Redmi Note 8 விரைவில் ஒரு புதிய டாப்-எண்ட் மாடலைக் காணும் என்று TENAA பட்டியல் தெரிவிக்கிறது.
Redmi Note 8 கடந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது
Redmi Note 8-ன் 8GB RAM வேரியண்ட் TENAA-வில் காணப்பட்டது. Redmi Note 8 கடந்த ஆண்டு ஆகஸ்டில் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டதோடு, இரண்டு மாதங்களுக்குப் பிறகு இந்தியாவில் கிடைத்தது. அந்த நேரத்தில், இந்த போன் 4GB RAM மற்றும் 6GB RAM ஆப்ஷன்களில் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டது.
மாடல் எண் M1908C3JE உடன் Redmi Note 8 TENAA பட்டியல் 8GB RAM மற்றும் 256GB ஸ்டோரேஜைக் காட்டுகிறது. Redmi Note 8 விரைவில் 8GB + 256GB மாடலைப் பெறக்கூடும் என்று அறிவுறுத்துகிறது. தற்போது, டாப்-எண்ட் மாடல் 6GB RAM + 128GB வேரியண்டாகும், இதன் விலை ரூ. 12.999 ஆகும். 8GB + 256GB மாடல் தற்போதைய ஹை-எண்ட் மாடலை விட மிகக் குறைந்த விலையில் இருக்க வேண்டும். 8GB RAM ஆப்ஷனை எப்போது அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது என்பது குறித்து Xiaomi-யிடமிருந்து எந்த வார்த்தையும் இல்லை. இது TENAA-வில் காணப்பட்டதால், முதலில் சீனாவில் தொடங்கப்படும்.
இந்தியாவில் Redmi Note 8-ன் 4GB + 64GB மாடலின் விலை ரூ. 9,999-யாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்டுள்ள படி, 6GB + 128GB மாடல் ரூ. 12,999-யாக விலையிடப்பட்டுள்ளது. இந்த போன் Amazon India, Mi.com மற்றும் Mi Home Stores-ல் Moonlight White, Neptune Blue மற்றும் Space Black ஆப்ஷன்களில் கிடைக்கும்.
விவரக்குறிப்புகளை பொறுத்தவரை, Redmi Note 8-ல் 6.39-inch full-HD+ (1080x2280 pixels) டிஸ்பிளே உள்ளது. இது 6GB RAM உடன் இணைக்கப்பட்டு, Qualcomm Snapdragon 665 SoC-யால் இயக்கப்படுகிறது. இது 128GB ஸ்டோரேஜையும் வழங்குகிறது. Redmi 4 ரியர் கேமராக்களை Redmi Note 8-ல் சேர்த்துள்ளது – f/1.79 aperture உடன் 48-megapixel primary shooter, 20-degree field of view மற்றும் f/2.2 aperture உடன் 8-megapixel wide-angle shooter மற்றும் f/2.4 aperture உடன் இரண்டு 2-megapixel கேமராக்கள் (macro மற்றும் depth) ஆகும். இதில் f/2.0 aperture உடன் 13-megapixel செல்ஃபி கேமராவும் உள்ளது. கூடுதலாக, Redmi Note 8-ல் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4,000mAh பேட்டரி, USB Type-C port, 3.5mm audio jack மற்றும் IR blaster ஆகியவை அடங்கும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Kepler and TESS Discoveries Help Astronomers Confirm Over 6,000 Exoplanets Orbiting Other Stars
Rocket Lab Clears Final Tests for New 'Hungry Hippo' Fairing on Neutron Rocket