Redmi Note 8 இப்போது புதிய MIUI அப்டேட்டைப் பெறுவதாக கூறப்படுகிறது. இந்த அப்டேட்டின் பதிப்பு 11.0.4 ஆக மாற்றுகிறது. மேலும், இது மார்ச் 2020 ஆண்ட்ராய்டு பாதுகாப்பு இணைப்புடன் வருகிறது. இந்த அப்டேட்டில் கூடுதல் சிறப்பம்சமாக, system stability-ஐ மேம்படுத்துகிறது. இதன் App Lock அம்சம் அனைத்து செயலிகளையும் (Apps) பாதுகாக்க உதவுகிறது.
இந்த அப்டேட் ஏறக்குறைய 434MB அளவில் கிடைக்கிறது. இதை, கூகுள் பிளே ஸ்டோருக்கு சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், ரெட்மி நோட் 8 அப்டேட் ‘MIUI V11.0.4.0.PCOINXM'-க்கு மாறுகிறது. நீங்கள் Redmi Note 8 (Review) வைத்திருந்தால், உங்கள் போனில் அப்டேட் பக்கத்திற்கு சென்று மேனுவலாக சரிபார்க்கலாம்.
இந்தியாவில், ரெட்மி நோட் 8 கடந்த ஆண்டு October மாதம் வெளியானது. இந்த போன் 48 மெகாபிக்சல் முதன்மை கேமராவுடன் குவாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 SoC-யில் இயங்குகிறது. மேலும், 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி வரை இன்பில்ட் ஸ்டோரேஜுடன் வருகிறது. இந்த போன் 4,000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது. அதனுடன், 18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு இருக்கிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்