Redmi K30 மற்றும் Redmi K30 Pro சரியான வெளியீட்டு தேதிகள் இன்னும் வெளியிடப்படவில்லை.
Redmi K30-யின் முன்னோடி Redmi K20, மே மாதம் சீனாவில் வெளியிடப்பட்டது
Redmi K30 இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகமாகும் என்று வதந்தி பரவியது. புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட Redmi K20-யின் தொடர்ச்சியாக அறிமுகமாகும். Redmi K30 தவிர, ஜியோமி அடுத்த ஆண்டு எப்போதாவது Redmi K30 Pro-வை கொண்டு வருவரும் கூறப்படுகிறது. Redmi K30 ஏற்கனவே 5 ஜி ஆதரவுடன் வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. pop-up செல்பி கேமரா கொண்ட Redmi K20 போலல்லாமல், Redmi K30, hole-punch டிஸ்ப்ளே வடிவமைப்புடன் வரும். இது நிறுவனத்தின் Infinity-O டிஸ்ப்ளேவை வெளிப்படுத்தும் Samsung Galaxy S10 சீரிஸைப் போலவே இருக்கும்.
Redmi K30 இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என்றும், அடுத்த ஆண்டு Redmi K30 Pro வரும் என்றும் டிப்ஸ்டர் சுதான்ஷு அம்போர் (Tipster Sudhanshu Ambhore) கூறியுள்ளார். இருப்பினும், சரியான வெளியீட்டு தேதிகள் இன்னும் வெளியிடப்படவில்லை. புதிய ரெட்மி தொலைபேசிகள் ஆரம்பத்தில் சீனாவில் அறிமுகமாகுமா அல்லது இந்தியா போன்ற சந்தையில் முதலில் அறிமுகம் செய்யப்படுமா என்பதும் தெளிவாக இல்லை.
ரெட்மி பொது மேலாளர் லு வெய்பிங் (Lu Weibing) ஆகஸ்டில் Redmi K30, 5 ஜி ஆதரவுடன் வரும் என்று தெரிவித்தார். இந்த ஆண்டு மே மாதம் Redmi K20 Pro-வுடன் இணைந்து சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட Redmi K20-ன் தொடர்ச்சியாக இந்த ஸ்மார்ட்போன் வரும்.
Redmi K30-யின் வடிவமைப்பை வெளிப்படுத்த, வெயிபோ கடந்த மாதம் இரண்டு டீஸர் படங்களையும் வெளியிட்டது. அந்த படங்களில் ஒன்று hole-punch டிஸ்பிளே வைக்கப்பட்டுள்ள இரட்டை செல்ஃபி கேமரா அமைப்பைக் கொண்ட தொலைபேசியைக் காட்டியது. மற்ற டீஸர் படம் 5 ஜி standalone மற்றும் non-standalone (SA/NSA) sub-6Hz நெட்வொர்க்குகளுக்கான ஆதரவை எடுத்துக்காட்டுகிறது.
செப்டம்பர் மாதம் IFA 2019-ல் Qualcomm, அடுத்த ஆண்டு இடைப்பட்ட ஸ்மார்ட்போன்களுக்கு 5 ஜி chips-களைக் கொண்டு வருவதாக அறிவித்தது. ஜியோமி தனது அடுத்த தலைமுறை Redmi K-சீரிஸ் ஸ்மார்ட்போனுக்கான Qualcomm உடனான கூட்டை தக்கவைத்துக்கொள்வதற்குப் பதிலாக, MediaTek தயாரித்த 5 ஜி-ஆதரவு SoC உடன் Redmi K30-ஐ அறிமுகப்படுத்த முடியும் என்று இது அறிவுறுத்துகிறது.
Helio M70 5 ஜி மோடத்தை இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவுக்கு கொண்டு வரும் என்று MediaTek ஏப்ரல் மாதத்தில் பரிந்துரைத்தது. மே மாதத்தில் நிறுவனம் தனது 5 ஜி-ready SoC-ஐ ARM Cortex-A77 செயலாக்க கோர்கள் மற்றும் Helio M70 மோடத்துடன் அடுத்த ஆண்டு வரவிருப்பதாக அறிவித்தது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Four More Shots Please Season 4 OTT Release: Where to Watch the Final Chapter of the Web Series
Nari Nari Naduma Murari OTT Release: Know Where to Watch the Telugu Comedy Entertainer
Engineers Turn Lobster Shells Into Robot Parts That Lift, Grip and Swim
Strongest Solar Flare of 2025 Sends High-Energy Radiation Rushing Toward Earth