Redmi K30 டிசம்பர் 10-ஆம் தேதி AG frost glass back panel உடன் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
Photo Credit: Weibo
Redmi K30, hole-punch அமைப்பின் ஒருன் பகுதியாக, இரட்டை செல்பி கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும்
Redmi K30 கேமரா விவரக்குறிப்புகள் அதன் அதிகாரப்பூர்வ அறிமுகத்திற்கு சில நாட்களுக்கு முன்னரே, ஆன்லைனில் கசிந்துள்ளன. புதிய ரெட்மி போன் 64-megapixel Sony IMX686 முதன்மை சென்சார் உடன் அறிமுகமாகும். இது ஜப்பானிய தொழில்நுட்ப நிறுவனத்தால் அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. Redmi K30 ஏற்கனவே குவாட் ரியர் கேமரா அமைப்புடன் வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. கேமரா கசிவைத் தவிர, Redmi K30-யின் திரை அளவை வெளிப்படுத்தும் டீஸர் படத்தை வெய்போவில், ஜியோமி வெளியிட்டுள்ளது.
Redmi K30-யின் கேமரா விவரக்குறிப்புகளை வெய்போவில் ஒரு டிப்ஸ்டர் பகிர்ந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் f/1.89 lens உடன் 64megapixel Sony IMX686 முதன்மை சென்சாரைக் கொண்டுள்ளது என்று கூறப்படுகிறது. புதிய சென்சார் 1/1.73-inch அளவு கொண்டதாகவும் கூறப்படுகிறது. ஜியோமி சமீபத்தில் Redmi K30-யில் "உலகின் முதல் உயர் தெளிவுத்திறன் கொண்ட பட சென்சார்" இருப்பதை கிண்டல் செய்தத. இது இறுதியில் Sony IMX686 ஆக வரக்கூடும்.
மேலும், Redmi K30 கேமராவில் 8-megapixel secondary shooter, 5-megapixel கேமரா மற்றும் 2-megapixel கேமரா ஆகியவை இருக்கலாம்.
இந்த வார தொடக்கத்தில் Redmi K30-ஐக் காட்டும் அதிகாரப்பூர்வ ரெண்டர், Redmi K30 செங்குத்தாக சீரமைக்கப்பட்ட குவாட் ரியர் கேமரா அமைப்புடன் வரும் என்பதை உறுதிப்படுத்தியது, இது ஒரு மோதிர வடிவமைப்பால் சூழப்படும்.
ஜியோமி தொடர்ந்து Redmi K30 டீஸர்களை வெளியிட்டு வருகிறது, இந்த முறை, அதன் திரை அளவை உயர்த்திக் காட்டும் படம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 6.67-inch டிஸ்ப்ளே மற்றும் hole-punch டிசைனுடன் 4.38 mm அளவுடன் வரும் என்று டீஸர் காட்டுகிறது. கட்அவுட்டின் அதிகாரப்பூர்வ டீஸரில் காணப்படுவது போல் இரட்டை செல்ஃபி கேமராவும் அடங்கும்.
![]()
Redmi K30, 4.38mm அளவில், hole-punch வடிவமைப்புடன் வருகிறது
Photo Credit: Weibo
Redmi K30, பின்புறத்தில் AG உறைந்த கண்ணாடியுடன் வரும் என்பதையும் படம் காட்டுகிறது. OnePlus 7T போன்ற போன்களில் சமீப காலங்காலமாக இதேபோன்ற கண்ணாடி கவருடன் பார்த்தோம்.
ரெட்மி பொது மேலாளர் லு வெய்பிங் (Lu Weibing) ஒரு வெய்போ பதிவில், Redmi K30-ன் புதிய கண்ணாடி, உறுதியான பிடியை வழங்கும் என்று கூறினார்.
வெய்போவில் பின்வரும் பதிவின் மூலம் 2020-ஆம் ஆண்டில் ஸ்மார்ட்போன்களில் hole-punch டிஸ்பிளே வடிவமைப்பின் வளர்ந்து வரும் போக்குகளை வெயிபிங் கணித்துள்ளது. பாப்-அப் செல்பி கேமரா ஸ்மார்ட்போன்கள் அல்டிமேட் முழுத்திரை அனுபவத்தை அளிக்கும். அதே வேளையில், பாப்-அப் பொறிமுறையானது கட்டமைப்பிற்கு தடிமன் சேர்க்கிறது மற்றும் 5G ஆண்டெனாக்களை வைக்க பயன்படுத்தக்கூடிய இடத்தை ஆக்கிரமிக்கிறது. இது hole-punch வடிவமைப்பைப் போலல்லாமல், உயர் திரையில் இருந்து உடல் விகிதத்தையும் மெல்லிய கட்டமைப்பையும் வழங்க உதவுகிறது என்று கூறினார்.
Redmi K30 தொழில்துறையின் மிகச்சிறிய செல்பி கேமரா கட்அவுட்டை கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஒரு தனி டீஸர் படத்தில், வெய்போவின் அதிகாரப்பூர்வ ரெட்மி கணக்கு, 12-ஆண்டெனா வடிவமைப்பில் Redmi K30 வரும். இது அடுத்த தலைமுறை 5G நெட்வொர்க்குகளை ஆதரிக்க 4G போன்களுக்கு ஆண்டெனாக்களின் எண்ணிக்கையை விட 2.4 மடங்கு இருக்கும். புதிய ரெட்மி போன் dual-mode 5G இணைப்புடன் standalone (SA) மற்றும் non-standalone (NSA) நெட்வொர்க்குகளை ஆதரிக்கும் என்று முந்தைய அறிக்கைகளில் பார்த்தோம்.
Redmi K30 பேட்டரி திறனும் கிண்டல் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 30W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரவுடன் 4,500mAh பேட்டரியை கொண்டுவரும் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. Quick Charge மற்றும் USB Power Delivery (PD) ஆதரவும் உள்ளது.![]()
Redmi K30, 4,500mAh பேட்டரியை கொண்டுவருவதாக கிண்டல் செய்யப்படுகிறது
Photo Credit: Weibo
Redmi K30 டிசம்பர் 10-ஆம் தேதி Qualcomm Snapdragon 767 5G SoC உடன் அறிமுகமாகும். Hawaii, Maui-யில் நடைபெற்ற குவால்காம் ஸ்னாப்டிராகன் தொழில்நுட்ப உச்சி மாநாடு 2019-ன் (Qualcomm Snapdragon Tech Summit 2019) முதல் நாளில், புதிய ஸ்மார்ட்போனின் பிராசசர் விவரங்களை ஜியோமி அறிவித்தது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
ces_story_below_text
விளம்பரம்
விளம்பரம்
Salliyargal Now Streaming Online: Where to Watch Karunaas and Sathyadevi Starrer Online?
NASA’s Chandra Observatory Reveals 22 Years of Cosmic X-Ray Recordings
Space Gen: Chandrayaan Now Streaming on JioHotstar: What You Need to Know About Nakuul Mehta and Shriya Saran Starrer
NASA Evaluates Early Liftoff for SpaceX Crew-12 Following Rare ISS Medical Evacuation