Photo Credit: Twitter/ Manu Kumar Jain
சியோமியின் புதிய Redmi Note 8 Pro, Redmi Note 8 ஸ்மார்ட்போன்கள் நேற்று வெற்றிகரமாக சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது இந்த ஸ்மார்ட்போன்களின் இந்திய வருகையில் எந்த ஒரு சந்தேகமும் இன்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவில் இந்த ஸ்மார்ட்போன்கள் அறிமுகமான சிறிது நேரத்திலேயே இந்த ஸ்மார்ட்போன்கள், சியோமியின் தலைமை நிர்வாக அதிகாரி மனு குமார் ஜெய்ன், இந்த ஸ்மார்ட்போன்கள் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் என்பதை குறிப்பிட்டார். மனு குமார் தனது டிவிட்டர் பதிவில், ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகமாவதற்கு முன்பு, தேர்வுகள் மற்றும் சான்றிதழ் அங்கீகாரம் ஆகியவற்ற கடந்து வர வேண்டியுள்ளது என்று குறிப்பிட்டிருந்தார். மேலும், அவர் இன்னும் 8 வாரங்களில் இந்த நோட் 8 ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகமாகும் எனவும் குறிப்பிட்டிருந்தார். முன்னதாக, ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன்கள் முதலில் இந்தியாவிலேயே அறிமுகமானது அதன்பின் சீனாவில் அறிமுகமானது.
Mi Fans. Thank u for your excitement for #RedmiNote8Pro, world's 1st phone to be launched with #64MP Quad Camera
— #MiFan Manu Kumar Jain (@manukumarjain) August 29, 2019
We'll do our best to bring them to India asap! However, certification & testing might take ~8 weeks. Will keep you posted.
8 weeks for #RedmiNote8! #Xiaomi https://t.co/DCzdUviz7p
நேற்று சீனாவில் அறிமுகமான இந்த ஸ்மார்ட்போன்களில் Redmi Note 8 Pro ஸ்மார்ட்போன் செப்டம்பர் 3-ல் சீனாவில் முதல் விற்பனையை சந்திக்கவுள்ளது. இதனுடன் அறிமுகமான Redmi Note 8 ஸ்மார்ட்போன் செப்டம்பர் 17-ல் சீனாவில் முதல் விற்பனையை சந்திக்கவுள்ளது.
Redmi Note 8 ஸ்மார்ட்போனின் 4GB RAM + 64GB சேமிப்பு வகை 999 யுவான்கள் (சுமார் 10,000 ரூபாய்) என்ற விலையில் அறிமுகமாகியுள்ளது. 6GB + 64GB மற்றும் 6GB + 128GB என மேலும் இரண்டு வகைகளில் அறிமுகமாகியுள்ள இந்த ஸ்மார்ட்போன் 1,199 யுவான்கள் (12,000 ரூபாய்) மற்றும் 1,399 யுவான்கள் (14,000 ரூபாய்) என்ற விலைகளில் அறிமுகமாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் நீலம் (Dream Blue), கருப்பு (Meteorite Black), மற்றும் வெள்ளை (White) என மூன்று நிறங்களில் அறிமுகமாகியுள்ளது.
Redmi Note 8 Pro ஸ்மார்ட்போனை பொருத்தவரை 6GB RAM + 64GB சேமிப்பை கொண்ட அடிப்படை வகை 1,399 யுவான்கள் (சுமார் 14,000 ரூபாய்) என்ற விலையில் அறிமுகமாகியுள்ளது. 6GB + 128GB மற்றும் 8GB + 128GB என மேலும் இரண்டு வகைகளில் அறிமுகமாகியுள்ள இந்த ஸ்மார்ட்போன் 1,599 யுவான்கள் (16,000 ரூபாய்) மற்றும் 1,799 யுவான்கள் (18,000 ரூபாய்) என்ற விலைகளில் அறிமுகமாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் வெள்ளை (Pearl White), மரகதம் (Ice Emerald), மற்றும் சாம்பல் (Electric Light Grey) என மூன்று நிறங்களில் அறிமுகமாகியுள்ளது.
Redmi Note 8 Pro ஸ்மார்ட்போனும் இரண்டு நானோ சிம் வசதி கொண்டு, ஆண்ட்ராய்ட் 9 பை அமைப்பை அடிப்படையாக கொண்டு MIUI 10 மூலம் இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் Redmi K20-ஐ போன்றே 6.53-இந்க் FHD+ (1080x2340 பிக்சல்கள்) திரை, 90 சதவிகித திரை-உடல் விகிதம் மற்றும் 19.5:9 திரை விகிதம் ஆகிய திரை அம்சங்களை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் முன் மற்றும் பின் என இரண்டு புறங்களிலும் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், முன்புறத்தில் வாட்டர்-ட்ராப் நாட்ச் திரையை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ G90T SoC ப்ராசஸரை கொண்டு இயங்குகிறது. இது மட்டுமின்றி கேமிங் அனுபவத்தை கணக்கில் கொண்டு, இந்த ஸ்மார்ட்போனில் கேம் டர்போ 2.0 மோட் (Game Turbo 2.0 mode) வசதி சேர்க்கப்பட்டுள்ளது.
கேமராக்களை பொருத்தவரை Redmi Note 8 Pro ஸ்மார்ட்போன் நான்கு பின்புற கேமரா அமைப்பை கொண்டுள்ளது. 64 மெகாபிக்சல் அளவிலான முதன்மை கேமராவை இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. மற்றபடி Redmi Note 8 ஸ்மார்ட்போனை போன்றே 8 மெகாபிக்சல் அளவிலான வைட்-ஆங்கிள் கேமரா, மற்றும் இரண்டு 2 மெகாபிக்சல் கேமரா என மிதமுள்ள மூன்று கேமராக்கள் அமைந்துள்ளது. முன்புறத்தில் 20 மெகாபிக்சல் செல்பி கேமராவை கொண்டுள்ளது.
Redmi Note 8 Pro ஸ்மார்ட்போன் 4,500mAh பேட்டரி மற்றும் 18W விரைவு சார்ஜர், டைப்-C சார்ஜர், 3.5mm ஆடியோ ஜாக் ஆகிய தொடர்பு வசதிகளை கொண்டுள்ளது.
இரண்டு நானோ சிம் வசதி கொண்ட Redmi Note 8, ஆண்ட்ராய்ட் 9 பை அமைப்பை அடிப்படையாக கொண்டு MIUI 10 மூலம் இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் Redmi K20-ஐ போன்றே 6.39-இந்த FHD+ (1080x2340 பிக்சல்கள்) திரை, 90 சதவிகித திரை-உடல் விகிதம் மற்றும் 19.5:9 திரை விகிதம் ஆகிய திரை அம்சங்களை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் முன் மற்றும் பின் என இரண்டு புறங்களிலும் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், முன்புறத்தில் வாட்டர்-ட்ராப் நாட்ச் திரையை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னேப்டிராகன் 665 SoC பிராசஸரை கொண்டுள்ளது.
கேமராக்களை பொருத்தவரை Redmi Note 8 ஸ்மார்ட்போன் நான்கு பின்புற கேமரா அமைப்பை கொண்டுள்ளது. 48 மெகாபிக்சல் அளவிலான முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் அளவிலான வைட்-ஆங்கிள் கேமரா, மற்றும் இரண்டு 2 மெகாபிக்சல் கேமரா என நான்கு கேமராக்களை கொண்டுள்ளது. முன்புறத்தில் 13 மெகாபிக்சல் செல்பி கேமராவை கொண்டுள்ளது.
Redmi Note 8 ஸ்மார்ட்போன் 4,000mAh பேட்டரி மற்றும் 18W விரைவு சார்ஜர், டைப்-C சார்ஜர், 3.5mm ஆடியோ ஜாக் ஆகிய தொடர்பு வசதிகளை கொண்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்