ரெட்மி நோட் 5 ப்ரோவின் வாரிசான ரெட்மி நோட் 6 ப்ரோ இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. புதிய சியோமி போனின் டிசைன் மற்றும் கேமராவில் ஒரு சில மாறுதல்கள் மட்டும் செய்யப்பட்டுள்ளன. ரெட்மி நோட் 6 ப்ரோ டூயல் செல்ஃபி கேமரா செட்டப் உள்ளது.நாட்சுடன் கூடிய 19:9 என்ற வீதத்திலான டிஸ்பிளே, குவால்கம் குயிக் சார்ஜ் 3.0 சப்போர்ட் மற்றும் கேமரா செயல்பாட்டிற்கு ஏஐ-யைக் கொண்டுள்ளது. இதன் முதல் சேல் ஃபிளிப்கார்ட், Mi.com மற்றும் Mi ஹோமில் நேற்று மதியம் விற்பனை செய்யப்பட்டது.
இந்தியாவில் சியோமி, ரெட்மி நோட் 6 ப்ரோவின் 4ஜிபி ரேம்/ 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மாடலின் விலை ரூ.13,999 ஆகும். 6ஜிபி ரேம்/ 64ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை 15,999 ஆகும். பிளிப்கார்ட்,Mi.com மற்றும் எம்.ஐ ஹோம் ஸ்டோரில் பிளாக் ஃப்ரைடே சேலின் போது இந்த இரு வேரியண்ட்களும் ரூ.12,999 மற்றும் 14,999-க்கு விற்பனை செய்யப்பட்டது. அது மட்டுமில்லாமல் ரெட்மி நோட் 6 ப்ரோவினை ஹெச்.டி.எஃப்.சி கிரேடிட்/டெபிட் கார்ட் பயன்படுத்தி வாங்குபவர்களுக்கு ரூ.500 உடனடி தள்ளுபடியாக வழங்கப்பட்டது.
ரெட்மி நோட் 5 ப்ரோவின் (ரூ.13,294) வாரிசு ரெட்மி நோட் 6 ப்ரோவாகும் இதில் ஒரு சில அப்கிரேட் மட்டும் செய்யப்பட்டுள்ளது. அதில், முன்பக்கம் இருக்கக்கூடிய டூயல் கேமரா, பெரிய டிஸ்பிளே, பி2ஐ நீரை விரட்டும் நானோ தொழில்நுட்பம் MIUI 10 ஆகும்.
சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோவில் 6.26 இன்ச் ஃபுல் ஹெச்டி+ஐபிஎஸ் எல்.இ.டி ஸ்கீரின் டிஸ்பிளே 1080*2280 பிக்சலைக் கொண்டது. இதன் பிரகாசம் 500 என்.ஐ.டிஎஸ் ஆகும். 19:9 என்ற வீதத்தில் டிஸ்பிளே, கொரில்லா கிளாஸ் பாதுகாப்பினைக் கொண்டுள்ளது.
முன்பக்கம் இருக்கும் கேமிரா 20 மெகா பிக்சலுடன் பிரைமரி சென்சாரைக் கொண்டுள்ளது மற்றும் 2 மெகா பிக்சல் கொண்ட செகண்டரி சென்சாருடன் 4இன் 1 சூப்பர் பிக்சல் மற்றும் ஏஐ ஃபேஸ் அனலாக் வசதியைக் கொண்டுள்ளது. பின்புறத்தில் 12 மெகா பிக்சல் பிரைமரி சென்சார் மற்றும் 5 மெகா பிக்சல் செகண்டரி சென்சாருடன் 1.4 மைக்ரான் பிக்சல் மற்றும் ஏஐ 2.0-வைக் கொண்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்