டிசம்பர் 11-ல் Redmi Note 8 Pro-வின் அடுத்த விற்பனை! Amazon India, Mi.com மற்றும் Mi Home stores வழியாக வாங்கலாம்!

டிசம்பர் 11-ல் Redmi Note 8 Pro-வின் அடுத்த விற்பனை! Amazon India, Mi.com மற்றும் Mi Home stores வழியாக வாங்கலாம்!

Redmi Note 8 Pro, 8GB RAM கொண்ட மூன்று தனித்துவமான வகைகளில் வருகிறது

ஹைலைட்ஸ்
  • Redmi Note 8 Pro நான்கு வண்ண விருப்பங்களில் விற்பனைக்கு வரும்
  • ஜியோமி போன் MediaTek Helio G90T SoC மூலம் இயக்கப்படுகிறது
  • Redmi Note 8 Pro 64 மெகாபிக்சல் முதன்மை சென்சாருடன் வருகிறது
விளம்பரம்

Redmi Note 8 Pro டிசம்பர் 11-ஆம் தேதி இந்தியாவில் மீண்டும் விற்பனைக்கு வருகிறது. சமீபத்திய விற்பனை சுற்று மூலம், ரெட்மி போன் மதியம் 12 மணி முதல் வாங்குவதற்கு கிடைக்கும். இந்த விற்பனை Amazon India, Mi.com மற்றும் Mi Home stores மூலம் நடைபெறும்.


இந்தியாவில் Redmi Note 8 Pro-வின் விலை, விற்பனை சலுகைகள்:

இந்தியாவில் Redmi Note 8 Pro-வின் 6GB RAM + 64GB ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ. 14,999-யாக நிர்ணயிக்கப்படுள்ளது. அதே சமயம் அதன் 6GB RAM + 128GB ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ. 15,999-யாக விலையிடப்படுள்ளது. அதன் top-end 8GB RAM + 128GB ஸ்டோரேஜ் மாடல் ரூ. 17,999-ஆக விலைக் குறியீட்டைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் Gamma Green, Halo White, Shadow Black மற்றும் Electric Blue வண்ண விருப்பங்களில் வருகிறது. மேலும், இந்த போன் Amazon, Mi.com மற்றும் Mi Home stores மூலம் டிசம்பர் 11-ஆம் தேதி மதியம் 12 மணி முதல் வாங்குவதற்கு கிடைக்கும்.

போன் வேரியண்ட் விலை (ரூ.)
Redmi Note 8 Pro 6GB+64GB 14,999
Redmi Note 8 Pro 6GB+128GB 15,999
Redmi Note 8 Pro 8GB+128GB 17,999

இந்த வார தொடக்கத்தில் ஜியோமி, Redmi Note 8 மற்றும் Redmi Note 8 Pro-வின் ஒருங்கிணைந்த விற்பனை, உலகளவில் 10 மில்லியன் யூனிட்டுகளை தாண்டிவிட்டதாக அறிவித்தது. Redmi Note 8 சீரிஸும் இந்தியாவில் ஒரு மில்லியன் விற்பனையின் மைல்கல்லை தாண்டியது.


Redmi Note 8 Pro-வின் விவரக்குறிப்புகள் மற்றும் சிறப்பம்சங்கள்:

டூயல்-சிம் (நானோ) Redmi Note 8 Pro MIUI 10 உடன் Android 9 Pie-ஐ இயக்குகிறது. ஆனால், ஜியோமி விரைவில் MIUI 11-ஐ மேம்படுத்துவதாக உறுதியளித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 19.5:9 aspect ratio உடன் 6.53-inch full-HD+ (1080 x 2340 pixels) HDR டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. ஹூட்டின் படி, 8GB RAM வரை இணைக்கப்பட்டு, octa-core MediaTek Helio G90T SoC-யால் இயக்கப்படுகிறது.

புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு, Redmi Note 8 Pro, 8-megapixel ultra-wide-angle camera, a 2-megapixel depth சென்சார் மற்றும் 2-megapixel macro lens உதவியுடன் f/1.89 lens உடன் 64-megapixel முதன்மை சென்சார் ஆகியவை quad rear கேமரா அமைப்பில் அடங்கும். ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் f/2.0 lens உடன் 20-megapixel செல்ஃபி கேமரா சென்சாரும் அடங்கும்.

Redmi Note 8 Pro Review

Redmi Note 8 Pro, 128GB ஆன்போர்டு ஸ்டோரேஜைக் கொண்டுள்ளது. இணைப்பு விருப்பங்களில் Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS, IR blaster, USB Type-C மற்றும் 3.5mm headphone jack ஆகியவை அடங்கும். தவிர, இந்த போன் 18W வேகமான சார்ஜிங் ஆதரவுடன் 4,500mAh பேட்டரியை பேக் செய்கிறது.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
  1. Nothing நிறுவனத்திடம் இருந்து இப்படி ஒரு செல்போனை எதிர்பார்க்கலாம்
  2. Galaxy S25 Edge செல்போன் சஸ்பென்ஸ் மேல் சஸ்பென்ஸ் எகிறவிடும் சாம்சங்
  3. Samsung Galaxy S25 Ultra புடிச்சா குதிரை கொம்பா தான் புடிக்கணும்
  4. Samsung Galaxy S25, Galaxy S25+ கொடுக்கும் விலைக்கு என்ன இருக்கு இதில்?
  5. WhatsApp Status வைத்தால் Facebook, Instagram போகும்! அதிரி புதிரி அப்டேட்
  6. Redmi K90 Pro செல்போன் மிரள விடும் அம்சங்களுடன் வருகிறது
  7. இந்தியாவுக்கு வரும் புது iQOO போன் எல்லாமே சும்மா மெர்சல் ரகம்
  8. அண்டத்தை கண்காணிக்கும் சிசிடிவியா இந்த ஹபிள் தொலைநோக்கி?
  9. இது மட்டும் தெரிந்திருந்தால் Samsung Galaxy S25 செல்போனே வாங்கி இருப்பேனே
  10. வீடியோ செம்மயா வரும்! Instagram தரப்போகும் செம்ம எடிட் வசதிகள்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »