ரெட்மி நோட் 5 ப்ரோ விற்பனை இந்தியாவில் தொடக்கம்

ரெட்மி நோட் 5 ப்ரோ திறன்பேசியை இனி எல்லா நாளும் சாதாரணமாக ஆர்டர் செய்து வாங்கலாம்

ரெட்மி நோட் 5 ப்ரோ விற்பனை இந்தியாவில் தொடக்கம்

ரெட்மி நோட் 5 ப்ரோவுக்கு இந்தியாவில் 14,999 ரூபாய் என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஹைலைட்ஸ்
  • வாராந்திர ஃப்ளாஷ் சேலை அடுத்து சாதாரண விற்பனையில் அறிமுகம்.
  • 4ஜிபி ரேம், 6 ஜிபி ரேம் என இரு மாடல்களில் கிடைக்கிறது.
  • 5.99” முழு எச்டி டிஸ்பிளே, ஸ்னாப்டிராகன் 636 SoC, 4000mAh பேட்டரி.
விளம்பரம்

கடந்த ஆறு மாதங்களாக வாராந்திர ஃப்ளாஷ் சேல்களில் மட்டுமே வாடிக்கையாளர்கள் போட்டி போட்டு வாங்கிக்கொண்டிருந்த ரெட்மி நோட் 5 ப்ரோ திறன்பேசியை இனி எல்லா நாளும் சாதாரணமாக ஆர்டர் செய்து வாங்கலாம்.

4ஜிபி ரேம், 6ஜிபி ரேம் என இருமாதிரிகளில் கிடைக்கும் இப்போன் ஃப்ளிப்கார்ட் தளத்திலும், MI.com தளத்திலும் கிடைக்கும். கருப்பு, நீலம், தங்கம், ரோஸ் கோல்ட் என நான்கு வண்ணங்களில் இப்போன் கிடைக்கும். ஃப்ளிப்கார்ட்டில் 4ஜிபி மாடலில் இந்நான்கு வண்ணங்களும் கிடைக்கும் எனினும் 6ஜிபி மாடலில் தற்போதைக்கு நீல நிறம் மட்டுமே இருப்பு உள்ளது.

Redmi Note 5 Pro – விலை, சலுகைகள், திறன்குறிப்பீட்டு விவரங்கள்:

இந்தியாவில் 4ஜிபி ரேம் மாடலின் விலை 14,999 ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 6 ஜிபி மாடலின் விலை 16,999 ரூபாய் ஆகும். 4ஜிபி மாடலின் விலை முன்பு 13,999 ஆக இருந்தது. 2018 நிதிநிலை அறிக்கையின் பின்னர் இதில் ஆயிரம் ரூபாய் கூடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

2200 ரூபாய் கேஷ்பேக், ஜியோ நெட்வர்க்கில் 4.5 டிபி கூடுதல் டேட்டா, ஹங்காமா மியூசிக்கில் மூன்று மாத இலவச சந்தா என ஏராளமான அறிமுகச்சலுகைகள் இதனுடன் கிடைக்கின்றன. ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டு மூலம் வாங்கினால் 5% கழிவும் உள்ளது.

டூயல் சிம், நூகட் MIUI 9, 5.99” முழு எச்டி டிஸ்பிளே (1080*2160), 18:9 உயர அகலத் தகவு, 450-nit ப்ரைட்னஸ், ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 636SoC ஆகிய அம்சங்களை இப்போன் கொண்டுள்ளது. இரட்டை பின்புற கேமரா (12 mp, f/2.2 & 5mp, f/2.0). முன்புறம் 20mp கேமராவையும் எல்இடி ஃப்ளாஷையும் கொண்டுள்ளது.

மெமரியைப் பொருத்தவரை 64 ஜிபி வரை கிடைக்கிறது. தேவைப்பட்டால் மெமரி கார்டு மூலம் 128 ஜிபி வரை இதனை நீட்டித்துக்கொள்ள முடியும். 4ஜி VoLTE, வைபை 802.11 b/g/n, ப்ளூடூத், 3.55மிமீ இயர்போன், மைக்ரோ யூஎஸ்பி ஆகிய கனெக்விட்டி வசதிகள் உள்ளன. அனைத்துக்கும் மேல் 5V/2A ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் கூடிய 4000mAh பேட்டரியினை ரெட்மி நோட் 5 ப்ரோ கொண்டுள்ளது. இதன் அளவுக்குறிப்பு: 158*75.4*8.05மிமீ ஆகும்.
 

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Gadgets 360 Staff The resident bot. If you email me, a human will respond. மேலும்
பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
  1. அவசரம்! Realme GT 7, GT 7T போன்கள் ₹28,999-ல இருந்து ஆரம்பம் – இந்த பெஸ்ட் டீலை மிஸ் பண்ணாதீங்க!
  2. அறிமுகமானது Motorola Edge 60: 50MP கேமரா, 5500mAh பேட்டரி, MIL STD-810H - முழு விபரம் இதோ!
  3. Oppo K13x 5G: ₹15,999-க்குள்ளே லான்ச்! பிளாட் டிஸ்ப்ளே, 6000mAh பேட்டரி - கசிந்த முழு விபரம்!
  4. அறிமுகமாகிறது Vivo X Fold 5: -20°C குளிர்லையும் அசால்ட்டா இயங்கும்! அசத்தலான டிசைன் வெளியானது!
  5. அறிமுகமானது Huawei Band 10: 100 வொர்க்அவுட் மோட்ஸ், ஸ்போ2 கண்காணிப்பு - முழு விபரம் இதோ!
  6. அறிமுகமாகிறது Tecno Pova 7 Neo 4G: MediaTek Helio G100, 120Hz டிஸ்ப்ளே - முழு விபரம் இதோ!
  7. அறிமுகமானது OnePlus Pad 3: விலை, அம்சங்கள், பவர்ஃபுல் ப்ராசஸர் – முழு விபரம் இதோ!
  8. அறிமுகமானது OnePlus 13s: கலர் ஆப்ஷன்கள், அம்சங்கள், விலை - முழு விபரம் இதோ!
  9. Vi, Vivo அசத்தல் கூட்டணி: Vivo V50e உடன் 5G, OTT சலுகைகள்! முழு விபரம் இதோ!
  10. 6300mAh பேட்டரி, Snapdragon 7 Gen 4 உடன் Realme 15 5G: பக்கா பட்ஜெட் 5G போன்!
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »