Helio G90T SoC மற்றும் 6.53-inch full-HD+ display-வைக் கொண்டுள்ளது Redmi Note 8 Pro
Photo Credit: Twitter/ Redmi India
Redmi Note 8 Pro, 20-megapixel selfie camera-வைக் கொண்டுள்ளது
Redmi Note 8 Pro, அக்டோபர் 16 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. # 64MPQuadCamBeast என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி ட்விட்டரில் புதிய தொலைபேசியின் வெளியீட்டு தேதியை ஜியோமி உறுதிப்படுத்தியுள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் இந்த தொலைபேசி சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. அறிமுகமான உடனே, Redmi Note 8 Pro இரண்டு மாதங்களுக்குப் பிறகு சோதனை மற்றும் சான்றிதழ் செயல்முறைகள் முடிந்ததும், இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று இந்தியத் தலைவர் மனு குமார் ஜெயின் (Manu Kumar Jain) கூறியிருந்தார்.
விலையைப் பொறுத்தவரை, Redmi Note 8 Pro இந்திய விலை இன்னும் அறியப்படவில்லை. ஆனால் சீனாவின் விலைக்கு அருகில் இருக்க வேண்டும். நினைவுகூர, Redmi Note 8 Pro அதன் 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜ் CNY 1,399 (தோராயமாக ரூ. 14,000)-யாக சில்லறை விற்பனை செய்யும். 6 ஜிபி + 128 ஜிபி மற்றும் 8 ஜிபி + 128 ஜிபி மாடல்களின் விலை முறையே CNY 1,599 (தோராயமாக ரூ. 16,000) மற்றும் CNY 1,799 (தோராயமாக ரூ .18,000)-யாக உள்ளது.
Redmi Note 8 Pro-வின் விவரக்குறிப்புகள்
Redmi Note 8 Pro இரட்டை சிம்மை ஆதரிக்கிறது. Android Pie அடிப்படையிலான MIUI 10-ல் இயங்குகிறது, 6.53-inch full-HD+ (1080x2340 pixels) screen-ஐ கொண்டுள்ளது. மேலும் MediaTek's புதிய gaming-focussed செய்யப்பட்ட MediaTek Helio G90T SoC மூலம் இயக்கப்படுகிறது. இது 8 ஜிபி ரேம் வரை பேர் செய்யப்பட்டுள்ளது. Redmi Note 8 Pro பயனர்களுக்கான கேமிங் அனுபவத்தை மேம்படுத்த ஸ்மார்ட்போனில் திரவ குளிரூட்டும் ஆதரவையும் ஜியோமி சேர்த்ததுள்ளது. தொலைபேசியில் உள்ள பிற gaming-centric அம்சங்களில் Game Turbo 2.0 பயன்முறை அடங்கும்.
Pro வேரியண்ட் 64 மெகாபிக்சல் பிரதான கேமரா கொண்ட நிறுவனத்தின் முதல் போன் ஆகும். Redmi Note 8 - 8 மெகாபிக்சல் wide-angle shooter and two 2-megapixel cameras போன்ற கேமரா அமைப்பால் பிரதான ஷூட்டர் இணைக்கப்பட்டுள்ளது. முன்பக்கத்தில், 20 மெகாபிக்சல் செல்பி கேமரா உள்ளது. இது 18W fast charging, NFC, USB Type-C port, 3.5mm audio jack, IR blaster ஆதரவுடன் 4,500mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. Redmi Note 8 Pro ஸ்மார்ட்போனும் IP52 சான்றிதழ் பெற்றது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Amazon Demands Perplexity Stop AI Tool From Making Purchases