இந்த ஸ்மார்ட்போன் 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார், சூப்பர் வைட்-ஆங்கிள் சென்சார், டெப்த் சென்சார் மற்றும் சூப்பர் மேக்ரோ லென்ஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
Photo Credit: Weibo
Redmi Note 8 series: ரெட்மி நோட் 8 சீரிஸ் ஆகஸ்ட் 29 ஆம் தேதி அறிமுகமாக உள்ளது.
ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் தற்போது இணையத்தில் வெளிவந்துள்ளன. ரெட்மி நோட் 7S ஸ்மார்ட்போனில் காணப்படும் ஸ்னாப்டிராகன் 660 SoC ப்ராசஸருக்கு ஒரு படி மேலாக, ஸ்னாப்டிராகன் 665 ப்ராசஸர் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் இயக்கும் என்று சியோமி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வெய்போ பக்கத்தின் புதிய டீஸர்கள் தெரிவிக்கின்றன. மேலும், ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போனின் கேமரா மாதிரிகளை ரெட்மி பொது மேலாளர் லு வெய்பிங் பகிர்ந்துள்ளார், அதே நேரத்தில் ரெட்மி நோட் 8 ப்ரோவைப் போலவே இந்த ஸ்மார்ட்போனும் நான்கு கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும் என்பதை உறுதிப்படுத்துகிறது, ஆனால் இந்த ஸ்மார்ட்போனில் 48 மெகாக்செல் முதன்மை கேமரா சென்சார் பொருத்தப்பட்டிருக்கும்.
ரெட்மி நோட் 8 நான்கு பின்புற கேமரா அமைப்பு மற்றும் கேமராக்களுக்கு அருகில் அமர்ந்திருக்கும் இரட்டை எல்இடி ஃபிளாஷ் ஆகியவற்றுடன் அறிமுகமாகும் என்று சியோமியின் ரெட்மி தனது வெய்போ கணக்கில் அறிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா சென்சார், ஒரு சூப்பர் வைட்-ஆங்கிள் கேமரா சென்சார், டெப்த் கேமரா சென்சார் மற்றும் ஒரு சூப்பர் மேக்ரோ லென்ஸ் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் என்று அந்த பதிவு தெரிவிக்கிறது.
ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போனின் கேமரா திறன்களைக் காட்டும் கேமரா மாதிரிகளையும் வெய்பிங் தனது வெய்போ கணக்கில் பகிர்ந்துள்ளார். படங்களைப் பார்க்கும்போது, ரெட்மி நோட் 8 விவரம் இழக்காமல் நல்ல தரமான இரவு காட்சிகளை எடுக்க முடியும் என்று தெரிகிறது. ரெட்மி நோட் 8 சீரிஸில் சூப்பர் நைட் சீன் பயன்முறை பொருத்தப்பட்டிருக்கும் என்பதையும் வெய்பிங்கின் பதிவு உறுதிப்படுத்துகிறது, இது பயனர்கள் குறைந்த ஒளி புகைப்படங்களை எடுக்க உதவும்.
![]()
![]()
கடைசியாக ரெட்மி நிறுவனத்தின் வெய்போ பதிவு, ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போன் அட்ரினோ 610 GPU-யுடன் இணைக்கப்பட்ட ஸ்னாப்டிராகன் 665 SoC ப்ராசஸர், ஹெக்ஸாகன் 686 டி.எஸ்.பி உடன் மூன்றாம் தலைமுறை AIE செயற்கை நுண்ணறிவு இயந்திரம் மற்றும் ஹெக்ஸாகன் வெக்டர் நீட்டிப்பு (HVX) ஆகியவற்றால் இயக்கப்படும் என்பதையும் உறுதிப்படுத்துகிறது.
ரெட்மி நோட் 8 சீரிஸ் ஆகஸ்ட் 29 ஆம் தேதி அறிமுகமாக உள்ளது. ரெட்மி நோட் 8 Pro ஸ்மார்ட்போன் 64 மெகாபிக்சல் பின்புற முதன்மை கேமரா சென்சார், ஹீலியோ G90T ப்ராசஸர் மற்றும் 4,500mAh பேட்டரி ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Mappls' MapmyIndia Eyes Collaboration With Perplexity AI After CEO’s Comment on Mapping Challenges