இந்தியாவில் முதன்முறையாக விற்பனையைத் துவங்கிய ரெட்மி 'நோட் 7 ப்ரோ'!

இந்தியாவில் ரூ.13,999 முதல் ரெட்மி நோட் 7 ப்ரோ போன் விற்பனைக்கு வெளியாக உள்ளது!

இந்தியாவில் முதன்முறையாக விற்பனையைத் துவங்கிய ரெட்மி 'நோட் 7 ப்ரோ'!

ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் நெப்டியுன் ப்ளூ, நெப்யூலா ரெட் மற்றும் ஸ்பேஸ் பிளாக் போன்ற நிறங்களில் வெளியாகிறது

ஹைலைட்ஸ்
  • ரூ.13,999 முதல் ரெட்மி நோட் 7 ப்ரோ போன் விற்பனை செய்யப்படவுள்ளது.
  • ஏர்டல் மற்றும் ஜியோ நிறுவனங்களுடன் இணைந்து பல ஆஃபர்கள் அறிமுகம்!
  • ரூ.9,999 முதல் ரெட்மி நோட் 7 விற்பனை!
விளம்பரம்

இந்தியாவில் இன்று முதல் முறையாக ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியாகவுள்ளது. இந்தப் புதிய ரக ஸ்மார்ட்போன் ஃபிளிப்கார்ட், எம்ஐ.காம் மற்றும் எம்ஐ ஹோம் கடைகளில் விற்பனைக்கு வர உள்ளது.

இந்தியாவில் இரண்டு பின்புற கேமரா மற்றும் வாட்டர் டிராப் ஸ்டையில் நாட்ச் போன்ற அமைப்புகளைக் கொண்ட ரெட்மி நோட் 7 ப்ரோ, இம்மாத துவக்கத்தில் ரெட்மி நோட் 7 போனுடன் அறிமுகமானது.

ரெட்மி நோட் 7 ப்ரோ அறிமுக விலை மற்றும் ஆஃபர்கள்:

இந்தியாவில் தனது தயாரிப்பின் ஆரம்ப வகையான 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி சேமிப்பு வசதி கொண்ட ஸ்மார்ட்போனை ரூ.13,999க்கும் அதே போனின் மற்றோரு வகையான 6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதி தயாரிப்புக்கு ரூ.16,999க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் நெப்டியுன் ப்ளூ, நெப்யூலா ரெட் மற்றும் ஸ்பேஸ் பிளாக் போன்ற நிறங்களில் வெளியாகிறது. சியோமி நிறுவனம் சார்பில் வெளியான தகவல்படி, அந்நிறுவனம் சுமார் 200,000க்கும் மேற்பட்ட யுனிட்களை தனது முதல் சேலில் விற்பனை செய்ய முடிவெடுத்துள்ளது எனப்பட்டுள்ளது.

மேலும் அறிமுக ஆஃபர்களாக ஏர்டெல் நிறுவனம் சார்பில் 1,120 ஜிபி டேட்டா வழங்கப்பட உள்ளது. சியோமி நிறுவனம், ஜியோ நிறுவனத்துடன் இணைந்து தனது வாடிக்கையாளர்களுக்கு டபுள் டேட்டா ஆஃபர்களை வழங்க உள்ளது.

 

 

ரெட்மி நோட் 7 ப்ரோ அமைப்புகள்:

ரெட்மி நோட் 7 ப்ரோவுடன் வெளியான ரெட்மி நோட் 7 போனில் இடம்பெற்றிருந்த 'ஆஃரா டிசைனை' பெற்றுள்ளது. 6.3 இஞ்ச் ஃபுல் ஹெச்டி திரை, வாட்டர் ட்ராப் வகை நாட்ச் என அனைத்து முன்னணி  அமைப்புகளையும் ரெட்மி ஸ்மார்ட்போன் பொற்றுள்ளது.

மேலும் 11nm ஆக்டா-கோர் குவால்கம் ஸ்னாப்டிராகன் 675 பிராசஸரால் இந்த ரெட்மி நோட் 7 ப்ரோ பவரூட்டப்பட்டுள்ளது. இதர வசதிகளாக (4ஜிபி/ 6ஜிபி) ரேம் வகைகள் மற்றும் 6ஜிபி / 128ஜிபி சேமிப்பு வசதிகளை இந்த ஸ்மார்ட்போன் பெற்றுள்ளது. கேமரா சென்சார்களைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போனில் 48 மெகா பிக்சல் முதல் நிலை சென்சாரும், 5 மெகா பிக்சல் இரண்டாம் நிலை டெப்த் சென்சாரும் உள்ளன.

செயற்கை நுண்ணறிவு இந்த ஸ்மார்ட்போனில் அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளது. செல்ஃபி வசதிக்காக முன்புறத்தில் 13  மெகா பிக்சல் ஃபிரன்ட் ஷூட்டரும், 4கே சப்போர்ட் உடைய வீடியோ பதிவு செய்யும் கேமராவும் உள்ளன. மேலும் இந்த ரெட்மி நோட் 7 ப்ரோ ஆண்ட்ராய்டு பைய் போன்ற எம்ஐயூஐ 10 மென்பொருளில் இயங்குவதால் வேகமாக செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Variants
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Premium design
  • Good cameras
  • Long battery life
  • Smooth performance
  • Bad
  • Heats up quickly
  • Bloatware and ads in MIUI
  • Shared slot for second SIM/ microSD card
Display 6.30-inch
Processor Qualcomm Snapdragon 675
Front Camera 13-megapixel
Rear Camera 48-megapixel + 5-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 4000mAh
OS Android Pie
Resolution 1080x2340 pixels
Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Gadgets 360 Staff The resident bot. If you email me, a human will respond. மேலும்
பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
  1. அவசரம்! Realme GT 7, GT 7T போன்கள் ₹28,999-ல இருந்து ஆரம்பம் – இந்த பெஸ்ட் டீலை மிஸ் பண்ணாதீங்க!
  2. அறிமுகமானது Motorola Edge 60: 50MP கேமரா, 5500mAh பேட்டரி, MIL STD-810H - முழு விபரம் இதோ!
  3. Oppo K13x 5G: ₹15,999-க்குள்ளே லான்ச்! பிளாட் டிஸ்ப்ளே, 6000mAh பேட்டரி - கசிந்த முழு விபரம்!
  4. அறிமுகமாகிறது Vivo X Fold 5: -20°C குளிர்லையும் அசால்ட்டா இயங்கும்! அசத்தலான டிசைன் வெளியானது!
  5. அறிமுகமானது Huawei Band 10: 100 வொர்க்அவுட் மோட்ஸ், ஸ்போ2 கண்காணிப்பு - முழு விபரம் இதோ!
  6. அறிமுகமாகிறது Tecno Pova 7 Neo 4G: MediaTek Helio G100, 120Hz டிஸ்ப்ளே - முழு விபரம் இதோ!
  7. அறிமுகமானது OnePlus Pad 3: விலை, அம்சங்கள், பவர்ஃபுல் ப்ராசஸர் – முழு விபரம் இதோ!
  8. அறிமுகமானது OnePlus 13s: கலர் ஆப்ஷன்கள், அம்சங்கள், விலை - முழு விபரம் இதோ!
  9. Vi, Vivo அசத்தல் கூட்டணி: Vivo V50e உடன் 5G, OTT சலுகைகள்! முழு விபரம் இதோ!
  10. 6300mAh பேட்டரி, Snapdragon 7 Gen 4 உடன் Realme 15 5G: பக்கா பட்ஜெட் 5G போன்!
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »