Photo Credit: Weibo
Redmi Note 8 Pro நான்கு கேமராக்களுடன் 64 மெகாபிக்சல் முதன்மை கேமராவை கொண்டுள்ளது
சீனாவில் ரெட்மி நோட் 8 தொடர் ஸ்மார்ட்போன்களுக்கான முன் பதிவுகள் தொடங்கப்பட்ட ஒரு நாளில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான முன்பதிவுகளைக் பெற்றுள்ளது. இந்த தகவலை சியோமி நிறுவனம் அறிவித்துள்ளது. ரெட்மி நோட் 8 தொடரில் ரெட்மி நோட் 8 மற்றும் ரெட்மி நோட் 8 புரோ ஆகியவை ஆகஸ்ட் 29 ஆம் தேதி அதிகாரப்பூரவமாக சீனாவில் அறிமுகமாகவுள்ளது. ரெட்மி நோட் 8 ப்ரோ, ரெட்மி நோட் 7 ப்ரோவின் அடுத்த தலைமுறை ஸ்மார்ட்போனாகவும், ரெட்மி நோட் 8 முன்னதாக வெளியான ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போனின் அடுத்த வாரிசை ஸ்மார்ட்போனாக அறிமுகமாக இருக்கிறது. ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் 64 மெகாபிக்சல் முதன்மை கேமரா சென்சாருடன் நான்கு பின்புற கேமரா அமைப்பை கொண்டுள்ளது என்பது ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. புதிய ரெட்மி நோட் ஸ்மார்ட்போன்களின் பேட்டரி திறனும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது, மேலும் கேமரா மாதிரிகளும் பகிரப்பட்டுள்ளன.
ரெட்மி நோட் 8 தொடர் ஒரு மில்லியனுக்கும் அதிகமான முன்பதிவுகளைத் தாண்டிவிட்டதாக வெய்போ பதிவின் மூலம் சியோமி அறிவித்துள்ளது. இந்த வார தொடக்கத்தில் நேரலைக்கு வந்த Mi.com தளத்தின் பதிவுப் பக்கம், ரெட்மி நோட் 8 மற்றும் ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் முறையான அறிமுகத்திற்கு முன்னதாகனவே 1.51 மில்லியனுக்கும் அதிகமான முன்பதிவுகளை பெற்றுள்ளது என்பதையும் குறிப்பிடுகிறது.
சியோமி தனது ரெட்மி நோட் ஸ்மார்ட்போன்களுக்கு இந்த அளவிலான முன்பதிவுகளை பெறுவது இது முதல் முறை அல்ல. இந்த வார தொடக்கத்தில், ரெட்மி நோட் 8 தொடரின் முந்தைய தொடரான ரெட்மி நோட் 7 தொடர் உலகளவில் 20 மில்லியன் அளவிலான ஸ்மார்ட்போன்கள் விற்பனையாகியுள்ளது என்ற மைல்கல்லை தாண்டியது.
சமீபத்திய வெளியான டீசரை வைத்து பார்க்கையில், ரெட்மி நோட் 8 தொடர் கேமிங் ஸ்மார்ட்போனாக இருக்கும். இந்த ஸ்மார்ட்போன்களில் திரவ குளிரூட்டல் மற்றும் நீண்ட பேட்டரி ஆயுள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, ரெட்மி நோட் 8 ப்ரோ மீடியாடெக் ஹீலியோ ஜி 90 டி எஸ் ஓ சி ப்ராசஸருடன் அறிமுகமாகவுள்ளது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது, மேலும் நான்கு பின்புற கேமராக்கள், 64 மெகாபிக்சல் முதன்மை சென்சாருடன். ஸ்மார்ட்போனில் 25x ஜூம் ஆதரவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரெட்மி நோட் 8 ப்ரோ 4,500mAh பேட்டரியை கொண்டிருக்கும் என்பதை ரெட்மி பொது மேலாளர் லு வெய்பிங் ஒரு தனி டீஸரில் உறுதிப்படுத்தினார். கைபேசியில் 18W வேகமான சார்ஜிங் வசதி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
64 மெகாபிக்சல் முதன்மை கேமரா இருப்பதை முன்னிலைப்படுத்த வெய்போவில் இரண்டு ரெட்மி நோட் 8 ப்ரோ கேமரா மாதிரிகளையும் வெயிபிங் வெளியிட்டார். படங்களில் ஒன்று 64 மெகாபிக்சல் தரம் கொண்டதாகக் கூறப்படும் ஒரு சுவரொட்டியைக் காண்பிக்கிறது, மற்றொரு புகைப்படம் டி வாங் கோபுரத்தின் மேல் தளங்களைக் காட்டுகிறது.
ரெட்மி நோட் 8 மற்றும் ரெட்மி நோட் 8 ப்ரோ ஆகியவை ஆகஸ்ட் 29 ஆம் தேதி சீனாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. அவை முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட உடனேயே, இரு கைபேசிகளும் இந்தியா உள்ளிட்ட பிற சந்தைகளில் அறிமுகமாகலாம்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்