Redmi K90 Ultra ஸ்மார்ட்போனின் முக்கிய விவரங்கள் லீக் ஆகியுள்ளன
Photo Credit: Xiaomi
Redmi K90 Ultra 8,000mAh பேட்டரி, 165Hz டிஸ்ப்ளே மற்றும் Dimensity 9500 Plus சிப்செட் உடன் வரலாம்
Redmi K90 மற்றும் K90 Pro Max இப்போதான் லான்ச் ஆச்சு. ஆனா, இப்போவே அதோட அடுத்த மாஸ் மாடலான Redmi K90 Ultra பத்தின ஹாட் லீக்ஸ் வந்திருக்கு! இதுதான் அடுத்த வருஷத்தோட Performance-Focused ஃபிளாக்ஷிப் போனா இருக்கும்னு சொல்லலாம். இந்த போன்ல டிஸ்பிளேல பெரிய அப்டேட் இருக்கு! இதுல 6.8-இன்ச் LTPS OLED Display இருக்கும். ரெசல்யூஷன் 1.5K தான். ஆனா, ரெஃப்ரெஷ் ரேட் 165Hz இருக்கும்னு சொல்லியிருக்காங்க! இவ்வளவு பெரிய ரெஃப்ரெஷ் ரேட் கெய்மிங் மற்றும் யூஸர் அனுபவத்தை ரொம்பவே ஸ்மூத்தா வச்சிருக்கும். ஸ்கிரீன்ல Rounded Corners இருக்கும்.
இந்த போனோட இன்னொரு பெரிய ஹைலைட் பேட்டரி தான். இதுல பிரம்மாண்டமான சுமார் 8,000mAh Battery இருக்கலாம்னு எதிர்பார்க்கப்படுது! இது K90 Pro Max மற்றும் முந்தைய Ultra மாடல்களை விட ரொம்பவே பெரிய பேட்டரி. 8000mAh Battery இருந்தா, ஹெவி கெய்மிங் பண்ணாலும் பேட்டரி லைஃப் பத்தி கவலைப்பட வேண்டியதில்லை. Redmi K90 Ultra மாடல் MediaTek Dimensity 9 Series சிப்செட் மூலம் இயக்கப்படலாம்னு லீக் ஆகியிருக்கு. அதுவும் அடுத்த வருஷம் லான்ச் ஆகப்போற Dimensity 9500 Plus சிப்செட்டா இருக்க அதிக வாய்ப்பிருக்கு. Performance-ஐ மேலும் மேம்படுத்த, இதுல பிரத்யேக High Frame Rate Software Layer கூட இருக்கும்னு சொல்லியிருக்காங்க.
● Metal Frame: போன்ல Metal Middle Frame பயன்படுத்தப்பட்டிருக்கு. இது போனின் Durability-ஐ அதிகரிக்கும்.
● Water Protection: சமீபத்திய பிரீமியம் மாடல்கள்ல இருக்குற மாதிரி, அதிக Water Protection ரேட்டிங் (IP ரேட்டிங்) இருக்கலாம்னு எதிர்பார்க்கப்படுது.
● Fingerprint Sensor: Ultrasonic In-Display Fingerprint Scanner-ம், மேம்படுத்தப்பட்ட ஆடியோ சிஸ்டமும் இருக்கும்னு சொல்லியிருக்காங்க.
Redmi K90 Ultra இப்போதைக்கு சைனாவுலதான் லீக் ஆகியிருக்கு. இது போன K80 Ultra மாடலை போலவே, அடுத்த வருஷம், அதாவது Mid-2026-ல தான் லான்ச் ஆக வாய்ப்பிருக்கு. ஒருவேளை, இந்த போனோட ஒரு மாடிஃபைட் வெர்ஷன் உலகளவில் Xiaomi ஃபிளாக்ஷிப்பா கூட வரலாம். மொத்தத்துல, Redmi K90 Ultra 165Hz Display, 8000mAh Battery, மற்றும் Dimensity 9500 Plus சிப்செட்-ஓட ஒரு பக்கா Performance-Focused போனா வரப்போகுது. இந்த Redmi K90 Ultra-ன் 165Hz Display மற்றும் 8000mAh Battery காம்பினேஷன் உங்களுக்கு பிடிச்சிருக்கா? இந்த போனை வாங்க நீங்க அவ்வளவு நாள் காத்திருப்பீங்களா? கமெண்ட்ல சொல்லுங்க.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Honor Robot Phone With Gimbal Camera Arm Spotted in Live Images Ahead of MWC 2026