இந்தியாவில் Redmi Note 8-ன் 4GB RAM + 64GB ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ. 9,999-யாகவும், 6GB + 128GB வேரியண்டின் விலை ரூ. 12,999-யாகவும் உள்ளது.
Redmi Note 8, அதன் குவாட் ரியர் கேமரா அமைப்பில் 48-மெகாபிக்சல் முதன்மை சென்சாரைக் கொண்டுள்ளது
Redmi Note 8, அதன் வாராந்திர ஃபிளாஷ் விற்பனையின் ஒரு பகுதியாக இன்று இந்தியாவில் விற்பனைக்கு வரும். நினைவுகூர, ஸ்மார்ட்போன் கடந்த மாதம் இந்தியாவில் அதன் சிறந்த தொடரான - Redmi Note 8 Pro-வுடன் அறிமுகப்படுத்தப்பட்டது. Redmi Note 8 Pro-வின் மிகப்பெரிய சிறப்பம்சமாக அதன் குவாட் ரியர் கேமரா அமைப்பில் அதன் 48-மெகாபிக்சல் முதன்மை கேமரா உள்ளது. இது Qualcomm Snapdragon 665 SoC-யால் இயக்கப்படுகிறது மற்றும் 8 ஜிபி ரேம் வரை வருகிறது. இந்தியாவில் இன்று Redmi Note 8 Pro-வின் விற்பனை, இந்தியாவில் அதன் விலை, விற்பனை சலுகைகள் மற்றும் வெளியீட்டு தேதி குறித்த விவரங்களைப் படியுங்கள்.
இந்தியாவில் Redmi Note 8-ன் விலை, விற்பனை சலுகைகள்:
இந்தியாவில் Redmi Note 8-ன் 4GB RAM + 64GB ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ. 9,999-ல் தொடங்குகிறது. 6GB + 128GB வேரியண்டின் விலை ரூ. 12,999-யாக உள்ளது. குறிப்பிட்டுள்ளபடி, Redmi Note 8 ஆனது Redmi Note 8 Pro-வுடன் கடந்த மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது
Redmi Note 8, இன்று மதியம் 12 மணிக்கு Amazon மற்றும் Mi.com வழியாக விற்பனைக்கு வரும். Mi.com-ன் விற்பனை சலுகைகளில் HDFC, Axis Bank மற்றும் HSBC கார்டுகளில் உடனடி கேஷ்பேக் மற்றும் Airtel டேட்டா சலுகை ஆகியவை அடங்கும். Mi.com-ல் வாங்குபவர்களுக்கு இதேபோன்ற Airtel டேட்டா சலுகை கிடைக்கிறது.
Redmi Note 8-ன் விவரக்குறிப்புகள்:
Redmi Note 8-ன் விவரக்குறிப்புகளில் 6.39-inch full-HD+ (1080x2280 pixels) டிஸ்பிளே; Qualcomm Snapdragon 665 SoC; 6GB RAM; microSD card வழியாக (512GB வரை) விரிவாக்கக்கூடிய 128GB ஆன்போர்டு ஸ்டோரே; குவாட் பின்புற கேமரா அமைப்பு (48-megapixel + 8-megapixel + இரண்டு 2-megapixel கேமராக்கள்); ஒரு 13-megapixel செல்ஃபி கேமரா மற்றும் 4,000mAh பேட்டரி ஆகியவை அடங்கும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Redmi Note 15 Series India Launch Timeline Tipped; Redmi 15C Could Debut This Month