இந்த ஸ்மார்ட்போன் கேமரா ஸ்டில் ஃபோட்டோ பிரிவில் 87 மற்றும் வீடியோ பிரிவில் 78 மதிப்பெண்களைப் பெற்றது.
Redmi Note 8 Pro, பின்புறத்தில் 64-மெகாபிக்சல் குவாட் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது
Xiaomi-யின் Redmi Note 8 Pro-வின் ரசிகரா? சுவாரஸ்யமான வன்பொருளைக் பெற்றிருந்தாலும், ஸ்மார்ட்போனின் கேமராக்கள், பிரபலமான DxOMark கேமரா சோதனையில் 84 மதிப்பெண்கள் பெற்றன. இது, Black Shark 2 மற்றும் LG V30 மதிப்பெண்களுக்கு இணையானது என்பதை நீங்கள் அறிந்து கொள்ளலாம். தெரியாதவர்களுக்கு, DxOMark என்பது DxOMark பட ஆய்வகங்களுக்கு சொந்தமான ஒரு மதிப்பீட்டு வலைத்தளம் மற்றும் பதிவுக்காக, போன் கேமராக்களை சோதிக்கும் போது இந்த வலைத்தளம் சில ஆண்டுகளாக மிகவும் பிரபலமாக உள்ளது.
DxOMark மேற்கொண்ட மதிப்பாய்வின் படி, Redmi Note 8 Pro-வின் மொத்த கேமரா ஸ்கோர் 84 ஆகும். இதில் ஸ்மார்ட்போனின் கேமரா ஸ்டில் ஃபோட்டோ பிரிவில் 87 மற்றும் வீடியோ பிரிவில் 78 மதிப்பெண்களைப் பெற்றது. முதலில் புகைப்பட வகையைப் பற்றி பேசுகையில், 87 மதிப்பெண் ஆட்டோஃபோகஸ் சோதனைகளில் ஒப்பிட்ட அளவில் நல்ல செயல்திறன், bokeh மோடில் நல்ல பொருள் தனிமைப்படுத்தல் மற்றும் குறைந்த சுற்றுப்புற ஒளி மட்டங்களில் ஃபிளாஷ் பயன்படுத்தும் போது நல்ல இலக்கு வெளிப்பாடு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. இருப்பினும், ஒரு பெரிய சென்சார் இடம்பெற்றிருந்தாலும், படங்களில் மிகச்சிறந்த விவரம் இல்லாதது மற்றும் Note 8 Pro-வில் முன்னேற்றம் தேவைப்படும் பல பகுதிகள் உள்ளன.
வீடியோ வகையைப் பொறுத்தவரை, 78 மதிப்பெண் DxOMark-ன் தரவரிசையின் கீழ் இறுதியில் உள்ளது. வீடியோ முடிவுகள் வழக்கமாக வெளியில் அல்லது வழக்கமான உட்புற நிலைமைகளின் கீழ் பதிவுசெய்யும்போது நல்ல இலக்கு வெளிப்பாட்டைக் காண்பிக்கும். ஆனால், இன்னும் புகைப்படங்களைப் போலவே, வீடியோ காட்சிகளிலும் பல சிக்கல்கள் உள்ளன, அவை மேம்படுத்தப்பட வேண்டும். மேலும், Redmi Note 8 Pro, 4K வீடியோவைப் பதிவுசெய்யும் திறன் கொண்டது. ஆனால், 4K-வில் கூட விவரம் அளவுகள் குறைவாக உள்ளன. அதே நேரத்தில், அனைத்து ஒளி நிலைகளிலும் சற்று க்ரென்ஸ் தெரியும்.
Redmi Note 8 Pro-வின் 6GB RAM + 64GB ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ. 14,999-யாகவும், அதன் 6GB RAM + 128GB ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ. 15,999-யாகவும், அதன் டாப்-எண்ட் 8GB RAM + 128GB ஸ்டோரேஜ் வேரியண்ட். 17,999-யாகவும் உள்ளது. இந்த போன் Gamma Green, Halo White மற்றும் Shadow Black ஆகிய கலர் ஆப்ஷன்களில் வருகிறது.
டூயல்-சிம் (நானோ) Redmi Note 8 Pro, 19.5:9 aspect ratio மற்றும் முன்புறம் மற்றும் பின்புறம் Corning Gorilla Glass 5 protection உடன் 6.53-inch full-HD+ (1080x2340 pixels) டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் waterdrop-style notch-ஐ மேலே கொண்டுள்ளது. மேலும், 20-megapixel முன் கேமராவையும் கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் octa-core MediaTek Helio G90T SoC-யால் இயக்கப்படுகிறது. இது கிராஃபிக் விளையாட்டுகளை விளையாடும்போது, வெப்பத்தைக் குறைக்க திரவ குளிரூட்டும் தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது. ஹூட்டின் கீழ், 18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4,500mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் Android 9 Pie அடிப்படையிலான MIUI 10-ல் இயங்குகிறது.
கேமராவைப் பொறுத்தவரை, போனின் குவாட் கேமரா அமைப்பில் f/1.89 aperture உடன் 64-megapixel முதன்மை கேமரா இருக்கிறது. இதில், f/2.2 aperture உடன் 8-megapixel ultra-wide-angle கேமரா, 2-megapixel macro மற்றும் 2-megapixel depth கேமராவும் இதில் இணைக்கப்பட்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Mushrooms Could Power Future Eco-Friendly Computers, Study Suggests
MIT Physicists Discover a Way to See Inside Atoms Using Tabletop Molecular Technique
Saturn’s Icy Moon Enceladus Organic Molecules May Have Been Fromed by Cosmic Rays, Scientists Find
Researchers Use AI to Predict Storm Surges Faster and More Accurately