ரெட்மி கே 30 புரோ அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. ஷாவ்மி துணை பிராண்டிலிருந்து புதிய பட்ஜெட் போனானது குவால்காமின் ஸ்னாப்டிராகன் 865 SoC, மிகவும் திறமையான எல்பிடிடிஆர் 5 ரேம், 33W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவு போன்ற சிறந்த அம்சங்களைக் கொண்டுள்ளது. கூடுதலாக, நிறுவனம் ரெட்மி கே 30 ப்ரோ ஜூம் பதிப்பையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இரண்டு போன்களிலும் ஒரு குவாட் ரியர் கேமரா அமைப்பு ஒரு வட்ட கேமரா தொகுதி மற்றும் பாப்-அப் செல்பி கேமராவைக் கொண்டுள்ளன.
ரெட்மி கே 30 ப்ரோ அடிப்படை 6 ஜிபி + 128 ஜிபி வேரியண்டின் விலை சிஎன்ஒய் 2,999 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.32,500)-ல் தொடங்குகிறது, அதே நேரத்தில் 8 ஜிபி + 128 ஜிபி மாடலின் விலை சிஎன்ஒய் 3,399 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.36,000)-யாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரெட்மி கே 30 ப்ரோவின் டாப்-எண்ட் 8 ஜிபி + 256 ஜிபி பதிப்பு சிஎன்ஒய் 3,699 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.40,000) ஆகும்.
Redmi K30 Pro Zoom Edition-ஐப் பொறுத்தவரை, இது 8 ஜிபி + 128 ஜிபி மாடல் சிஎன்ஒய் 3,799 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.41,000) விலையைக் கொண்டுள்ளது, 8 ஜிபி + 256 ஜிபி பதிப்பின் விலை சிஎன்ஒய் 3,999 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.43,000) ஆகும்.
ரெட்மி கே 30 ப்ரோ மற்றும் ரெட்மி கே 30 ப்ரோ ஜூம் பதிப்பு இரண்டும் மூன்லைட் ஒயிட், ஸ்கை ப்ளூ, ஸ்டார் ரிங் பர்பில் மற்றும் ஸ்பேஸ் கிரே கலர் ஆப்ஷன்களில் வருகின்றன. இது மார்ச் 27 முதல் சீனாவில் விற்பனைக்கு வரும். இருப்பினும், தற்போது சர்வதேச அளவில் கிடைப்பது குறித்து எந்த தகவலும் இல்லை.
டூயல்-சிம் (நானோ) Redmi K30 Pro மற்றும் ரெட்மி கே 30 ப்ரோ ஜூம் பதிப்பு, MIUI 11 உடன் ஆண்ட்ராய்டு 10-ல் இயக்கும். அவை 6.67 இன்ச் ஃபுல்-எச்டி + (1080 x 2400) எச்டிஆர் 10 + அமோலேட் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளன. இரண்டு போன்களும் ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 SoC-யால் இயக்கப்படுகின்றன, அவை 8 ஜிபி வரை எல்பிடிடிஆர் 5 ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், ரெட்மி கே 30 ப்ரோவின் 6 ஜிபி + 128 ஜிபி வேரியண்ட்டில் எல்பிடிடிஆர் 4 எக்ஸ் ரேம் மற்றும் யுஎஃப்எஸ் 3.0 ஸ்டோரேஜ் உள்ளது.
ரெட்மி கே 30 ப்ரோவின் குவாட் ரியர் கேமரா அமைப்பு 64 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ் 686 சென்சார் மூலம் OIS (ஆப்டிகல் பட உறுதிப்படுத்தல்) ஆதரவுடன் உள்ளது. இதற்கு 5 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா, 13 மெகாபிக்சல் வைட்-ஆங்கிள் ஸ்னாப்பர், 123 டிகிரி பார்வைக் களம் மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் ஆகியவை உதவுகின்றன.
ரெட்மி கே 30 ப்ரோ ஜூம் பதிப்பைப் பொறுத்தவரை, இது 64 மெகாபிக்சல் பிரதான கேமரா, 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் மற்றும் 13 மெகாபிக்சல் வைட்-அங்கிள் ஸ்னாப்பர் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இருப்பினும், இது 8 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ லென்ஸுக்கு ஆதரவாக மேக்ரோ கேமராவை மாற்றுகிறது, இது 3 எக்ஸ் ஆப்டிகல் ஜூம் மற்றும் 30 எக்ஸ் டிஜிட்டல் ஜூம் ஆகியவற்றை வழங்குகிறது. இரண்டு போன்களிலும் 20 மெகாபிக்சல் பாப்-அப் முன் கேமரா மூலம் செல்ஃபிகள் கையாளப்படுகின்றன.
Xiaomi துணை பிராண்டிலிருந்து இரண்டு புதிய போன்களிலும் 256 ஜிபி வரை யுஎஃப்எஸ் 3.1 ஸ்டோரேஜ் உள்ளது, ஆனால் இது விரிவாக்க முடியாதது. ரெட்மி கே 30 ப்ரோ மற்றும் ரெட்மி கே 30 ப்ரோ ஜூம் பதிப்பில், 33W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 4,700 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இணைப்பு விருப்பங்களில் இரட்டை-முறை 5G (NSA+SA), Wi-Fi 6, NFC, USB Type-C port, NFC மற்றும் 3.5mm headphone jack மூலம் கையாளப்படுகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்