்களில் புதிய ஸ்னாப்டிராகன் சில்லுகளைப் பயன்படுத்துவதை முன்னர் உறுதி செய்திருந்தது.
இது தவிர, அதிகாரப்பூர்வ அழைப்பிதழை ஷாவ்மி அனுப்பியுள்ளது, ரெட்மி நோட் 9 சீரிஸில் குவாட் கேமரா அமைப்பையும் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த போன்கள் ரூ.10,000 முதல் ரூ.15,000 விலைக்குள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பாடுகிறது. Xiaomi இந்தியா எம்டி, மனு குமார் ஜெயின் ஒரு ட்வீட், அடுத்த தலைமுறை ரெட்மி நோட் ஸ்மார்ட்போன்களில் ஒரு புதிய கேமராவையும் சுட்டிக்காட்டியுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்