Photo Credit: Weibo
Redmi Note 8 மற்றும் Redmi Note 8 Pro ஸ்மார்ட்போன்கள் அதிகாரப்பூர்வமாக சீனாவில் ஆகஸ்ட் 29 அன்று அறிமுகமாகவுள்ளது. ஆனால், தற்போது இந்த ஸ்மார்ட்போனின் சேமிப்பு வகைகள் பற்றிய தகவல்கள் கசிந்துள்ளன. அதும்ட்டுமின்றி, இந்த சேமிப்பு வகைகளின் விலையும் வெளியாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் குறித்த சில தகவல்களை சியோமி நிறுவனம் வெளியிட்ட வண்ணமே இருந்தது. முன்னதாக, ரெட்மியின் பொது மேலாளர் லூ வெய்பிங் Redmi Note 8 Pro ஸ்மார்ட்போனின் தோற்றம் எப்படி இருக்கும் என்பது பற்றிய டீசர்களை வெளியிட்டார். சியோமியின் தலைவர் லின் டின், Redmi Note 8 Pro ஸ்மார்ட்போனின் பேட்டரி 2 நாட்கள் நீடிக்கிறது என அறிவித்திருந்தார். அதுமட்டுமின்றி, Redmi Note 8 Pro ஸ்மார்ட்போன் பிரத்யேகமாக வார்கிராப்ட் எடிசனில் அறிமுகமாகும் எனவும் சியோமி நிறுவனம் அறிவித்திருந்தது.
91Mobiles வெளியிட்ட சமீபத்திய கசிவுகளின்படி, Redmi Note 8 Pro ஸ்மார்ட்போன் 6GB RAM + 128GB சேமிப்பு அளவுடன் 1,799 யுவான்கள் (சுமார் 18,000 ரூபாய்) என்ற விலையிலும், 8GB RAM + 128GB சேமிப்பு வகை 2,099 யுவான்கள் (சுமார் 21,000 ரூபாய்) என்ற விலையில் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் Redmi Note 8 ஸ்மார்ட்போன் 4GB RAM + 64GB சேமிப்பு வகையில் 1,199 யுவான்கள் (சுமார் 12,000 ரூபாய்) என்ற விலையில் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இந்த தகவல்கள் உறுதியானது அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
கூடுதலாக, பொது மேலாளர் லூ வெய்பிங் பின்க் நிற வண்ணத்திலான பேக்கிங் கொண்ட Redmi Note 8 Pro ஸ்மார்ட்போனின் புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். மறுபுறம், சியோமியின் தலைவர் லின் டின் இந்த ரெட்மி ஸ்மார்ட்போன் 2 நாட்கள் நீடிக்கும் பேட்டரியை கொண்டுள்ளது என தனிப்பதிவு ஒன்றில் குறிப்பிட்டிருந்தார். முன்னதாக சியோமி நிறுவனம் Redmi Note 8 Pro ஸ்மார்ட்போன் 4,500mAh பேட்டரி மற்றும் 18W விரைவு சார்ஜர் ஆகியவற்றை கொண்டிருக்கும் என அறிவித்திருந்தது.
சியோமி நிறுவனம், இந்த Redmi Note 8 Pro ஸ்மார்ட்போன் 'வோர்ல்ட் ஆப் வார்கிராப்ட் எடிசன்' என்று ஒரு புதிய எடிசனின் டீசரை வெளியிட்டிருந்தது.
முன்னதாகவே இந்த Redmi Note 8 Pro ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ G90T SoC ப்ராசஸர், 9248 x 6936 பிக்சல் புகைப்படங்களை எடுக்கும் திறன் கொண்ட 64 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 25x ஜூம் திறன் ஆகியவற்றை கொண்டுள்ளது என சியோமி நிறுவனம் தகவல் வெளியிட்டிருந்தது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்