Photo Credit: Weibo
ரெட்மி கே 30 ப்ரோ இந்த மாத இறுதியில் சீனாவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் வெளியீட்டு தேதிக்கு முன்னதாக, அதன் விலை வெளியாகியுள்ளது. ரெட்மி நிர்வாகியை மேற்கோள் காட்டிய அறிக்கையின்படி, இது CNY 3,000 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.31,900)-க்கு மேல் இருக்கும். வெய்போவின் பயனர் கணக்கின் கேள்விக்கு நிர்வாகி பதிலளித்ததாக கூறப்படுகிறது. ரெட்மியின் பொது மேலாளர் லு வெய்பிங் (Lu Weibing) ரெட்மி கே 30 ப்ரோ CNY 3,000-CNY 3,500 விலை வரம்பைக் குறிப்பதாக முந்தைய அறிக்கைகளுக்கு ஏற்ப கூறப்படுகிறது. தனித்தனியாக, ரெட்மி கே 30 ப்ரோ வெளியீட்டு நிகழ்வு மற்ற ஸ்மார்ட்போனை விட பிரம்மாண்டமாக தொடங்கப்படும் என்று வெய்பிங் கூறியதாகவும் கூறப்படுகிறது.
மைட்ரைவர்ஸின் ஒரு அறிக்கை, ரெட்மியின் தயாரிப்பு இயக்குனர் வாங் டெங் (Wang Teng) ஒரு வெய்போ பயனருக்கு அளித்த பதிலில், Redmi K30 Pro என்றால் CNY 3,000 பட்ஜெட்டுடன் வாங்க முடியுமா என்று கேட்டார். எனவே. ரெட்மி கே 30 ப்ரோ CNY 3,000-க்கு மேல் இருக்கும் என்று தெரியவந்தது.
தனித்தனியாக, பொது மேலாளர் லு வெய்பிங் வியாழக்கிழமை ரெட்மி கே 30 புரோ அறிமுகத்தின் போது ஸ்மார்ட்போன்களை விட வேறு ஏதாவது ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரிவித்தார். ஒரு அறிக்கையின்படி, வெய்பிங் தனது வீபோ கணக்கில் அப்டேட்டை வெளியிட்டார். இருப்பினும், நிர்வாகியின் வெய்போ கணக்கில் இந்த பதிவு பிற்பகுதியில் காணப்படவில்லை.
Redmi கே 30 ப்ரோ இந்த மாத இறுதியில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறத. இதை இந்த வார தொடக்கத்தில் வெய்பிங் உறுதிப்படுத்தியது. ரெட்மி கே 30 ப்ரோ ஹவாய் நிறுவனத்தின் பி 40 மற்றும் ஹானரின் 30 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கு இடையில் அறிமுகப்படுத்தப்படும் என்று அவர் கூறியிருந்தார்.
ரெட்மி கே 30 ப்ரோ குவால்காமின் முதன்மை சிப்செட், ஸ்னாப்டிராகன் 865 SoC, 5G ஆதரவு மற்றும் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4,700mAh battery ஆகியவற்றுடன் வருவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த போன் அதன் கேமரா யூனிட்டில் 64 மெகாபிக்சல் சோனி IMX686 லென்ஸுடன் வெளிவரவுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்