Photo Credit: Weibo
ரெட்மி நோட் 8 மற்றும் ரெட்மி நோட் 8 ப்ரோ ஆகிய ஸ்மார்ட்போன்கள் ஆகஸ்ட் 29-ஆம் தேதி சீனாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளன என்று சியோமியின் துணை நிறுவனமான ரெட்மி, வெய்போ பதிவு மூலம் அறிவித்துள்ளது. பெய்ஜிங்கை தளமாகக் கொண்ட இந்த நிறுவனம் தனது முதல் ரெட்மி-தொடர் ஸ்மார்ட் டிவியை வெளியிட திட்டமிட்டுள்ள நிகழ்வில், இந்த ஸ்மார்ட்போன் வெளியீடு நடைபெறும். ரெட்மி நோட் குடும்பத்தில் புதிதாக நுழைந்துள்ள ரெட்மி நோட் 8 மற்றும் ரெட்மி நோட் 8 ப்ரோ ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களும், இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ரெட்மி நோட் 7 மற்றும் ரெட்மி நோட் 7 ப்ரோ ஆகியவற்றின் அடுத்த தலைமுறை ஸ்மார்ட்போன்களாக அறிமுகமாகவுள்ளது. ரெட்மி நோட் 8 ப்ரோ 64 மெகாபிக்சல் முதன்மை கேமரா சென்சார் கொண்ட முதல் ரெட்மி ஸ்மார்ட்போனாக அறிமுகமாகலாம்.
ரெட்மி நோட் 8 மற்றும் ரெட்மி நோட் 8 ப்ரோவின் முறையான வெளியீட்டு தேதியை அறிவிக்கும் வெய்போ பதிவு ஒரு டீஸர் படத்தையும் காட்டுகிறது. ரெட்மி நோட் 8 ப்ரோவில் எல்.ஈ.டி ஃபிளாஷ் உடன் நான்கு பின்புற கேமரா அமைப்பு இருப்பதை அந்த டீசர் காட்டுகிறது. மேலும், இந்த டீசர் படம் 64 மெகாபிக்சல் கேமரா சென்சாரையும் உறுதிப்படுத்துகிறது.
இருப்பினும், 64 மெகாபிக்சல் கேமரா ரெட்மி நோட் 8 ப்ரோவுக்கு பிரத்யேகமாக இருக்குமா அல்லது ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போனிலும் இடம்பெறுமா என்பது தெளிவாக குறிப்பிடப்படவில்லை.
இந்த மாத தொடக்கத்தில், 64 மெகாபிக்சல் கேமராவுடன் புதிய ரெட்மி ஸ்மார்ட்போனை கொண்டு வருவதாக சியோமி அறிவித்தது. இந்த கேமரா சென்சார் சாம்சங்கின் ஐசோசெல் பிரைட் ஜி.டபிள்யூ 1 (ISOCELL Bright GW1) ஆக இருக்கும் என்று சியோமி நிறுவனம் தெரிவித்திருந்தது. இந்த புதிய சென்சார் கொண்ட ஸ்மார்ட்போன் இந்த ஆண்டின் நான்காவது காலாண்டில் இந்தியாவில் அறிமுகமாகும் எனவும் குறிப்பிட்டிருந்தது.
சியோமியைப் போலவே, போட்டியாளரான ரியல்மீ நிறுவனமும் சாம்சங் கண்டுபிடிப்புகளை பயன்படுத்திடுள்ளது, அதன்படி இந்த நிறுவனத்தின் முதல் 64 மெகாபிக்சல் கேமரா ஸ்மார்ட்போனான Realme XT ஸ்மார்ட்போனை செப்டம்பர் மாதத்தின் பிற்பகுதியில் இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது.
மே மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய கேமரா சென்சார், டெட்ராசெல் மற்றும் 3 டி எச்டிஆர் தொழில்நுட்பங்களைக் கொண்டுள்ளது. இது கூடுதல் விவரங்களுடன் படங்களை எடுக்க வடிவமைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக ரெட்மி நோட் 8 தொடர்பான சில சமீபத்திய கசிவுகள் புதிய தொலைபேசி 18W சார்ஜிங் ஆதரவு மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்டுடன் வரக்கூடும் என்று கூறியுள்ளன.
ஆகஸ்ட் 29 நிகழ்வில், சியோமி புதிய 70-இன்ச் ரெட்மி டிவியையும் அறிமுகப்படுத்த உள்ளது. தலைமை நிர்வாக அதிகாரி லீ ஜுன் சமீபத்தில் தனது வெய்போ கணக்கு மூலம் ஸ்மார்ட் டிவியின் அறிவிப்பை வெளியிட்டார். மேலும், இந்த வார தொடக்கத்தில் வெளியிடப்பட்ட ஒரு அதிகாரப்பூர்வ படம் ரெட்மி டிவியில் மெல்லிய பெசல்களை (thin bezels) பரிந்துரைக்கிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்